,இந்நூலானது இலங்கை தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உதவியூடன் வெளியிடப்பட்டுள்ள போதும்இ இந்நூலின் உள்ளடக்கமானது தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை.
விரியத்துடிக்கும் மொட்டுக்கள் -(சிறுகதைகள்)-
உரிமை - எம்.எம். ஹிதாயதுள்ளாஹ் -
முதற்பதிப்பு- டிசம்பர் 2005 -
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியற் தரவூ
ஹிதாயதுள்ளாஹ்இ எம்.எம். விரியத்துடிக்கும் மொட்டுக்கள் ஃ எம்.எம். ஹிதாயத்துள்ளாஹ்.- பண்டாரகம : ஆசிரியர்இ 2006.- ப. 64@ ச.மீ. 21இ ஐளுடீN 955-99258-0-6 விலை : 100.00
i. 894.8113 டிடிசி 22 ii. தலைப்பு 1. தமிழ் இலக்கியம் - சிறுகதைகள் ஐளுடீN 955-99258-0-6
ஏசைநையவா வூhரனமைமரஅ ஆழனனரமமயட (ளுhழசவ ளுவழசநைள)
ஊழில சுiபாவ - ஆ.ஆ. Hனையலயவாரடடயா குசைளவ நுனவைழைn - னுநஉநஅடிநச 2005 ஊழஎநச னுநளபைn ரூ யூசவள - Hனையலயவாரடடயா ஊழஎநச ஊழஅpரவநசணைநன டீல - யூ.ஆ.டீயசயமயவாரடடயா (முயடஅரயெi) ஊழஅpரவநச வூலிiபெ - ளுயறஅலைய ஐடலயள (Pயயெனரசய) Pயபநள - 50+ஓஐஏ ஸ்ரீ 64 ரேஅடிநச ழக ஊழிநைள - 1000 Pசiவெநன டீல - யூது Pசiவெள (Pஎவ) டுவன. 44இ ளுவயவழைnசுழயனஇ னுநாறையடய. வூ.P. 011- 2723205 Pசiஉந - 100ஃஸ்ரீ
வளரத் துடிக்கும் மொட்டு
இலங்கை தமிழ்ச் சிறுகதை நூலாக்கப் பரப்பில் புதிய வரவாக ~விரியத் துடிக்கும் மொட்டுக்கள் அமைகிறது. ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை எம்.எம். ஹிதாயத்துல்லா எழுதியூள்ளார்.
இப்பொழுதெல்லாம் பரவலாகப் புத்தகங்கள் வெளிவந்தவண்ண முள்ளன. அச்சுத் தொழில்நுட்ப வளர்ச்சி மாத்திரம் இதற்குக் காரணமல்ல. எழுத்தாளனுக்குஇ அவனது ஆக்கங்களைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் இந்தச் சமூகத்தில் ஒரு கண்ணியமுண்டு. இந்த வெளிச்சத்தை தன்மீது பாய்ச்சிக் கொள்ள சில ஆயிரங்களை செலவிடுவது சிலருக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல.
எதையாவது எழுதிஇ அல்லது எவனையாவது பிடித்தெழுதிஇ விழாக்கோலம்பூண்டு அரசியல்வாதிகள் பிரமுகர்கள் சகிதம் ஊடகங்களின் ஊர்வலத்துக்கு மத்தியில் அரங்கேறும் கூத்துக்கள் அளவூ கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் புகழ். பணச் சடங்கின் மூலம் மறுபக்கம் இலாபம். இத்தகைய பம்மாத்துக்களுக்கு மத்தியில் ~விரியத் துடிக்கும் மொட்டுக்களின் இடம் எத்தகையதென சிந்திப்பது முக்கியமாகிறது.
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு களுத்துறை மாவட்டம் பங்களிப்புச் செய்துள்ளதா என்ற கேள்விக்கு இடமில்லாமல் பாணந்துறை மொயீன் ஸமீன் அந்த இடத்தை நிரப்புகிறார். அதைத் தொடர்ந்து வெலிப்பன்னை அத்தாஸ்இ தர்காநகர் சுலைமா இக்பால்இ களுத்துறை ஸனீரா காலிதீன்இ தொட்டவத்தை கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் என்று தொடரும் பட்டியலில் எம்.எம். ஹிதாயத்துல்லாஹ்வூம் இணைகிறார். இவர் களுத்துறை மாவட்டத்தில் ஒரு பெரிய கிராமமான அதுளுகமையில் பிறந்தவர். பாரம்பரியப் புலமைசார் குடும்ப மொன்றைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியரும் சட்டத்துறைப் பட்டதாரியூமாவார்.
கலை இலக்கிய சூன்யப் பிரதேசத்திலிருந்து துடித்து விரிந்த இலக்கிய மொட்டாக இவரைச் சுட்டலாம். தௌpவான சமயப் பார்வையூம் சமூக நோக்கும் கொண்ட புத்திஜீவி.
இடைநிலை மாணவர் பருவத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாடசாலைக்கு வந்து சென்ற இலக்கிய வாதிகளின் ஊடாட்டம் இவருக்குள் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அந்த வகையில் டொமினிக் ஜீவாஇ ஏ.இக்பால்இ ஜின்னா சரிப்தீன்இ கலைவாதி கலீல்இ எஸ்.ஐ. நாகூர்கனிஇ அல்அசூமத்இ மேமன்கவி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 1995 முதல் ஒரு தசாப்த காலமாக ஹிதாயதுல்லா இலக்கியப் புலத்திலே இயங்கி வருபவர். இவரோடு சமகாலத்தில் ரியாஸ் மொஹமட்இ ஏ.எஸ்.எப். சிபாயாஇ எம்.எம்.முனீராஇ ஹிக்மா போன்றவர்களும் எழுதி வருகின்றனர்.
இவர்கள் நால்வருமே 'ஜனசங்கதய" களுத்துறை மாவட்ட இலக்கிய விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்திவரும் சிறுகதைஇ கவிதைப் போட்டிகளிலே பங்குபற்றி பரிசு பெற்றவர்கள். அதேபோன்று தினகரனில் எம்.எச்.எம். சம்ஸ் நடத்திய ~புதுப்புனலை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்கள். அவர்களுக்குள்ளிருந்து ஹிதாயத்துல்லா ஒரு படி முன்னேறி வந்துள்ளார்.
மக்கள் சமாதான மன்றம் நடாத்திய கவிதைப் போட்டியிலே பரிசு பெற்றதோடுஇ வெளியிடப்பட்ட தொகுப்பிலும் அக்கவிதை இடம் பெற்றுள்ளது. அல்ஹஸனாத் சஞ்சிகையிலும் சிறுகதை எழுதியூள்ளார். அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை ~கலை அமுதம் வைரவிழா மலருக்கு ஆசிரியராக அமர்ந்தமையூம் அவரது எழுத்தாளுமைக்கு சான்றாகிறது. இனி இவரின் சிறுகதைகள் பற்றிக் கண்ணோட்டம் செலுத்தும் போதுஇ ~சீறிப்பாயூம் ஊற்றுக்கள் வேறுபட்டு நிற்கின்றது. கற்பித்தல் பயிற்சிக்குச் சென்ற ஒரு ஆசிரியரின் அனுபவமாக கிழக்கு மாகாண பேச்சு வழக்கில் இச்சிறுகதை அமைந்துள்ளது. கள்ளம் கபடமில்லாத ஆரம்பப் பிரிவூ மாணவர்களின் நடவடிக்கைகளுக்கூடாக கதை பின்னப்பட்டுள்ளது. இயந்திரமயமான கற்பித்தல் செயற்பாடு களுக்கு மத்தியில் இதயமுள்ள ஓர் ஆசிரியர் அடையாளம் காணப்படுகிறார். சஸ்னா என்ற மாணவி கதை முடிந்த பின்பும் மனதை நெருடிக் கொண்டு நிற்கிறாள்.
ஏனைய சிறுகதைகள் அனைத்தும் களுத்துறை மாவட்டத்தின் குறிப்பாக அட்டுலுகமையின் தனித்துவ பேச்சுவழக்கிலும் பின்புலத்திலுமே அமைகின்றன.
~விரியத் துடிக்கும் மொட்டுக்கள் என்ற தலைப்புக்கதையூம் ஒரு பாடசாலைக் கதைதான். வறுமையின் கொடுமை தாங்க முடியாத நிலையில் இடைவிலகும் மாணவனொருவனை முகம்மத் மாஸ்டர் தேடிப் பிடித்து அன்பு காட்டி வழிநடத்துகிறார். எதிர்பார்த்தது போல் அவன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகிறான். அதைக் கூடக் கண்டுகொள்ளாத நிலையில் ஆசிரியர் என்ற மகுடம் தாங்கித் திரிபவர்களின் கொடுமையை வெளிப்படுத்துகிறார். இத்தகைய கதைகள் பலராலும் எழுதப்பட்டுள்ள போதும்இ இக்கதையில் ஒரு தனித்துவம் தொனிக்கிறது.
பில்லிஇ சூனியம் என்று பட்டியல் விரித்துப் பணம் பண்ணும் லெப்பும்மாவின் பொய் முகம் ~அழிந்து போகும் பொய்மைகளில் கிழிக்கப்படுகிறது. ஒரு புத்திஜீவியின் குறுக்கீட்டால் ஒரு பிரசவத்தாய் காப்பாற்றப்படுவதன் மூலம் பகுத்தறிவூக்கு உயிரூட்டப்படுகிறது.
1956 கலவரத்தின் ஒரு வெட்டுமுகத்தை 'அமானுஷ்யம்" சித்தரிக்கிறது. கல்விக்கு உயிரூட்டிய தமிழாசிரியர்கள் எப்படி ஒரு முஸ்லிம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதை புல்லரிக்கும் விதத்தில் கலையாக்கம் செய்துள்ளார். நன்றியூணர்வூம் மனிதாபி மானமும் மேலோங்கி நிற்கும் இச்சிறுகதை இலக்கியத்திற்கு ஆதர்ஷமாகத் திகழ்கிறது.
~ஆணிவேர் ஆட்டம் காண்கிறது முஸ்லிம் கிராமங்களின் நடப்பியல் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. நீதி நேர்மை பாராது பணம் பண்ணும் பிரகிருதிகள் மறுபக்கத்தில் சமுகத்தின் தலைமைகளாகவூம் ஆத்மீகக் காவலர்களாகவூம் வேடம் தரிப்பது என்றும் புதுமையான விடயமல்ல. இதன் உட்கிடையை வெளிப்படுத்தி முன்வைக்கும் இளம் புத்திஜீவிகள் சமூக விரோதிகளாக காண்பிக்கப்படுகின்றனர். எந்த சமூகத்திற்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்களோஇ அந்தச் சமூகமே அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் துன்பியல்இ தொடர்கதைதான். சிந்தனைப் புரட்சி யொன்று மூலம் இக்கதை வாலிப நெஞ்சங்களைத் தூண்டி நிற்கிறது.
மறுத்துப் பயனில்லாத நிலையில் அது காசாக மாறி காரியம் நிறை வேறுகிறது. அடுத்தமாதச் சம்பளம் கிடைக்கிறது. நன்றி உணர்வோடு மனைவியை மகிழ்ச்சிப்படுத்த நினைக்கிறான். பிள்ளைகளின் தேவைகள் வேண்டுதல்கள் மனதிலே எழுகின்றன. இந்தக் கனவூகளோடும் கற்பனைகளோடும் உத்தியோக பூர்வ தேவைக்காக பரீட்சைத் திணைக்களம் போய் இறங்கும் போதுஇ அவனது பணப்பையை காணவில்லை. முடிச்சுமாறிகள் கதையைக் கெடுத்துவிட்டார்கள். செய்வதறியாது அதிர்ந்து போகிறான். இக்கதை வித்தியாசமான உணர்வோடு எழுதப்பட்டுள்ளது.
சமூக நிலைப்பாடுகள் மீது கொண்ட தார்மீகக் கோபத்தோடு மேற்படி கதைப் பிரசவங்களுக்கு மத்தியில் மெல்லுணர்வூகளையூம் கலையாக்கமுடியூமென்பதை மெய்ப்பிக்கும் வகையில் ~அறுந்துபோன முடிச்சு அமைந்துள்ளது. பட்டப் படிப்புக்கு காசு கட்டும் இறுதிநாள். வழியின்றித் தடுமாறுவதை அறிந்து அவள்தன் மாலையை கழற்றி;க் கொடுக்கிறாள்.
மொத்தத்தில் சமூகத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டுள்ள இக் கருக்கள் மிகவூம் தாக்கமானவை. சிறந்த கதைக் கருக்கள் மாத்திரம் ஒரு படைப்புக்கு வெற்றியளிப்பதில்லை. அக்கருக்கள் எழுகின்ற பகைப்புலத்தின் வாழ்க்கை யதார்த்தம் முழுமையாக ஊடுபரவியிருக்க வேண்டும். அந்த மக்கள் மேலுயர உந்துதல் கொடுக்க வேண்டும். இதனை கதாசிரியர் புரிந்து கொண்டு செயற்பட்டிருக்கிறார். சமூகக் கடப்பாடு அவரை ஒரு பேனாப் போராளியாக வெளிப்படுத்தி யிருக்கிறது.
ஒவ்வொரு பிரதேசத்தின் தனித்துவத்தை பதிவூசெய்ய அந்தந்தப் பிரதேசங்களிலிருந்து ஆக்க இலக்கிய வாதிகள் உருவாக வேண்டியது அவசியம். எம்.எம்.ஹிதாயதுல்லா எழுதியிருப்பதோ ஒரு சில தாள். இன்னும் எழுத இருப்பதோ ஏராளம். கல்வியில் நாட்டமின்மைஇ கலை இலக்கிய வெறுப்புஇ சமயப் பிரிவினை வாதம்இ போலிப்பித்தலாட்டங்கள்இ நேர்மையற்ற பொருளீட்டல்இ முதலான சகதிக்குள் நின்று கொண்டு புல்லாங்குழல் இசைக்க வேண்டுமென்று எவரும் எதிர்பார்ப்பதற்கில்லை.
ஒரு புதுமைப் பித்தன் ஒரு ஜெயகாந்தன்இ ஒரு டானியல்இ ஒரு தோப்பில் மீரண் போன்று நாளைய இலக்கிய உலகில் ஹிதாயதுல்லாவூம் நிலைக்க வேண்டுமென்ற ஒரு நம்பிக்கைக்கு இந்த ~விரியத் துடிக்கும் மொட்டுக்கள்" நம்பிக்கை யூ+ட்டுகி;ன்றது. மக்களை மறக்காத எழுத்தாளன் மக்களால் மறக்கப்படமாட்டான் என்று மாக்ஸிம் கோக்கி சொன்னான். ஹிதாயத்துல்லாவூம் மக்களை மறக்காத எழுத்தாளன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வளர வாழ்த்துக்கள்!
திக்குவல்லை கமால்104இ
அத்துளுமைஇ
பண்டாரகம.
உங்களுடன் சில வார்;த்தைகள்
இது எனது கன்னி முயற்சி. மனதுள் எழுந்த வேட்கையின் வெளிப்பாடு. கலை இலக்கியத்தில் காலூன்றிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வூ என்னுள் எப்போதும் முகிழ்ந்துகொண்டிருக்கின்றது.
மனிதனின் வாழ்வியல் இந்த மிலேனியத்தில் புதுப்பரிமானத்தைப் பெற்றுள்ளது. அவனது வாழ்வூ ஒரு சகட ஓட்டம். அதில் அவன் காணும் பார்க்கும்இ ஏன் அவனது வாழ்வில் நடக்கும் அனேக விடயங்கள் அவனை புது மனிதனாக மாற்றுகின்றன.
இங்கு அவ்வாறானவைதான் என் எழுத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவைப் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்த வருடத்துக்குள் எழுதப்பட்டவை.
எனது கலைப் பயணம் மிகக் குறுகியதுதான். தொண்ணூற்று நான்கின் இறுதிகளில் தொடங்கி ஏணிப்படிகளை கடந்து வருகின்றேன்.
சமூக போக்கின் யதார்த்த நிலையை மக்களுக்கு விளங்கும் பரிபாசையில் அவர்களுடன் உரையாட வேண்டும் என்பது எனது அவா.
இந்தப் பணியில் நான் எந்தளவூ தூரத்துக்கு தேறியிருக்கிறேன் என்பது உங்களது நிர்ணயிப்பில் தான் உள்ளது.
இத்தொகுப்பு இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் உதவித்திட்டத்தின் கீழ் வெளிவருகின்றது.
எழுத வேண்டும் என்று கூறி என்னை எழுதத் தூண்டியவர் எனது பாட்டனார் (அப்பா) நூநா லெப்பை முகம்மது அப்துல்லாஹ் அவர்கள். கலை இலக்கியத்துறையில் என்னை மோகங்கொள்ளச் செய்து மக்கள் இலக்கியம் படைக்க வேண்டுமென வழிப்படுத்தியவர் எனது ஆசான் தி;க்குவல்லை கமால் அவர்கள். ஊக்கமும் உரமும் சேர்த்தவர்கள் எனது தாயூம் தந்தையூம்.
தேசிய நூலக சபையினரும்இ இத்தொகுப்பை சிறப்பாக பதிப்பித்த ஏ.ஜே அச்சகத்தினரும்இ என்னை இவ்வழியில் ஆர்வமூட்டி கல்வி நிலை ஆளுமையை பெற்றுத் தந்த எனது பெற்றௌரும் மூத்த சகோதரரும் தம்பி. தங்கையூம் நன்றிக்குரியவர்கள்.
2000த்தின் இறுதிப் பகுதியில் சமர்ப்பித்திருந்த இப்பிரதி அவ்வாண்டே தெரிவாகியிருந்த போதும்இ அரச உதவித் தொகை நிறுத்தப்பட்டிருந்ததால் தடைப்பட்டிருந்து 2005 களில் மீளவூம் அனுமதிக்கப்படும் போது எனது மகன் அப்ழலின் வரவோடு இரட்டிப்பு மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. எனது துணைவியூம் நினைவின் நிழலில்.
நினைவிருக்கட்டும் இது எனது பயணத்தின் முதற்படிதான்...
இல: 1-யூஇ மஹவத்தஅட்டுளுகமஇ பண்டாரகமஇஇலங்கை.(071-8010613 - 038-4920513)
சீறிப்பாயூம் ஊற்றுக்கள்
'ஸ்கூல் அடிய எறங்குங்க" கொந்தொஸ்தர் பையன் கத்தினான். நான் இறங்கிக் கொண்டேன். இரண்டு கைகளும் இல்லாதது போன்று@ அறுந்து விழுந்துவிட்டது போன்ற உணர்வூ. அந்தளவூக்கு வலி. கைகளிரண்டையூம் உதறி விட்டுக் கொண்டேன்.
நண்பர்கள் இர்ஷாத்தும் றுசானும் கூடத்தான். அவர்களுக்கும் அவ்வாறுதான் இருக்க வேண்டும். கஷ்டமான புன்னகையொன்று தவழ்ந்து வந்தது. பெண்கள் நால்வரும் இறங்கி 'ஏன்டும்மோவ்" என்று இடுப்புக்களை நிமிர்த்திக் கொண்டனர். எல்ப் வானில்@ எங்களது பரிபாஷையில் ~ஓர்ராத்தல் பாம்பெட்டியில் வந்தால் வேறு எப்படித்தான் இருக்கும்.
பாடசாலையை எட்டி சிறிதாக ஒரு நோட்டம் வி;ட்டேன். மனம் திருப்திப்படவில்லை. நிந்தவூ+ரில் இந்தப் பாடசாலைதான் போடப்பட்டிருக்கிறது என அறிந்தவூடன் நான்கைந்து பேரிடம் கேட்டுப் பார்த்தாயிற்று. ~எத்தனையாம் ஆண்டு வரைக்கும் இருக்கும்? எட்டுக்கு மேல்ல இருக்குமா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதில் கூறிய போதுஇ போய்த்தான் பார்த்துக் கொள்ளுவமே என்ற எண்ணம்.
எந்தப் பாடசாலையிலும் எந்த வகுப்பும் எனக்குப் பிரச்சினையல்லதான். அந்தவகையில் எனக்கு எவருக்குமே கிட்டாதஇ அல்லது மிக அரிதாகக் கிட்டும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருந்தது. அதுதான் பாலர் வகுப்பிலிருந்து ஏ.எல். வரை கற்பித்த அனுபவம்இ சில வேளைகளில் அதற்கு மேலும் கூட. இந்த வகையில் அவ்வந்த வகுப்புக்களின் பாடவரையறைகள் எனக்கு அனுபவப் பாடமாகவே இருந்தது. ஆனால் இது ~பெர்ஸ்ட் டீச்சிங் பிரக்டிஸ் அதுவூம் இஸ்லாம் பாடம். ஒவ்வொரு பாடநேரமும் முப்பது முப்பத்தைந்து நிமிடங்கள். முதலாம் இரண்டாம் தரங்களுக்குக் கூட இவ்வாறிருக்கும் போது இந்தச் சின்னக் குஞ்சு குறுமான்களோடு என்ன செய்யலாம் என்ற உணர்வூ. ஒப்சவேர்சனுக்கு வருபவர் பெரிது பெரிதாக எதிர்பார்த்தால்...
'ச்சீ... பெரியோருஸ்கூல பார்த்துப் பெய்த்தீச்சேலும்" மனம் அலுத்துக்கொண்டது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
ஐந்தாம் தரம்இ நான்காம் தரம் என ஒவ்வொரு பீரியட்டுக்கும் ஒன்றொன்றாய் மாறி அலைந்து புதுப் பிள்ளைகளின் வரவேற்பில் நனைந்த போதுஇ ~யூனிட் கெலக்ஷனன்று இருந்த அலுப்பு படிப்படியாக மறைந்து போகத் தொடங்கியிருந்தது.
அன்றைக்கு எனக்குள்ள இறுதிப்பாடம். எப்படியூம் எனக்கு மூன்று பீரியட் மட்டும்தான். எப்படியோ வாரத்துக்கு பதினாறு பாடங்கள் எடுத்தால் போதும். இரண்டாம் வகுப்பைத் தேடிக்கொண்டு போனேன்.
'அஸ்ஸலாமலைக்கூம்..." பிள்ளைகளின் கோரஸான ஒலி.
';வஅலைக்குமுஸ்ஸலாம்... எல்லோரும் உட்காருங்க பார்ப்பம்"
அவர்களுக்குள்ளும் புகுந்து விடாத எனக்குள்ளும் புதைந்து விடாத பொது மொழியொன்றைக் கையாண்டேன்.
நாலுஇ ஐந்தாம் தரங்களின் அனுபவத்தில்இ கிடுகிடென்று வேகமாகப் பேசும் இப்பிள்ளைகளின் மொழி வழக்காற்றை கவனமாகப் புரிந்து கொள்வதற்கு கண்ணையூம் காதையூம் முழுமையாகத் தயார் படுத்திக் கொண்டேன். இரண்டாம் தரம் என்னும் போது கூடுதலான கவனம் வேண்டும் போல் பட்டது.
'பெரிய கஷ்டம் ஸேர். குழப்படிக்காரப் பிள்ளையள். செல்வார்த்த கேக்கியல்ல..." எனது சக பயிற்சி ஆசிரியை காதுக்குள் ஊதிவி;ட்டு எனக்கு இடமளித்தார். அவருக்கு முதலன்றே குழம்பிவிட்ட நிலைபோலும்.
அனைவரையூம் ஒருமுறை ஒருமிக்கப் பார்த்துக் கொண்டேன். இது எனது பழக்க தோசம். அனைவரையூம் எனது பார்வைக்குள் அடக்கிவிடுவேன். பெண்கள் மட்டும்தான். எல்லோருமே 'கப்சிப்" பென்று நின்றனர். எனது தோற்றத்தைக் கண்ட பயமோ என்ற எண்ணம் மேலிட்டது. நான் எதற்கும் சிரி;த்துவைத்தேன்.
மெதுவாக அறிமுகம் கூறி சிரித்துப் பேசி கதைத்து வகுப்பை கலகலப்பாக்க முயற்சித்தேன். படிப்படியாக என் மீதான நம்பிக்கை பிள்ளைகளினுள் கிளர்ந்துவந்தது. என்னோடேயே சங்கமிக்கத் தயாராகிவிட்டனர். அப்போதுதான் நான் கவனித்தேன். ஒருத்தி மட்டும் சிரித்துச் சிரித்து அடுத்தவளுக்கு தலைமறைத்து ஒளிந்து ஒளிந்து...
அறிமுகம் தொடர்ந்தது.
நிஹ்லாஇ நஸ்மியாஇ மின்னா அடுத்து... அடுத்து... அவளேதான்.
'உங்கட பெயரென்ன மகள்"
'........" சிரித்து நாணி ஒதுங்கினாள்.
'உங்களுக்குப் பெயரில்லையா...? சொல்லுங்க பாப்பம் உங்கட பெயரென்ன..." நானும் அவள் வழிக்கே இறங்கினேன்.
'........" தலையை ஆட்டிச் சிரித்துக்கொண்டே கீழே நோக்கியிருந்தாள்.
'ஸேர்... ஸேர்.. சஸ்னா ஸேர்" ஒன்று முடிய ஒன்றென்று அடுத்த மாணவிகள் பதிலளித்து விட்டனர்.
சஸ்னா கைகளிரண்டாலும் முகத்தை மூடிய படி படுத்துக்கொண்டாள்.
'இது என்னடா இது... இந்தச் சின்ன வயதில் கண்டறியாத வெக்கம்..." மனம் அல்லலாடியது.
இது ஒரு புதுக் கேஸ். அதையூம் கற்கத்தான் வேண்டும். ஆசிரியத் தொழிலின் திருப்தி இவற்றால் தானே மெருகூட்டப்படுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
இத்தொழிலை அதிகாரபூர்வமாகப் பெற்று மூன்று வருடங்களும் பூர்த்தியாகவில்லை தான். ஆனால் இத்துறையில் ஒன்பது வருட அனுபவம். சாதாரண தரம் எடுத்ததிலிருந்து பெறுபேறு வரும் வரையென படித்த பாடசாலையிலேயே தொண்டராக கற்பிக்கத் தொடங்கி உயர்தரத்தின் பின்னரும் நீண்டு ஆசிரிய நியமனம் கிட்டும் இக்காலம் வரையான நீண்ட பாதையில் இதுபோன்ற எத்தனையோ வித்தியாசமான அனுபவங்கள் வழி நெடுகிலும் காத்திருக்கவே செய்தன.
இலக்கொன்றை வைத்து ஆசிரியத் தொழிலைத் தெரிந்ததால் கூடவே ஒரு கொள்கைப் பிடிப்பும் வளர்ந்து வந்தது. பாடத்தை வெறுமனே 'சோக் அன்ட் டோக்" நடைமுறையில் செய்யாமல் மாணவர்களின் உணர்வூகளை மதித்து வழிகாட்டலைச் செய்ய இத்தகைய சந்தர்ப்பங்கள் கைகொடுத்தது. இப்படித்தான்இ அன்றொருநாள் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். தோட்டப்பாடசாலைதான். மூன்றாம் தரத்தில் கற்கும் கமலவாணி என்னைக் கண்டு பயந்து நடுங்கி ஒதுங்குவது தெரிந்தது. வழமை யாகவே கலகலக்கும் பழக்கம் அவளுக்கு. குழப்படியூம் கூட.
'வாணி இங்க வாங்க" பாடத்தின் இடைநடுவில் கிடைத்த ஓய்வில் அழைத்தேன்.
'ஏன் இப்படி இருக்கீங்க... என்ன நடந்தது"
'..... சொல்லுங்க பயப்பட வேணாம்"
'.......ஸேர்.......ஏவூ+ட்டப்பா... நேத்துலாவூ நல்லா.. குடிச்சிட்டு வந்தாரா.. அம்மாவோட சண்ட போட்டுகிட்டாங்களா... வீட்டு சாமன மெல்லாம் ஒடச்சாரு. அதில.. அதில" தட்டுத் தடுமாறினாள்.
'சொல்லுங்க"
'எண்ண விளக்கு விழுந்து ஏவூ+ட்டுக் கொப்பியெல்லாம் எரிஞ்சு போயிடுச்சி... ஏடெல்லாம் எஞ்சல்ல.. வீட்டு வேல...."
எனது மனம் ~திக் கென்றாய் விட்டது.
அவளை ஆறுதல் படுத்தி பரிகாரமும் செய்தேன்.
அவளுள் அந்தச் சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. பயமில்லாமல் தௌpவாகப் பேசினாள்.
மற்றொரு முறைஇ இவ்வாறுதான் உயர்தரத்தாருக்கான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது கற்பித்தல் தொடர்ந்து கொண்டே யிருந்தது. இடையிடையே சஸ்ராவைக் கூர்ந்து கவனித்தேன். அவள் எங்கோ கனவூலகில் மிதப்பது போல... கொஞ்ச நாளாக இதே நிலைதான்...
வகுப்பு முடிந்ததும் எனது பணியைத் தொடங்கினேன். 'எனா சஸ்ரா... இப்ப கொஞ்ச நாளா உங்கள்ட்ட ஒரு மாத்தமொன்டீக்கி..." 'இ... இல்ல இல்ல ஸேர்"
'..." நான் மௌனம் காத்தேன். அவளாக வழிக்கு வரவேண்டும். நிர்ப்பந்தம் கூடாது.
'ஊட்டால நிச்சச் செல்லுற ஸேர்..."
'ம்... சரி கவலப்படவாணாம் மகள்... நான் பாத்துக் கொள்ளுறன்"
'ஸேர்...என்ன என்ன ஒருத்தரு"
அவள் இங்குதான் வந்து நிற்பாள் என்று அறிந்துதான் இருந்தேன். வழமையாகவே யாரையூம் கூர்ந்து பார்த்துவிடும்இ அவதானித்து விடும் பழக்கம் எனக்கு. அவற்றிலிருந்து எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எனது மாணவர்களுக்கு வாழ்வின் யதார்த்தத் தை விளங்கப்படுத்த அவை பெருமளவூ பயன்பட்டிருக்கின்றன.
இந்த அவதானித்தலில்தான் அவன் எனது கண்களுக்குத் தென்பட்டிருந்தான். இசைவூப் பரிமாற்றங்கள் அசையத் தொடங்கி யிருந்தன. சந்தர்ப்பம் வரும் வரைதான் எதிர் பார்த்திருந்தேன். அதற்குள் வீடுவரை விடயம் சென்றுவிட்டது போலும். ஆனால் திடீர் தடை போட்டால் நிலைமை உக்கிரமடைந்துவிடும். வீட்டாருடனே கதைத்து முழுமையாகப் பொறுப்பெடுத்தேன். புத்தி வந்ததும் பருவக் கோளாறின் குழப்பமும் ஓடியே விட்டது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
பாடமுடிவில் மதிப்பீடுகளைக் கொடுத்தேன். செய்து முடித்தவர்களெல்லாம் வந்து மேசையைச் சூழ்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு கொப்பியையூம் கவனமாகப் பார்த்து திருத்தியூம்இ பாராட்டியூம்இ மதிப்பீட்டுத் திருத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அடுத்தது சஸ்னா.
நன்றாகத் தானிருந்தது. பாராட்டி ~மிகநன்றும் போட்டு விட்டேன். அவளைத் தொடர்ந்து மற்றையோர்...
பிந்தித்தான் அவள் கவனித்திருக்க வேண்டும். கொப்பியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.
'எனக்கு நன்று வேணாம்" வளைத்து நௌpத்துச் சொன்னாள்.
'... நான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றேன். வழமைக்கு மாற்றமானதொரு நிகழ்வூ.
'ஏனாம் சஸ்னா"
'எனைக்கு வேணாம்"
'அதானே மிக நன்று போட்டிருக்கிறன்" 'எனக்கு ஒன்னும் வேணாம். எல்லோரும் தான் மிகநன்று போடுறாங்க..." பிடிவாதமாக இருந்தாள்.
'..."
'வெட்டீடுங்க..." காலைக்கீழே உதைத்து@ தலையை ஆட்டியாட்டிச் சொன்னாள். அது உயிர்வந்த பொம்மையொன்று உருவெடுத்து ஆடுவது போல...
எனக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. தற்போதைக்கு ஏதாவது சமாளிக்க வேண்டும் என்று நினைத்தேன்@ பிறகு மறந்துவிடுவாள் என்ற நினைப்பில்...
'சஸ்னா நல்ல பிள்ளைதானே போயிருங்க பாப்பம். இவங்களுடையத திருத்தினதுக்கு அப்புறம் இதப் பார்க்கிறன்..."
தள்ளிவிடாத குறையாக இரண்டு மூன்று முறை சொன்ன பிறகுதான் சென்றமர்ந்தாள். நானும் அடுத்தவர்களைக் கவனிப்பதன் மூலம் அந்தச் சூழ்நிலையை மறக்க முயன்றேன்@ அத்தோடு முடிந்துவிடும் என்ற நினைப்பில்... அடிக்கடி எட்டியூம் பார்த்துக் கொண்டேன். எனக்குள்ளும் ஓர் ஈர்ப்பு உருவாகத்தான் செய்திருந்தது. 'சஸ்னா குழர்றா ஸேர்... சஸ்னா குழர்றா"
திடீரென்று என்னை நோக்கி இம்முறைப்பாடுகள் குவியத் தொடங்கின. குழப்பத்தோடு எட்டிப் பார்த்தேன். அருகில் சென்றால் பிரச்சினை கூடிவிடும் என்ற எண்ணத்தில் விட்டுப் பிடிக்கத் தீர்மானித்தேன். மற்றவர்களை அடக்கி அமைதிப்படுத்துவதுகூட பெரும்பாடாகத் தானிருந்தது.
'ஸேர்... ஸேர்... சஸ்னா ~நன்ற வெட்டிப் போட்டுட்டா ஸேர்" அடுத்த கூப்பாடு.
நிலைமை விஸ்வரூபமெடுப்பதை தெரிந்து கொண்டதும்தான் சமாளிப்பு அல்ல தீர்வே கண்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். அவளருகிலேயே சென்றேன்.
'சஸ்னா... இங்க பாருங்க பிள்ள... இன்னம் கொஞ்சம் நேரம் இருந்திருந்தா நானே வெட்டிப் போட்டிருப்பன்தானே..."
எழுந்து உட்கார்ந்துகொண்டாள். படபடக்கும் முகத்தோடு என்னைப் பார்த்தாள். முகபாவனையூம் கண்களும் கூட கதைத்தன. கன்னக் கதுப்புகளும் நகைத்தன...
'கொப்பியைத் தாங்கொ சஸ்னா" நானாகவே எடுத்து வெட்டிப் போட்டேன். அவளுள் இலேசான ஒரு புன்முறுவல். முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளுள் ஏதோவொன்று ஒளிந்திருப்பது மாத்திரம் தௌpவாகத் தெரிந்தது. இந்தப் பத்து நாளைக்குள் ஒரு பிஞ்சிடமிருந்து அதனை அறிந்துகொள்ள முடியூமா? என என் சிந்தனை முயன்று கொண்டிருந்தது.
'டலங்.... டலங்" பெல்லடித்து ஓய்ந்தது. எல்லாம் முடித்து வெளிக்கிளம்ப முயற்சித்தேன்.
'வேணாம் சேர்... வேணாம் சேர் போக வேணாம் சேர்..." நிஹ்லா வந்து ~பேக்கைப் பிடித்துக் கொண்டாள். 'நில்லுங்க ஸேர்.. இன்னம் படித்துத் தாங்க ஸேர்..." பாதிமா கையைப் பிடித்து இழுத்தாள்.
இந்த தைரியத்தில் ஒவ்வொருத்தராக அடுத்தடுத்து வந்து சூழ்ந்து கொண்டனர். சஸ்னாவூம் கூடத்தான் ~பேக்கைப் பிடித்த வண்ணம் ...இழுத்து எடுத்தே விட்டாள்...
'அல்லாஹ்"
உட்கார்ந்துவிட்டேன். அமைதிப்படுத்த சற்று நேரம் சென்றது. என்னதான் செய்துவிட முடியூம். ஒரு மாதிரி தலைதப்பி வருவது பெரும்பாடாய் முடிந்துவிட்டது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
இரண்டாம் தரத்துக்கு இரண்டே இரண்டு பாடங்கள் மட்டும்தான்@ ஒருவாரத்துக்குஇ
ஆனால் வகுப்பில் டீச்சர் இல்லையென்றால் ஓடி வந்துவிடுவார்கள். ஏன் ~இன்ரவல் நேரத்துக்கும் தான்.
'ஸேர்... வாங்க ஸேர்... பாடத்துக்கு வாங்க ஸேர்" மாறி மாறி ஒவ்வொருத்தரும் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
சஸ்னா மட்டும் என்னவாம். தன் ஜோடி நிஹ்லாவோடு வந்து எட்டிப் பார்த்து சிரித்துவிட்டு ஓடுவாள். மறுமுறை பாடத்துக்கு வருமாறு சைகையால் அபிநயித்துக்கொண்டே ஓடிவருவாள்.
'ஸேர்.... ஸேர்... சஸ்னா கூப்பிடுறா ஸேர்;... அந்தா பாத்துட்டீக்கா... வராட்டி அவ குழறிடுவாவாம் ஸேர்..."
இந்தச் சின்னஞ் சிறுசுகளின் எண்ணம் எவ்வளவூ தூரத்துக்கு வளர்ந்து விட்டது. எனக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது.
இரண்டு வாரங்களிளுமே இதேநிலைதான்.
அன்று எங்களது பயிற்சியின் கடைசி நாள். ஒவ்வொரு வகுப்பாகப் போய்ச் சொல்லிக் கொண்டு வந்தேன். இரண்டாம் ஆண்டுக்குள்ளும் காலடி எடுத்துவைத்தேன்.
~ஸேர்... ஸேர்... இன்டைக்கி நீங்க பொகக் கூடாது ஸேர்... ~பேக் பறிமுதலானது. இழுத்துப் போய் கதிரையில் அமர்த்தப்பட்டேன்.
'ம்ஹ்... இண்டைக்கு எங்கட கடைசி நாள். திருப்பியூம் கிடைச்சா வருவன்... இன்ஷா அல்லாஹ்"
'நீங்க பொய் சொல்லுறீங்க இண்டைக்கி நிக்கத்தான் வேணும்"
'நிண்டா ஜும்மா தொழுறது எப்படி?"
'இங்கதான் பள்ளி ஈக்குதே"
'சரி அப்பிடின்னா சாப்பாடு..." ஓர் ஒப்புக்காக வாய்தவறி வார்த்தை விழுந்தது.
'எங்கட வீட்டுக்கு வாங்க சேர்" ஒன்றொன்றாக துளைத்தெடுக்கத் தொடங்கினர்.
'எங்கட வீட்டதான் வரணும் ஸேர்..."
காதுக்குள் கேட்ட இனிமையைத் தேடித் திரும்பினேன். சஸ்னா ஓடி ஒளிந்து கொண்டாள். இதுவூம் ஒருத்தியின் கண்களுக்குப் பட்டுவிடத்தான் செய்தது.
';ஸேர் போகவேணாம் ஸேர்... சஸ்னா குழறுவா ஸேர்..."
இந்தச் சின்னஞ் சிறுசுகளுக்கும் எப்படி எப்படியெல்லாம் மூளை வேலை செய்கிறது. இதற்குள் சஸ்னா தன்னிடத்திலமர்ந்து ஏதோ கிறுக்கத் தொடங்கினாள். இதையெல்லாவற்றையூம் நானும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாதிமாஇ சஸ்னாவிடம் ஓடினாள். எழுதிய தாள் பிடுங்கப்பட்டது. மறுகணம் அது என் கைகளையடைந்தது.
'எங்களுக்கும் வெளங்கணும் சத்தமாக வாசிங்க ஸேர்..." நிஹ்லாவின் வேண்டுகோள் இது.
சஸ்னா எழுந்தோடிவந்து என்னிடமிருந்து பிடுங்க முயற்சித்தாள். நான் அமைதிப்படுத்தினேன். கண்கள் அத்தாளை மேய்ந்தன.
'அஸ்ஸலாமு அலைக்கும் ஸேர்... உங்கட பெயரச் சொன்னதுக்கு மன்னிங்க சேர். நீங்க நல்ல படிச்சி தந்தீங்க. நான் சேரோட நல்ல இரக்கம். நீங்க போக வேணாம் ஸேர். எங்கட வீட்ட வாங்க ஸேர். சாப்பாடு தருவோம் ஸேர்" கொச்சை மொழியில் பதிவாகியிருந்தது.
சஸ்னா முகத்தைத் திருப்பி கைகளால் பொத்திக் கொண்டாள்.
கடிதம் எனக்குள் பத்திரமானது. எனக்குள் ஏதோ ஒரு ஈர்ப்பு.
எனது உதடுகளிலும் கூட உப்புக் கரித்தது.
(2000)
விரியத் துடிக்கும் மொட்டுக்கள்
மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக புத்தகமொன்றையூம் எடுத்துக்கொண்டு வெளியிறங்கி விட்டான். இது வழமைக்கு மாறானதுதான். பரீட்சையை எழுதிவிட்டு இரண்டு மூன்று மாதங்களின் பின்...
முந்தநாள் ரேடியோச் செய்தியைக் கேட்டதிலிருந்து அவனுக்கு இருப்படமில்லை. அவனது ஊருக்கு பெறுபேறுகள் தபாலில் வருவதனால் எப்படியூம் ஒருநாள் பிந்திவிடும் என்பதனை அவன் அறிந்தேயிருந்தான். என்ன நிலையோ என்னதுவோ என்று மனம் அரற்றினாலும் அவனது மனதில் நம்பிக்கைத் துளியொன்று ஊற்றெடுத்து உள்ளத்தை நிரப்பி வருவதான பிரமை.
இப்போதெல்லாம் அவன் முன் போல் இல்லை. வித்தியாசம் வித்தியாசமாகஇ புதிது புதிதாக சிந்திக்கத் தொடங்கியிருந்தான். அவனையறியாமலேயே அவனுக்குள் ஒரு மாற்றம்@ புது நீரூற்று நிலத்தை வெடிப்பித்துக்கொண்டு துள்ளிக் குதிப்பதைப் போல. பேச்சுஇ நடைஇ பழக்கவழக்கம் எல்லாவற்றிலும்தான் இந்த மாற்றம்.
முஹம்மது சேரின் தொடர்பு கிடைத்ததிலிருந்து தான் இந்த மாற்றம். அவனிடம் மட்டுமல்ல இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்தது. அவரது துடுக்கான போக்கும் அறிவார்ந்த பேச்சும் எல்லோரையூம் கவரும் புன்முறுவலும் அவனை அவரிடம் நட்புக் கொள்ள வைத்துவிட்டது. அது அவனது அதிர்ஷ்டந்தான். அதுவரை ஏனோ தானோ என்றிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் இழுத்து நுழைவிக்கப்பட்டான். புத்தகமும் கையூமாக அவனும் மாறிவிட்டான். எங்கேயோ எத்தனையாவதாகவோ இருந்தவன் பத்தாம் ஆண்டின் இறுதிப் பரீட்சையில் ஐந்தாம் இடத்திற்கு எம்பிக் குதித்துவிட்டான். அதற்குப் பிறகுதான் அவனுக்குள் ஒளிந்திருந்த ~அவன் பிரகாசிக்கத் தொடங்கினான்.
~படிச்செனத்தியன் பெரிசாகக் கிழிச்சப்போற... ஓ.எல் முடிஞ்சொடன எனசரி பாக்கவேண்டியதான் இந்த சிந்தனையோட்டம் அவனுக்கு அடிவாரிலேயே ஊற்றப்பட்டுவிட்டது. அவனுக்கு அது நன்றாக நினைவிருக்கின்றது.
'உம்மா கணக்கு கொப்பி முடிஞ்சி... எனக்குக் கொப்பியொன்டு வேணும்"
'ஆ.... ஆ... இப்ப போங்கொ மகன்... நாளக்கு எப்பிடிச்சரி எடுத்துத் தாறனே"
'எனக்கேல உம்மா... எனக்கேலா... நீங்க இதத்தான் எந்தநாளும் செல்லிய. எனக்கோண்டேலா. நான் ஸ்கூலுக்குப் போல்ல"
'இப்ப வாப்பாக்கும் ஏலா. அவரு சொகமாகங்காட்டீம் இந்தக் கஷ்டம்தான். இனி என செய்யவன் மகன்@ படிச்சிக் கொளோம் வேணேன். இன்டக்கிப் பெய்த்துட்டு வாங்கெ பாக்கோம்"
எப்படியோ கறாவிக் கெஞ்சினாலும்இ இரண்டு மூன்று வாரங்களாக இதே பதில்தான். வாப்பா இருக்கும் நிலையில் உம்மாவைக் கஷ்டப்படுத்தவூம் விருப்பமில்லை. ஏற்கனவே வெள்ளணைக்கு ஆப்பையூம் அந்திக்கு இடியப்பமும் சுட்டுச் சுட்டு விற்பதால் தான் அவர்கள் ஒருமாதிரி திண்டிட்டிருந்தார்கள். ஆனாலும் எத்தனை நாளைக்குத்தான் ஸரூக் மாஸ்டருக்கு ஒளிந்தொளிந்து இருப்பது. அன்றும் மூன்றாம் பாடத்துக்கான பெல் அடிக்கத்தான் செய்தது. காரணிப்படுத்தல் கணக்கொன்றை விளங்கப்படுத்திவிட்டு ஓரிரண்டு பயிற்சிகளையூம் தந்துவிட்டு ~பொத்தென்று உட்கார்ந்துவிட்டார். இது ஒன்றும் புதுமையல்ல வழமைதான். ஆக ஓரிரண்டு தடவை எப்போதைக்காவது எல்லோருடைய கொப்பியையூம் பார்ப்பார். அன்று வகுப்பே ~உம் மென்று இருக்கும். நெஞ்சு படபட என்று அடிக்கும். யாருக்குத்தான் ஏச்சு விழுமோ என்ற பயம்.
ஆனால் இன்று என்னதான் நினைத்துவிட்டாரோ... முன் வரிசைக் கொப்பிகளை மாத்திரமல்லாது பின்வரிசைக் கொப்பிகளையூம்...
'எடேய் காதர் இங்கு வாடா... இதெனத்தியனிது இப்பிடியோடா கொப்பி பாவிச்சிய... அழிச்சழிச்சி எழுதி.... நீ.... நீங்களெல்லம்..... ஒங்களுக்கெனத்துக்கென்டா படிப்பு. வெறுவாக்கில கெட்டவனுகள்... தொலஞ்சி போங்கேடா கடகளுக்கு.."
அவ்வளவூதான் கொப்பி பறந்தது. இரண்டாம் மாடியிலிருந்து தாள்கள் சிதறின. சிறுவர்கள் பட்டம் விட்டு கூத்தடிப்பது போல.
அனைவருமே சிலையென ~கம்மென்றாய் விட்டனர். அவன் கன்னங்கள் பொருமித் துடிதுடிக்க... கண்களிரண்டும் குளமாக....
அன்றிலிருந்து ஸ்கூலுக்குப் போவதை நிறுத்திவிட வேண்டும் என்றுதான் நினைத்தான். இரண்டொருநாள் நின்றுவிடவூம் செய்தான். ஆனால்....
'மகேனஇ ஸ்கூலுக்குப் பொகாமீந்தாச் சரிவாரா மகேன். படிச்சிய காலத்துல படிச்சிக் கொளோம் வேணேன். அந்த ஹைவான் புடிச்ச மாஸ்டரு இப்பிடித்தான். எத்தினயோ பேரட படிப்பப் பாழாக்கீச்சியாம்...ஊருல அவங்களுட்டா ஆக்களீச்சப்படாதென்ட நெனப்பு ரேஹிச்சிப் பெய்த்துஇ பாரப்பட்ட பதுவா இது மகனே... அல்லா இந்த அநியாயத்த பாத்தீச்சீல்ல..." 'இதப்பாரு மகேன். நாங்க ஓண்ட நலவூக்குத்தான் செல்லிய. நீ இப்ப ஸ்கூலால நின்டென்டு எனத்தியன் செய்யப்போற. என்னப்பாரே@ அன்டன்டைக்குத் தேடித்தின்டதான். இப்பிடி நோய் நொடியள் வந்து ஊட்டுக்கானா மாசக்கணக்கில கஷ்டப்படோனுமெலியன். படிச்சி ஜொப்பொன்ட எடுத்துக்கொன்டா அப்பிடியில்லேலியன்..."
உம்மாவூம் வாப்பாவூம் மாறிமாறி எடுத்துச் சொன்னதில் பாடசாலைக்குப் போனான். அவர்களுக்குள்ளும் ஒரு நப்பாசை.
அவனொன்றும் பெரிய படிப்பாளியல்ல சுமாரானவன்தான். காடுமேடெல்லாம் ஏறி ~கட்டபொல் சொட்டித்திரிவது அவனது பொழுது போக்கு. ஆனால். வகுப்பு ஏற ஏற அவன் பட்டை தீட்டப்பட்டது வென்றால் ஏதோ உண்மைதான். படிப்படியாக மத்திய நிலையிலிருந்து முன்வந்து கொண்டே இருந்தான்.
சின்ன வகுப்புகளிலெல்லாம் கொஞ்சம் துடிப்புள்ளவனாகவே இருந்து பழகிவிட்டான். இதனாலோ என்னவோ தலியூம்மா டீச்சர் ஆலியூம்மா டீச்சர் எல்லோரும் இவனையூம் றாஸிக்கையூம் தான் எதற்கெடுத்தாலும் அழைப்பார்கள். வெள்ளணைப்பாட்டில் அழைப்புக் கிடைத்தால் தெரியூம்@ அது ~கள்ளக் கடயப்பம் கொணுவரத்தான்.
டீச்சர் பெயரைச் சொல்லி அழைக்கும் போதெல்லாம் இவனின் பெருமை பிடிபடாது. தன் கதிரையிலிருந்து எழும்பி வெகு டாம்பீகமாக முன்னே செல்வான்.
'இது... நீ பெய்த்து மொம்மரசிக்கடயால இடியப்பம் பத்துருவாக்கு எடுத்துக்கொணுவாவே.. ரோட்டுல புராஜேரு பாக்காம பத்துரமாப் பெய்ட்டு ஓடிவரோணும் சரியோ..."
இனி அவன்பாடு கொண்டாட்டம்தான். அவனும் றாஸிக்கும் இடியப்பமும் வாங்கிக்கொண்டு நவாஸ் மாஸ்டர்ட கூல் ஐஸ்கிரீமையூம் வாங்கிக்கொண்டு வரும்போது எப்படியூம் ~இன்டர்வெல் லுக்கு பெல்பட்டு விடும்.
சும்மாவா சில நாட்களில் டீச்சருக்கு இறைச்சி எடுக்கவூம் இவன்தானே போகவேண்டும். அப்படித்தான் ஒருநாள்....
அவனும் நண்பனும் பேசிப் பேசிக் கையாட்டியாட்டி நடந்து கொண்டிருந்தனர். அவனது தோள் இறுகப் பிடிக்கப்பட்டது. திரும்பிப் பார்த்தான்@ வாப்பா.
'எங்கியன் போற"
'டீச்சருக்கு எறச்செடுக்கப்போற" பாரதூரம் தெரியாத குதூகலத்துடன் சொல்லிவைத்தான்.
'இதெனத்தியென்டா இது.... இதுக்கொ நாங்க ஒங்களுகள ஸ்கூலுக்கனுப்புற. டீச்சர் மாருக்கு எறச்செடுக்கோம்.... கள்ளக் கடயப்பம் எடுக்கோம்... இப்பிடியே ரோட்டளந்து திரிஞ்சா ஒங்கட படிப்புக் கெனத்தியன் நடக்கிய... ஆ...." அவனது வாப்பா ஆத்திரத்துடன் நடு ரோட்டில் வைத்து கத்தினார். அவர் இப்படிப் பேசி அவன் என்றுமே பார்த்ததில்லை.
'ஏச்சியன்.... ஏச்சியன்.... அத்துரை நானா...."
அவனது வாப்பா கதை கதையாகச் சொன்னார்.
'ஓ... ஓ... மெய்தான் அத்துரை நானா செலசெல டீச்சர்மாரு சேர்ந்து கொண்டு ஸ்கூல்ல கைவாரடிச்சிய... புள்ளகளெல்லம் ரோட்டுல திரீத... இனிப் புள்ளகள் எங்கியன் படிச்சப்போற பெய்யோ..." தாஸிம் நானா ஒத்தூதினார்.
'இதுகளச் சும்முட்டுப் பாத்துக் கொண்டீக்கியதான் குத்தம்" மொய்துநாநாவூம் சேர்ந்து கொண்டார். அவங்கட புள்ளகள முன்னுக்கெடுத்துக்கொண்டு மத்தப் புள்ளகள காடுமேடெல்லம் திரீத ஹபுசிக் கூட்டமாக மாத்தவே ரெடியாகுற" யாரோ இப்படிச் சொன்னதும் அவனது காதுகளில் விழுந்தது.
அவனுக்கு கூட்டத்தைக்கண்டு வியர்த்துக் கொட்டியது. வாப்பாவின் முகத்தை பரிதாபத்தோடு பார்த்தான்.
'போ... போ.... பெய்த்துச்செல்லு எறச்சில்லேன்டு" வாப்பா துரத்தியே விட்டார்.
அன்று நடந்த சம்பவம் இன்று போல் அவனது மனத்திரையில் நிழலாடியது. அப்போது ஒன்றுமே புரியாமல் தான் இருந்தான். இன்று காரணகாரியத்தோடு விளங்கிக்கொள்ளும் வயது வந்துவிட்டது.
அன்றுதான் புது ஸேர் ஸ்கூலுக்கு வந்திருந்தார்.
'ஸேர் மார் போதாத்துக்கு பெரிய... சோதின எடுத்துட்டு வந்தீச்சியாம்"
ஒவ்வொருவரும் அவரைப் பற்றி அப்படித்தான் பேசிக்கொண்டனர். சின்னவராகத் தெரிந்ததில் கணக்கெடுக்காத மனப்பாங்கு. அவனிடம் மாத்திரமல்ல மற்றவர்களிடமும்தான்.
ஆனால்இ பாடம் இல்லாத வேளையில்இ சமூகக்கல்வி ஸேர் ஸ்கூலுக்கு வந்தில்லாத வேளையில் அந்த சேர் வந்திருந்தார். வகுப்பில் ஒரே குசுகுசுப்பு.
'புள்ளயள் ஒங்கட பாட ஸேர் இன்டக்கு வந்தில்ல. அதால இந்தப் பாடத்த எடுக்குறத்துக்கு பிரின்ஸிபல் என்ன அனுப்பி வெச்சிருச்சிய. நீங்க கவனமாக பாடத்த கவனிச்சிக் கொளோணும்... நான் ஒங்களுகளோட மிச்சம் எரக்கமாகத்தான் நடந்துகொள்ற. ம்ஹ்..... ஆராலும் கொழப்பம் போடாமீச்சோம் வேணும்..."
பாடம் தொடங்கியது. சிரித்துப் பேசி அவர்களையே உதாரணமாகக் காட்டி பாடத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து தௌpவாக விளங்கப்படுத்திய போது முழு வகுப்புமே 'கப்" பென்றிருந்தது.
அன்றிலிருந்து அவனுக்கு அவரில் ஒரு ஈர்ப்பு. அவனே போய் அடிக்கடி 'ஸேர் எங்கட வகுப்புக்கு வாங்கெ... இன்டக்கி எங்கட சேர் வந்தில்ல. நீங்க வாங்கெ..." என்று கூட்டி வந்து விடுவான். எல்லோரையூமே சமமாகப் பார்க்கும் முறைஇ எதுவாக இருந்தாலும் அறிவூரையோடு கூடியதாக புத்தி கூறும் நளினம்இ பிழையான விடையைத்தான் கூறினாலும் உடனடியாக தட்டிவிடாது சரிக்கு வழிகாட்டிச்செல்லும் அணுகுமுறை... எல்லாமே அவனுக்கு மட்டுமல்லஇ எல்லோருக்குமே பிடித்துவிட்டன. ஏன் அவரது அலாதியான கற்பித்தல் முறையே தனிதான்.
இவ்வாறிருந்தபோதுதான் இவனை புதுசேர் ஒரு நாள் கூப்பிட்டெடுத்தார்.
'சாதிக்.... நீங்க நல்ல புள்ள. ஒங்களுக்கிட்ட நல்ல கெட்டித்தனமீச்சிய... நல்லாப் படிச்சேலும். இனிமே நல்லா முயற்சியெடுத்துப் படிச்சேனும். என சரிப் பிரச்சினக இருந்தா என்ட பயப்புடாமச் சொல்லோணும் வெளங்கினா..."
இது அவனை முஹம்மத் ஸேரோடு இன்னும் இறுகப் பிணைத்துவிட்டது. எதுவாக இருந்தாலும் அடிக்கடி போய்ச் சந்திப்பான். சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளுவான். படிப்போடு மட்டும் நில்லாது வாழ்வியல் விடயங்களிலும் அறிவூரை கூறுவார். நல்லது கண்டால் தட்டிக்கொடுப்பார் உற்சாகப்படு;துவார். கெட்டது கண்டால் படிப்படியாக அறிவூரைகூறி அகற்றிவிடுவார்.
சாதிக் இப்போதெல்லாம் புதுவேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான். படிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே மாற்றங்கள் தெரியத்தான் செய்தன. மாணவர் தலைவர்களில் ஒருவனாகவூம் தெரிவூ செய்யப்பட்டான். எல்லாவற்றையூம் ஒழுங்காகச் செய்வதற்கு முஹம்மது ஸேரின் ஆலோசனைகள் கிட்டிக்கொண்டேயிருந்தன.
அன்றொரு நாளும் அந்தப் பழைய வேதாளம் முருங்கை மரம் ஏறத்தான் செய்தது.
காலைக் கூட்டத்துக்காக ஸாதிக் மாணவர்களை வரிசைப் படுத்திக்கொண்டிருந்தான். அன்று அவனது பொறுப்புக்குரிய நாள். இப்படித்தான்இ ஒவ்வொருநளையூம் ஒவ்வொருவருக்குக் கொடுத்து பயிற்சியை வழங்குவதற்காக முஹம்மது ஸேரே முன்னின்று இந்தப் பணியை செய்து வந்தார்.
'ஆ... ஆ. அது பாரு அந்த லைன் ஒழுங்கில்ல... இவ்வளவூ நேரமாகியூம் ஒரு லைன ஒழுங்குபடுத்திக் கொள்ளத் தெரியா... இப்பிடித்தான்இ காடு பாஞ்சி திரீத தேனக் கூட்டத்துக்கு எனத்தியன் செய்யேலும்...? இவனுகளுக்கும் பொறுப்புக்குடுத்தா.. அது கொரங்கட கைல பூமாலயக் குடுத்தது போலத்தான்" ஸரூக் மாஸ்டர் கத்தித்தான் சொன்னார்.
ஒருபக்கத்தால் ஆசிரியர்கள்... மறுபக்கத்தால் மாணவர்கள்.. அவன் தலையைக் குனிந்து கொண்டான். கண்கள் குளமாகி கன்னங்கள் பொருமித் துடித்தன. அப்போதும் முஹம்மது ஸேர்தான் அவனுக்கு ஆறுதல்.
இது அவனுக்குப் புதிதல்லதான். இப்படித்தான். அவன் பத்தாம் ஆண்டுப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தான். அரைகுறையாக எழுதி முடித்தவர்கள் போக சிலர் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தனர். முன்னால் ஸரூக் மாஸ்டரின் மகன் எழுதிக்கொண்டிருந்தான். பாயிஸா டீச்சர் அவனிடம் அடிக்கடி போவதும் சிரிப்பதும் கள்ளக் கண்ணால் பார்த்துவிட்டு சொல்லிக்கொடுப்பதும் என்று நடந்து கொண்டே யிருந்தது@ ஒரு நாடகம். மிச்சம் நேரம் போய் இவனிடமும் தான் வந்தார்.
'ஆ..... இதெனத்தியன் இஞ்ஞோமெழுதியொ... மத்தவங்களெல்லம் தாளத் தந்துட்டுப் பெய்த்த... நீங்களுகளெனத்தியன் படிச்சிக் கிளிச்சப் போற..." பட்டும் படாமலும் சொல்லிக்கொண்டு போனார் டீச்சர்.
அவன் கேட்டுப் புளித்துப் போன விடயங்கள் தான். சற்றும் மனம்தளரவில்லை. அவனது பேனா எழுதிக் கொண்டேயிருந்தது. எப்படியிருந்தும் அவன் பின்னுக்குத்தான். ஸரூக் மாஸ்டரின் மகன் இரண்டாவது தலியூம்மா டீச்சரின் மகள்தான் முதலாமாள்.... என்று டீச்சர் ஸேர்மாரின் பிள்ளைகளே.... முன்னணியில்... இதில் ஓரிடத்தில் நியாயமும் மற்றௌரிடத்தில் உதைப்பும் கூடவே புடைத்து நின்றன.
ஸாதிக் உள்ளத்தில் கனன்றெழுந்த தீ அடங்கவேயில்லை. படிப்பை அவனது முழுநேரத் தொழிலாக எடுத்துக் கொண்டான். அவனுக்குத் தேவையான வழிகாட்டலும். ஆலோசனையூம் கிட்டிக் கொண்டே இருந்தது. உயர்தரம் வரை .... ஸாதிக் பாடசாலையை நெருங்கிவிட்டான். பாடாசலை கலகலப்பாக இருந்தது. நெருங்க நெருங்க உள்ளத்தைப் பயமும் தொற்றிக் கொண்டது. உள்ளே போவமா...? வேண்டாமா?
பாடசாலை வளவினுள் உள்நுழைந்த போது றாஸிக்தான் அவனைக் கண்டு கொண்டான். ஓடிவந்து கையைக் குலுக்கினான்.
'வா மசான்... ஓன்டதான் பெஸ்ட் ரிஸால்ட்... இனி ஒன்னப் புடிச்சேலா...."
இருவருமாக ஒஃபீஸ் ரூமுக்குள் நுழைந்தனர்.
முன்னே... நேரெதிரே ஸரூக் மாஸ்டரும் ஆலியூம்மா டீச்சரும். இவன் சிரித்துக்காட்டினான். அவர்கள் கண்டும் காணாதவர்கள்போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியிறங்கி நடந்தனர். இத்தனைக்குப் பிறகும். முகம்மது ஸேரின் கைகுலுக்கலில் நெகிழ்ந்து போய் நின்றான்.
அதிபர் ஆரத்தழுவி நின்றார்.
'ஸாதிக் நீங்க ஸ்கூலுக்கு நல்ல பெயர் எடுத்துத் தந்திருக்கீங்க.... மாவட்டத்திலே நீங்க தான் பெஸ்ட்..."
அவனது கண்கள் பிரகாசத்துடன் ஒளிர்ந்தன.
(1998)
ஆணிவேர் ஆட்டங் காணுகின்றது
ஜும்மா முடிந்துவிட்டது. ஸலாம் கொடுத்ததும் கொடுக்காதது மாக கரீம் மௌலவி எல்லோரையூம் சற்றுத் தாமதித்துச் செல்லுமாறு ~எஃலான் பண்ணினார்.
வழமையாகவே ஸலாம் கொடுத்த கையோடு எழும்பியெழும்பி ஓடுபவர்களெல்லாம் என்னவோ ஏதோவென்று அறியூம் ஆவலில் இருந்தபடியே இருந்துவிட்டனர். பின்னால் உள்ளவர்களும் பள்ளி சிறகில் தொழுதவர்களும்இ துஆ முடிந்த கையோடு எழுந்தெழுந்து முன்வந்து கதவண்டையில் கூடிநின்றனர்.
ஸாஜித் ஹாஜி எழுந்து கொண்டார். ஜும்மாவின் வழமையான கதாநாயகன். சிற்சில ஜும்மாக்களில் இடையிடையே எழுந்து தன் பாத்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவார்.
'அஸ்ஸலாமலைக்கூம்... மேலான சகோதரர்களே! ஊர் ஜெமாத்தார்களே... ஒங்கெல்லாருக்கும் தெரியூம். எங்கடூரு புனிதமான ஊரு. புனிதமானவங்கட காலடி பட்ட ஊரு. அல்லசல்ல மட்டுமல்ல எங்க போனாலும் எங்கடூருக்குகென்டு ஒரு மதிப்பீச்சிய.... ஆனால் இப்ப பாருங்கொ எங்கட மானம் மருவாரிய வெச்சிக்கொண்டு எங்களால வாழேலாமலீச்சிய..." அய்யாஷஷுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஏன்டா இருந்தோம் என்ற மாதிரியிருந்தது. இவர் எங்கே போகிறார் எதைச் சொல்லப் போகிறாரென்று தௌpவாகத் தெரியாவிட்டாலும் எனசரி ஒரு ~ஜில்மல் நடந்திருக்குமென்று எடைபோட்டு விட்டான்.
ஐம்பது ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க பிரகிருதிஇ ஸாஜித் ஹாஜியார். ஊரின் முக்கியமான விடயங்களிலெல்லாம் அவரது பெயர் அடிபடத்தான் செய்யூம். சில விடயங்கள் அவரில்லாமல் நடப்பதுகூட ஒரு குறை மாதிரி இருந்தது. பொதுவிடயங்கள் எதற்கும் நூறு இருநூறு என்றௌ ஐநூறு ஆயிரம் என்றௌ இழுத்து வீசவூம் தயங்கமாட்டார். இதனால் அவரை அண்டிய அடியாட்கள் குழுவொன்றுஇ அவரது தலையசைப்புக் கேற்ப தாளம் போடக் காத்திருந்தது.
அவனுக்குத் தெரிந்த காலம் முதல் அவர்தான் டிரஸ்டி. டிரஸ்டி போர்ட் என்று ஒன்றிருந்தாலும் அது பெயரளவிலேயே இயங்கியது. ஆனால்இ எல்லாமுமாக ஸாஜித் ஹாஜியார் இருந்தார். பள்ளியோடு மட்டுமே நின்றுவிடாது. பாடசாலை இனக்குழப்பம் என எதிலும் முன்னணியில் இருந்தார். பிசின் மாதிரி ஒட்டியேயிருந்தார் என்று கூறினாலும் அது அவனுக்கு மிகையாக விளங்கவில்லை.
பள்ளியில் வழமையாக வருடா வருடம் நடக்கும் ஒரு நாடகம் இருக்கத்தான் செய்தது. எழுதிவைத்த நபர்கள்தான் அதன் வழமையான பாத்திரங்கள். வழமையாக ஒரு காட்சி மட்டுமே மேடையில் வந்து போகும்.
'நாங்க.... ஊரட முக்கியமான ஆக்களெல்லம் ஒன்று கூடின. அதுல ஊரட நலவப்பாத்து செலசெல தீர்மானங்கள நாங்க எடுத்தீச்சிய... இப்பஇ இந்த வருஷத்துட ரெஸ்டிமாராக காலித் ஹாஜியார்இ பாஸில் ஹாஜியார் ஸாஜிது ஹாஜியார். போன்றாக்கள நாங்கெல்லம் சேந்து ஏகமனதாக நியமிச்சீச்சிய.... இதுல ஆருக்காலும் ஆட்சேபன இல்லேலியன்இ ஆ.... எல்லாரும் விருப்பமெலியன்..."
மறு பேச்சி வராமல் படக்கென்று சொல்லி முடித்துவிடுவார் கரீம் மௌலவி. வசனங்களை மிகச் சரியாக ஒப்பேற்றி விடும் நிறைவூ அவருக்கு. இனி வெளியே வந்து அல்லது வீட்டில் மிக நெருக்கமானவர்களுடன் குசுகுசுத்து விமர்சனம் செய்வதோடு சரி. பள்ளிக்குள் ~இச் சென்ற வார்த்தைகூட எவரிடமிருந்தும் வராது. உண்மைதான் எந்த இடத்தில் எந்த உளவாளி இருக்குமென்று யாருக்குத்தான் தெரியூம்.
'இப்ப பாருங்கோ எங்க பாத்தாலும் எங்கடூருட பேரக்கேட்டொடன காரித்துப்பிய... நைன்டி பைக்கொண்டுல ஊரு சுத்தி வரேலாமலீச்சிய.... அன்னிய ஜாய்க்காரனெல்லாம் ஒரு மய்ரி பேசத் தொடங்கீட்ட. அவனுகள்ட்ட தலநிமுர்ந்து பேசேலாமீச்சிய.. எல்லம் முடிஞ்சி இப்ப இந்தப் புனிதமான ஜும்மா நாளுல ஜும்மாத் தொழுதுட்டு வெட்டக்கெரங்கேலாமீச்சிய... ஆ... ஒவ்வொரு கெழமெயூம் அந்நிய சாதிக்காரனுகள் ரெண்டொத்தரு கள்ளன் புடிச்சவார..." ஆத்திரம் தெறித்து விழுந்தது.
சுற்றிச் சுற்றிவரும் போது இங்குத்தான் வந்து நிற்குமென்று அவனுக்கு விளங்கிவிட்டது. சும்மாவா ஒன்று போக ஒன்றென்று ஒவ்வொரு கிழமையூம் தொடராக சில சிங்களச் சகோதரர்கள் வந்து பள்ளிமுன்னால் நிற்கத் தொடங்கியிருந்தனர். சில நாட்களில் பொலிஸாரையூம் அழைத்துக்கொண்டு...
யாரோ சொல்லிவிட்டதில் இருந்து இந்த வருகை. எவனானாலும் ஜும்ஆவூக்கு வரத்தான் செய்வான் என்ற எதிர்பார்ப்பில் ~கேட்டுக்கு முன்னால் எட்டி எட்டிப் பார்த்தபடி நின்றிருப்பர்.
ஆரம்பத்தில் ஓரிருவர் போய் ஏன் எதற்கென்று விசாரிக்கத்தான் செய்தனர். இதுதான் விடயமென்று அறிந்தபோது மெதுவாக நழுவிவிட்டனர். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுவான் ஏனென்று.
ஒருநாள்இ அவனும்தான் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகேட்டுக் கொண்டிருந்தான்.
'நாங்க மத்துகமப் பகுதி.... நான் டுபாயிலிருந்து கொணந்த மாலப்பட்டொன்டு. சிங்கப்பூர்ட அஞ்சி பொயின். கொறஞ்சது இருவத்தஞ்சி முப்பதாலும் பொறும். அதத்தான் ஒங்கடூராக்கள் ஆரோ ரெண்டுபேருவந்து எனத்தியோ தண்ணியொண்டுக்குள்ள போட்டு கறுப்பிச்சிக் காட்டீச்சிய.... பொறகு ஏன்ட மாப்புளேட்ட அது பொறுமதீல்லேன்டு செல்லி முவாயிரத்தஞ்நூர்ருவா குடுத்துட்டு ஏமாத்தி எடுத்துக்கொணுவந்து.... ஹ்ம்... ஹ்ம்.... ஏன்ட மாப்புளக்கு ஒன்டும் வெளங்கீல்ல... ம்.... ம்... அதட பொறுமதி எனக்குத்தான் தெரீம்..."
அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
'ஆய்... எவளவூ பெரிய பாவமன் பெய்யொ...." அனுதாபம் தெரிவித்தார். அத்துலபி நானா.
'ஓ... ஓ...இது நெருப்பு. இதெல்லாத்துக்கும் நாளை மறுமைல அல்லாட்ட பதில் செல்லோணும்" ஆமோதித்தும் ஒரு குரல் எழுந்தது.
'அ போவ்..... எங்களுக்கெனத்துக்கன் ஆர்டயாலும் பலாய் முஸீபத்துப் புடிச்ச வேல..." அத்துக்கோர் நாநா பயங்காட்டினார். ஒவ்வொருத்தரும் கலையத் தொடங்கினர்.
'இன்ன... இப்பிடிப் பெய்த்துச் சரிவாரல்ல... பாரப்பட்ட பதுவா இது. இதுக்கொரு முடிவூ காணோணும்..." அய்யாஸின் ஆதங்கம் சற்று தடிப்பமாகவே வெளிப்பட்டது.
'என முடிவூ காணவன். காபிருகளுங்குட எங்களுக் கெனத்தியன் வேல..." காலித் ஹாஜியின் பைக் பின்னால் ஏறித் தொங்கிய படியிருந்த நிலார்தான் சொன்னான்.
'ஹ்ம்.... ஹ்ம்... இதச் சும்மூடுகீல்ல. பொலிஸக் கூட்டிக் கொணுவார..." இடையிடையே விம்மலுடன் இந்த வார்த்தைகளும் தெறித்து விழுந்தன.
அய்யாஷஷுக்கும் தெரியூம் இந்த ~வர்ச்சஸ் கேஸில் தலைபோட்டால் தொங்கல் இல்லாமல் பிரச்சினை நீளும். என்னதான் செய்ய முடியூம்? நன்மையோடு மட்டுமே நின்று கொண்டு தம்பட்டம் அடித்துத் திரிபவர்களெல்லாம் 'இது ஆஹிரம் துனியாவூக்கு தொடர்பில்லாத வேல" என்று விலகியோடியது போது...
'ஒவ் அக்கே... நீங்க பொலிஸக் கூட்டிக்கொணு வாங்கொ..." அவனும் இப்படிச் சொல்லி வைத்தான்@ அநியாயத்தைக் கண்டும் அதனைத் தட்டிக்கேட்காதஇ எதிர்க்காத ஊமைச் சைத்தானாக இருக்க முடியாது என்பதால்.... இப்போதெல்லாம் இப்படியான பல சம்பவங்கள் கேள்விப்படத் தொடங்கியிருந்தன. அவளுக்கு மூவாயிரத்தைந்நூர்ருவா கிடைத்ததுகூட பெரிய வேலைதான் என்று அய்யாஷ் நினைத்துக் கொண்டான்.
ஏனெனில் இத்தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் ஒரு துட்டுச்சல்லி கூட கொடுக்காமல் முழுமையாக ஏமாற்றிவிட்டு வருபவர்கள் தான் அதிகம். இதில் விசனத்துக்குரிய விடயமென்ன வென்றால்இ இந்தக் கைங்கரியங்களையெல்லாம் அழகாக ருசிபட கடைத்தெருக்களில் நின்றவாறு பெருமையாக தம் திறமையை நண்பர்களிடம் கூறித்திரிவதுதான்.
'மேலான பெரியோர்களே! சகோதரர்களே! எங்களுக்கு வெளீல தலாகட்டேலா மீச்சிய... ஹ்ம்...ஹ்ம்.." ஸாஜித் ஹாஜி அழத்தொடங்கிவிட்டார். ஊர்ச்சனத்தின் நரம்பு நாரெல்லாம் புடைத்தெழுந்து விட்டது போன்ற உணர்வில்இ உணர்வூ பூர்வமாக ஆ... வென்று பார்க்கத் தொடங்கி விட்டனர்.
'எங்கட புனிதமான ஊரு... புனிதமான உலமாக்கள உருவாக்குற ஊரு... இங்க... இங்க... இப்பிடியெல்லம் நடக்கியது நல்லமொ... ஹ்ம்... ஹ்ம்... ஒரு சில பொடுபோக்குத் தனமானவனுகள் செய்த வேலயால ஊருக்குக் கெட்ட பேரு ஹ்ம்... ஹ்ம்..."
குரலொலி மாறிக்கேட்ட போது அய்யாஷ்; தலையைத் தூக்கிப் பார்த்துக்கொண்டான். ஆபிதுக்காக்கா. அவரும் சேர்ந்துதான் அழுதுகொண்டிருந்தார். அவனுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. மெதுவாக இரண்டு பக்கங்களையூம் நோட்டம் விட்டான். வழமையாக சிறுசிறு பயான்களில் கதைகள்இ உதாரணங்கள் கூறும் போது கூட என்ன ஏதுவென்று விளங்காமலே தூங்கி விழுந்துகொண்டு; 'ஸொப்ஹானல்லா" என்று சொல்லும் அனைத்துப் பேரும் இஹ்... இஹ் என்று முனகிக் கொண்டிருந்தனர். ஆஹிரம் துனியாவூக்கான தொடர்பை இப்போது இதில் கண்டு கொண்டுவிட்டனரோ என்ற சந்தேகம் எழுந்தது அய்யாஷஷுக்கு. இன்றும் அவன் வித்தியாசப்பட்டுத்தான் போனான். சிரிப்பை அடக்க முடியாத நிலையில்....
அன்றொரு நாள் இதே ஜும்ஆப் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வொன்று அவனுள் வட்டமிட்டது. ஒரு ஒன்பது பத்து வருடங்கள் இருக்கும். அய்யாஷ் அப்போது சாதாரண தர மாணவன். ஜெஸஷுர் மௌலவி வியாபார முறைகள் பற்றி பயான் செய்து கொண்டிருந்தார். ஜும்ஆவின் பின்னான ஸ்பெஷல் பயான். புதிதாகப் பட்டம்பெற்று வெளியேறிய துடிப்பு முழுமையாகவே தெரிந்தது. தான் கண்ட கேட்ட அநீதிகளை வாயாலாவது தடுக்கும் வேகம். அது ஈமானின் இரண்டாம் நிலையல்லவா?
'ஹஸ்ரத்...."
எல்லோருமே ஒருமிக்கத் திரும்பிப் பார்த்தனர். ஷரிபுத்தீன் மாஸ்டர் எழுந்திருந்தார். ஊர்மக்களிடத்தில் ஒரே கேள்விக்குறிஇ பயான்இ பண்ணும் போது இடையில் இப்படிக் குழப்பிப் பேச முடியூமா...?
'ஹஸ்ரத்.... ஏமாத்தி எடுத்துக் கொணுவாரவங்கள் கிட்ட தங்க சாமனம் எடுக்கேலுமா?"
மாஸ்டர் இருந்துவிட்டார். பதிலும் சுடச்சுட வந்துவிழுந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை மௌலவி பயன்படுத்திக் கொண்டார்;. ~வர்ச்சஸ் வியாபாரத்தையொட்டி கருத்துக்களைச் சொல்ல முனைந்தார்.
சபை குசுகுசுக்கத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் பெரிதாக எழும்ப பயான் மஜ்லிஸ் மறுதலையாகத் திரும்பி விட்டது.
'வந்தான்.. வருத்தான்.. இவனுகளுக்கு இப்படி எடமுடேலுமொ..." சில ஹாஜிகளின் சைகையில் அவரது அடியாட்களின் சத்தம் உயர்ந்து கேட்டது. மாஸ்டரும் மௌலவியூம் குழப்பக்காரர்கள் எனப் பெயர் குத்தப்பட்டனர். அடிச்சிய... கொல்லுற என கோபக் கணைகள் பாய்ந்தன. மொட்டைக் கடிதங்கள் பறந்தன. அய்யாஷஷும் கூட்டாளிகளும் விழித்துக் கொண்டனர். உடனடியாக நோட்டீஸ் தயாரானது.
மாஸ்டரின் கேள்வியில் என்ன பிழை இருக்கின்றது? மிம்பரில் இருந்த உமர் (ரலி) இடமே கேள்வி கேட்டார்களென்றால் இங்கு ஏன் முடியாது. இந்த ஏமாத்துக்களெல்லாம் இனியூம் எடுபடாது. ஏமாந்தவர்களது காலம் மலையேறிவிட்டது. இனியூம் அந்தப் பருப்பு எங்களிடம் வேகாது.
இளமைத் துடிப்பின் வேகம். சரியான வழிகாட்டிகள் கிடைத்த உற்சாகம். காரசாரமாக நோட்டீஸ் அமைந்துவிட்டது. சந்தி சந்தியாகவூம் வீடு வீடாகவூம் பேசவூம்பட்டது.
மார்க்க வேலை செய்து திரிந்த ஆபிதுக்காக்கா போன்றவர்களுக் கெல்லம் வெகு கொண்டாட்டம். எங்கடா இந்தப் பொடியன் கோஷ்டியின் முள்ளந்தண்டை உடைப்போம் என்றிருந்தவர்களுக்குஇ ருசுப்படுத்தக்கூடிய ஆதாரம் கிடைத்துவிட்டதென்ற நினைப்பில் ஏகப்பட்ட சந்தோசம்.
பள்ளிகளிலும்இ மையத்து வீடுகளிலும் செய்த பயான்களில் இதுதான் ~கரன்ட் டொபிக்காக மாற்றப்பட்டது. எதிர்ப்பிரசாரத்துக்கான முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டது.
'பருப்புக்கு உப்பு மிச்சமாப் போட்டீச்சும்... அதுதான் வேகீல்லாதது..." ஆபிதுக்காக்காவின் நகைப்பு... மையத்து வீடு சிரிப்பால் இரண்டுபட்டது.
கதைகூறி சிரிக்கவைத்து அதனூடே உண்மை மறைக்கப்பட்டபோது நிகழ்வூ முழுமையாக திசை திருபப்பட்டு விட்டதை இவர்கள் உணர்ந்து கொண்டு விட்டனர்.
'இவனுகள சும்முடப்படாது. ஜமாத்துல் இஸ்லாம் காரணுவள்... எங்கட புனிதமான ஊருல.... ஆ... எங்கட வேல மட்டும் தான் நடக்கோணும்..." சந்தி சந்தியாக ஸாஜித் ஹாஜியின் சகபாடிகள் சூளுரைத்துத் திரிந்தனர்.
ஏதோ இனம் கண்டறியாத நினைத்தும் பார்த்திராத ஒரு புதுப்பெயர்கூறி முத்திரை குத்தப்பட்ட போது அய்யாஷஷும் நண்பர்களும் வித்தியாசமாகச் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். 'ம்ஹ்.... ம்ஹ்.... நாங்க மிச்சம் கவனமா ஈச்சோணும்... துவேஷம் வளர்ந்து வார காலம். நாங்க கொஞ்சம் பேரு நடூக்கஹப்பட்டுக் கொண்டீச்சிய..."
'யா அல்லா எங்கட ஊருட மானம் மருவாரிய காப்பாத்தீடு யா அல்லா.... எங்கடூரக் காப்பாத்தீடு யா அல்லா..."ஆபிது காக்கா ஆவேசமாக துஆச் செய்தார். காலங்கடந்த விகசிப்பு.
அய்யாஷஷுக்குச் சிரிப்பதா அழுவதா என்று கூட விளங்கவில்லை.
கூட்டம் கலைய ஆரம்பித்தது. செருப்பை அணிந்து கொண்டு ஒருவாறு வெளியிறங்கினான் அவன். 'இவனுகள்ட சாயம் பொகச் செல்லதான் இவனுகளுக்கும் கவல வாரது... அழுகுறது புழுகுறது எல்லம்" றாசிக் நானா கூட்டத்தோடு கூட்டமாக நின்று சொல்லிக்கொண்டே போனார்.
'மெய்தான்... ஒவ்வொத்தனுக்கும் யாவரத்துக்குச் சல்லி குடுத்துக் குடுத்து அந்த ஹராத்த வளரத்தது ஊருட பூதெய்யக தான் இப்ப பூராயம் காட்டிய" மன்சூர் நானா உரக்கவே கத்தினார்.
';இப்ப துவேசம் கிவேசம் என்டு கௌம்பி யாவரம் தொழிலுகளுக்கு கஷ்டம் வருமென்ட பயத்தில நடிச்சிய இது"
'இல்லோட்டி... மொய்னாத்தும் இந்தக் கேஸஷுக்கு புடிபட்டொத்தென பொலிசுக்குப் பெய்த்து இவனுகதான் கூட்டிக்கொணுவந்த..." 'மெய்தான்.. மெய்தான்... அந்த நேரத்தில அந்தப் பொடியமன்மாரு இதுகளெல்லாம் நடக்குமென்டு எவளவூ பஸிந்தா எழுதீந்தன். இப்ப அழுது புழுந்து சரிவாரா... இனிச்சரி வெளங்கி நடக்கோணும்.."
கருத்துக்கள் அலைமோதின. காலம் பிந்தியாவது பருப்பு வேகத் தொடங்கிவிட்ட சந்தோஷத்தில் அய்யாஷ் துள்ளி நடந்தான்.
வயிற்றுக்குள்ளும் இன்னொரு குத்பா நடந்து கொண்டிருந்தது.
(2000)அழிந்து போகும் பொய்மைகள்
பஸ் பயணப்பட்டது. ஊருக்குப் போகும் கடைசி பஸ் இதுதான். ஒரு மாதிரியாக ஸீட்டொன்றைப் பிடித்துக் கொண்டார். 'ஆ.... மாஸ்டர்"
'ம்.... அஸ்ஸலாமலைக்கும்" ஒப்புக்குச் சிரித்தேன். இன்னாரென்று கண்டுகொள்ளும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
'மாஸ்டர நான் நேத்துத் தேடிப் போன"
';ஆ... நான் ஊட்டுல நிச்சல்ல. இது இன்டக்குத்தான் வார... நீங்க...."
'நானோ.... நான் பௌலுமுல்ல. மெம்மாலுது நானா... கொச்சிக்கத் தூள் மொம்மாலுதென்டா எல்லாருக்கும் தெரியூம்.."
'ஆ.... மெய்யோ..."
அவர் இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து பதினைந்து பதினாறு வருடங்களுக்கு மேலிருக்கும். என்றாலும் முகத்தளவில் கண்டு சிரித்திருந்தாலும்கூட அனைவரையூம் மொத்தத்தில் எவ்வாறுதான் அறிந்திருக்க முடியூம்?
'சின்னோரு விஷயமாப் போன... இன்டக்கென்டா கட்டாயம் வரோணும்"
'ஹ்ம்... இதுஇ ரெண்டு நாளைக்குப் பொறகு இப்பதான் வாரதேமல்.. பொறகு பாக்கேலேன்"
'இல்ல மாஸ்டர் கட்டாயம் வரோணும். ஏன்ட புள்ளக்குக் கொஞ்சம் நல்லா வருத்தம். அதுக்குத்தான் ரெணு மூணுநாளா தேடிப் போன"
பேச்சோடு பேச்சாக இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. அவர் எழும்ப எத்தனித்தார். மெம்மாலிது நானா கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
'மாஸ்டர் நாங்க அப்பிடியே பெய்துட்டே வரோம். மகள்ட வருத்தம் கூடியிருச்சிய நேரம்... பொறகு நான் கொணந்துடுகியனே.."
'நான் ஊட்டுக்குப் பெய்ட்டு வாரனே..."
'இல்ல மாஸ்டர் அவசரம் அதாலதான்" பரிதாபமாகப் பார்த்தார்.
எல்லோருமே இவ்விருவரின் கூத்தையூம் அவதானிக்கத் தொடங்கிவிட்டனர்.
அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. ~மனிசருட அருமவருத்தம் வெளங்காத ஜென்மங்க மனம் அலுத்துக்கொண்டது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
அவர் ஒரு போதும் ஆசிரியராக வேலை பார்த்தவரல்லர் பெரிதாக ஒன்றும் படித்தவருமல்ல ஏதோ ஒரு காலத்தில் தொற்றிய வாசிப்புப் பழக்கம் அவரை அதில் பைத்தியமாக்கியே விட்டது. பத்திரிகையை வாசிப்பதோடுஇ மட்டும் நின்றுவிடாது தகவல்களை வெட்டி ஒட்டி வகைப்படுத்திஇ பெரியதொரு ஆவணக் காப்பகத்தையே தோற்றுவித்து விட்டாhர். வாசிப்புத் தந்த தைரியம்இ ஊருக்கு முதல் பாலர் பாடசாலையை நிறுவி சின்னஞ் சிறார்களுடன் கூத்தடித்து விளையாடி சிறிசாகவே மாறி ஆக்கத்திறனை வளர்த்து எழுத்துக்களை அறிமுகப்படுத்தி தம் திறமையை நிலை நாட்டிக் கொண்டார். இத்தனைக்கும் அவர் எட்டுவரைதான் படித்திருந்தார்.
அவரது மூத்த மகன் கூட ஒரு ஆசிரியர்தான். மகனது பெயரே இவருக்கும் கொழுகிக் கொண்டது. அவரது பெயரைச் சொன்னால் யாருக்குமே தெரியாது. ஆனால் மாஜிது மாஸ்டர் என்றால் எல்லோருக்குமே தெரியூம் என்ற நிலை. இந்தப் பெயரில் அவர் ஊருவிட்டு ஊராக அறிமுகமாகி பிரபல்யமடைந்துமுள்ளார்.
புதிது காணும் புதிது தேடும் ஆவல்தானோ என்னவோ நாடு சுற்றும் வாலிபனாக இருக்கச் செய்து நேரடியான அனுபவங்களை தொகுத்து வைத்திருந்தார். அறுபதைத் தாண்டிவிட்ட நிலையிலும் அப்படியொரு சுறுசுறுப்பு அவரில் தொற்றியிருந்தது. 'வாங்கொ மாஸ்டர் வாங்கொ... இரீங்கொ" வீட்டில் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. எதிர்பார்த்திருந்ததைப் போல.
'புள்ளக்கெப்பிடியன் சுலைஹா..."
'வருத்தம் கூடிக்கொணுதான் போற... ஏன்ட புள்ளய அல்லாதான் காப்பாத்தோணும்" முகத்தில் கவலை தெரிந்தது.
'அப்ப அவசரமாக புள்ளய ரெடியாக்குங்கெ... மாஸ்டர் எங்கோ பெய்ட்டு வார பைணம் ஊட்டுக்கும் பொகுடாம கையோடயே கூட்டிக் கொணுவந்த"
மாஸ்டருக்கு இருப்புக்கொள்ளவில்லை. இருவரையூம் பார்க்க ஒன்டும் வெளப்பமில்லாத தோதுகள் பொல... என்னது ஏதென்று அறிந்துகொள்ள முடியாத நிலை. சொல்வாரென்று பார்த்தாலும் 'சொகமில்ல" என்று மட்டும் கூறினார்.
'எனத்தியோ தெரியா விசயம்..." மெதுவாக ஆரம்பிப்பதற் குள்ளேயே உள்ளிருந்து அழைப்பு வந்துவிட்டது.
அறைக்குள் நுழையூம் போதே ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டது.
ஒரு டபிள் பெட். ஒரு பெண். வயிற்றுப் பகுதி உயர்ந்து....
'ஸ்... ஏன்டல்லாவே.. புள்ள பொகுத்துப் பொம்புளயொண்டு
உள்ளம் படக்படக்கென அடித்துக்கொண்டது. இப்படித்தான் அவரது இத்தொழில் நினைத்தும் பர்த்திராத கேஸஷுகள் எல்லாம் அவரிடம் வரும். ~புள்ள புள்ள யென்டு சொல்லிய நேரம் ஏதோ ஒரு சாதாரண விடயம் சிறு பிள்ளை என்றுதான் நினைத்தார். இது பிள்ளையைச் சுமந்தவாறு...
சிரித்துக் காட்ட முயன்றாலும் முகம் வியர்வையால் அப்பியி ருந்தது. சூழ்நிலை ஒருவாறு தௌpந்தது.
'மகளுக்கு மொதமொதப்புள்ள... இஞ்ஞம் டேட்டீச்சிய... தொத்தரு சென்ன மய்ரிக்கு ஒன்னர மாசத்துக்கு மேல்ல ஈச்சோணும். அதுக்கெணேன் இப்பவே கொஞ்சம் கொஞ்சம் வருத்தமெடுக்கிய. ஆர்டயாலும் கண்பட்டோ தெரியாண்டு.." சுலைஹா எங்கோ இழுத்துச் செல்வது புரிந்தது.
'மொத மொதலா ஒங்களத்தான் பாக்கப் போன.... நீங்கில்லாச் சொட்டீம் இன்டக்கு மல்வானக்குப் போன. லெப்பும்மா சென்ன மய்ரீக்கெண்டா எனசரி செய்வின செஞ்சீ... மொம்மாலுது நாநா கூறினார்.
'யா அல்லா... ஏன்ட புள்ள ஈபுழுக்காலும் அநியாயம் செஞ்சில்ல. இந்த வேலசெஞ்ச நசரானிகளுக்கு இடிபுழோணும்..." சுலைஹா அரற்றத் தொடங்கினாள்.
அவருக்கு விசித்திரமாயிருந்தது. ~கேதுமதிக்கு போக வேண்டிய கேஸஷுகளெல்லாம் அவரை நாடி வந்தால் அப்படித்தானே இருக்கும். என்றாலும் சமாளித்தாக வேண்டிய நிலை.
'இப்பெப்பிடியன் மகள்..." அருகே சென்று கேட்டார். பாணந்துறை பிள்ளைப் பேறு வாடான கேதுமதியின் மகப்பேற்று வைத்தியர் என்று நினைத்துக் கொள்ளவில்லைதான். ஆனாலும்...
'ஸ்....ஸ்.... கொஞ்சம் கொஞ்சமாக வலிகூடிய மாஸ்டர்... ஆய்.... ஏன்டும்மோவ்" ஸமீனா வருத்தப்பட்டாள்.
அவருக்கு நடக்க இருக்கும் விபரீதம் புரிந்துவிட்டது. கதிரையை அவராகவே இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
'அஊது பில்லாஹி... ம்... ம்..." அவரிடம் முணுமுணுப்பு நீண்டது. அடிக்கொரு தடவை தலை ஆடிக்கொண்டது கண்கள் இரண்டும் மூடி... சத்தம் உயர்ந்து தாழ்ந்து... நிறுத்தி இழுத்து...
'ஆய் ஏன்டும்மோவ்.."
சுலைஹா தலையில் மொட்டாக்கைப் போட்டுஇ கைகளை ஏந்தி... அவள் கண்களில் கண்ணீர் கோடிட்டது. மொம்மாலுது நானாவிலும் தான்.
'தண்ணிக் கோப்பயொண்டு.." மாஸ்டரின் வேண்டுகோள் பறந்த அக்கனமே அது நிறைவேற்றப்பட்டாகியூம் விட்டது.
'லா ஹவ்ல... ம்ம்.." மீண்டும் அதிவேகமாகத் தொடர்ந்தது. இடையிடையே வாயைக் குவித்து 'ஒய்ஸஷு... ஒய்ஸஷு..." என்று கோப்பையிலும் ஊதிக்கொண்டார்.
சந்தனக் கூறின் மணம் அறைமுழுதுமே மாயமான பெண்ணின் முகத்திலும் அமைதி நிலையை ஏற்படுத்தியிருந்தது. ஆன்மீக உச்சநிலை மாதிரி...
'மொம்மாலுது நாநா அவசரமா வாகனமொன்ட பேசிக்கொணு வாங்கொ" ஏதோ ஒரு உலகிலிருந்து வருவது போன்ற சத்தம். மாஸ்டர் அப்படி வழிநடத்தினார். வான் வந்து நிற்கவூம் கூப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவூம் சரியாயிருந்தது. ஒரு மாதிரியாக வானில் ஏற்றி பாணந்துறை ~கேதுமதி வாட்டுக்கு பார்ஸல் பண்ணிவிட்டார்.
மாஸ்டரிடம் அர்த்த பூர்வமான சிரிப்பொன்று உதித்து மறைந்தது.
இந்த ஊருக்கு வந்து காலூன்றிக் கொண்டிருந்தவேளை.. அவரும் கூடவே அவரது மக்களும் ஊரின் சிந்தனையோட்ட எழுச்சியில் பங்காளிகளாக மாறிக்கொண்டிருந்த ஆரம்ப காலம் அது.
ஏதோ ஒன்றுக்கு எப்போதோ ஒருமுறை செய்த கைவைத்தியம் சரியாகிப்போன போது கொஞ்சம் கொஞ்சமாக அவரது கைராசி பிரபலமாக ஆரம்பித்தது.
அவர் சம்பந்தம் செய்த வீட்டில் அவரது மாமா விட்டுச் சென்ற பழைய நாட்டுவைத்தியக் குறிப்பேடு அவருக்கு துணையானது. மூலிகைகளைத் தேடி தாமாகவே மருந்துகளைத் தயாரித்து வழங்கவூம் தொடங்கினார். சிறுவர் முதல் முதியோர் வரையூம் கூடவே சொல்லுவதற்கு கூச்சமாகிப் போய் ஒளித்து ஒளித்து வைத்துக்கொண்டிருந்த பெண்ணியல் ஆணியல் நோய்களுக்கெல்லாம் கைகண்ட மருந்துகளை வழங்கினார்.
மருந்தைவிட எதிர்பார்ப்பது வேறொன்று எனக் கண்ட போது ஓதிப்பார்த்தலில் தொடங்கி தேசிக்காய் வெட்டி அஹுக்காய் வெட்டிஇ இஸஷும் எழுதி தாயத்துக் கட்டி அப்ஜது கணக்குப் போட்டு... அவரது பணி நீண்டு போனது.
மக்களால் இவைகளில்லாத வைத்தியம் எடுபடாமல் போனபோது பின்னைய விடயங்களாலேயே மிகப்பிரபலமாகிவிட்டார். நடுச்சாமமெல்லாம் வீடு தட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படும் நிலை தோன்றிவிட்டது. ஜின்களை ஓட்டப்போய் ஜின்கள் அவரையே ஓட்டி அலைக்கழித்துச் சென்ற சுவாரசியமான நிகழ்வூகளும் நடக்கத்தான் செய்தன.
'மாஸ்டர் செஞ்ச ஒதவிய எங்களுக்கு ஒருநாளும் மறக்கேலா..." மொம்மாலுது நாநா சொன்னார். 'ஓ... ஓ... அந்த நேரத்துல கொணய்த்துப் பட்டீச்சோட்டி ஏன்ட புள்ளக்கே ஆபத்தா முடிஞ்சீச்சும். தொத்தர் மாரு ஏசின ஏச்சி... ஏன்டல்லாவே... ஆரன் நெனச்ச இப்பிடி கொறமாசத்துலே கெடச்சுமென்டு.." சுலைஹும்மா பெருமிதப்பட்டாள்.
'அல்லா தாரெவரெயூம் பாதுகாக்கோணும்... ஆ... மாஸ்டர் வந்து புள்ளயப் பாருங்கெ..."
மாஸ்டரின் உள்ளம் நெகிழ்ந்துதான் போனது. உம்மாவூம் வாப்பாவூம் சற்றே விலகிய போது...!
'எப்பிடியன் மகள்..."
'நல்லம் மாஸ்டர்;...." ஸமீனா பதில் கூறினார்.
'நீங்க படிச்ச புள்ள. நல்லா யோசிச்சோணும்இ இப்பிடி எனசரி விஷயம் நடந்தென்டா டொக்டர்ட்ட பெய்த்து காட்டிக் கொளோணும். இதுக்கு ஓதிப்பார்த்துச் சரிவாரல்ல. இதுபாருங்கொ அந்த லெப்பும்மா ஒங்கட வாப்பக்கு குடுத்தீச்சிய லிஸ்ட்..."
'ஓ.... மாஸ்டர் நானும் பாத்த... பத்தாயிரம் மட்டு செலவழீதாம்... உம்மாம் வாப்போம் சென்ன மாய்ரி இந்தப் பொய்கள நம்பீந்தா ஏன்ட உசிரு பெய்த்து.... நீங்க வந்து சரியான நேரத்துல அனுப்பி வெச்ச.."
'இந்த பாமரமக்களுக்கு வெளங்க வெச்சேல.. படிச்ச புள்ளகள் வெளங்கிக்கொள்ளோணும்" மாஸ்டர் தீட்சண்யத்துடன் சொன்னார்.
'மெய்தான் மாஸ்டர்" ஸமீனா அர்த்த பூர்வமாக ஏற்றுக் கொண்டாள்.
(1999) அறுந்து போன முடிச்சு
பின் பக்கச் சாக்கை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்: சாரூஜ். மாதம் ஒவ்வொன்றிலும் வந்துபோகும் இருபத்தியோராம் திகதியெல்லாம் இவ்வாறுதான். களிசானின் பின்பக்கச் சாக்கு பாரம் கூடிவிட்டது போன்ற ஒரு பிரமை. எண்ணிச் சுட்ட பணியாரமும் கணக்கத்தான் செய்தது.
எட்டி எட்டி பஸ்ஸைப் பார்த்தான். தேவையான நேரத்துக்கு எப்போதுதான் பஸ்வந்திருக்கிறது. களுத்துறை டவூனுக்குப் போவதற்கென்றால் ஓரிரண்டு பஸ்கள் வரத்தான் செய்தன. வழமையாக அவன் அதிலேறி பண்டாரகமை பஸ்ஸைப் பிடித்துவிட்டானென்றால் ஒரு குட்டித் தூக்கம் போட்டவாறே ஊருக்குச் சென்றுவிடுவான். ஆனால் இன்று மட்டும்...
ஒரு மாதிரியாக கொழும்பு பஸ்ஸொன்று வருவது தெரிந்தது. ஆறுதலாக இருந்துபோக இன்டர்சிட்டியில் கூட ஒரு ஸீட் கிடைக்காத நேரம் இதுஇ நோர்மல் பஸ்ஸில் எப்படித்தான் ஸீட் கிடைக்கும். வெளியிலிருந்து பார்க்கும் போதே ஏறிநிற்க முடியூமா எனச் சந்தேகிக்க வேண்டியிருந்தது. அப்பிடிச் சனம். ஏறிக்கொண்டான். ஒரு மாதிரியாக இடித்து நெரித்து முட்டி மோதி பின்பக்க ஸீட்டொன்றை அண்மி இரும்புக் கம்பியைப் பலமாகப் பிடித்துக் கொண்டான். ஒருகாலை வைத்துக்கொள்வதற்கு மிகச் சிரமப்பட்டுத்தான் இடம் தேடிக் கொண்டான். இந்த நிலையில் உடம்பை சமப்படுத்தி நிற்பது பெரும் சிரமமாகத்தானிருந்தது.
'டிக்கட் கன்னஇ டிக்கட் கன்ன" நடத்துனன் கத்தினான். அவனுக்கெங்கே மனிதரின் கஷ்டம் விளங்கப் போகிறது. பஸ் போகும் வேகத்தில் ஒரு கையை விட்டால் அடுத்துச் சரிதான் மோதித் தளம்ப வேண்டி வரும். ஒரு மாதிரியாக காசை எடுத்து 'மலே வீதிய எகய்" என்றான்.
வழமையாக இவ்வாறுதான். நெருக்கி முட்டிப்பட வேண்டிய பஸ்ஸென்றால் முன்பகுதியில் போய் நின்றுவிடுவான். அல்லது பின்பகுதியில் தஞ்சம் கொள்வான். ஏ.எல் மாணவனாக இருந்த போது வந்த பழக்கம். ஊரிலிருந்து சரிக்கமுல்லைக்கு மூன்று பஸ்தாண்டிப் போக வேண்டும். ஆறரை தாண்டினால் போதும் வெள்ளைக் கொக்குகளால் பஸ் நிரம்பி வழியூம். பஸ்ஸின் மையப் பகுதி முழுவதையூம் குட்டைப் பாவாடைப் பெண்பிள்ளைகள் ஆக்கிரமித்துவிடுவர். அதன் இடை நடுவில் சொறுகிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்திலேயே மிகப் பிந்தியேறுவோரும் இருக்கத்தான்செய்தனர். தனது ஆளின் கிட்ட நெருங்கி... இன்ப லோகத்தில் சங்கமித்துவிடுவர். உரிய காலவயது வியாதி. இரண்டு பக்கத்தாருமே இதனை விரும்பத்தான் செய்தனர். அத்துமீறிப் போன விடயங்களும் இருக்கத்தான் செய்தன.
இவனும் மிஸ்வரும் மட்டும் முன்னால் டிரைவரோடு ஒட்டிவிடுவார்கள். இல்லையேல் பின்பகுதியே தஞ்சமென்று இருந்துவிடுவர். அந்தப் பழக்கம் அன்று தொடங்கி இன்றுவரை நீளத்தான் செய்தது.
பின்பக்க ஸீட்டைக் கொஞ்சம் ஏறிட்டான். ஒரு ~ஜோடு மெய்மறந்த நிலையில்... கண்களை மூடி முகத்தைத் திருப்பிக்கொண்டான். பின்பக்கம் வந்தால் இதுதான் பிரச்சினை. யார்தான் முன்னால் நின்றாலும் இந்த ஜோடுகளின் கண்கள் குருடுபட்டுப் போய் இருக்கும். இன்டர்சிட்டிகளில் அது எல்லை மீறி... சுரையாவின் முகம் கண்களுக்குள் நிழலாடியது.
'புள்ளக்கு மா இல்ல... வரச்செல்ல எடுத்துக்கொணு வாங்கொ"
'வாப்பா வாப்பா எனக்கு பறக்ககப்பலொன்டு கொணாங்கொ" அதற்குள் மூத்தவன் வந்து கால்களைப் பிடித்துக் கொண்டான்.
அடுத்த வீட்டுக் கய்ஜும்மாவின் பேரன் வைத்து விளையாடிய பொம்மைப் பிளேனைக் கண்டதிலிருந்து இவனும் எத்தனையோ முறை சொல்லிவிட்டான். எங்கேதான் அதற்கு வசதிகள் கிடைக்கும். சில வேளைகளில் பயணம் புறப்பட்டால் பஸ்ஸஷுக்கு மட்டுமே சில்லறைகள் எண்ணி எடுத்துப் போவான். இந்த நிலையில்...
'ஹா... ஹா புள்ளக்கு நல்ல பஸிந்தான பறக்ககப்பலொன்டு கொணந்து தாரனே" எப்படியோ சமாளித்துவிட்டு வெளியிறங்க வேண்டிய நிலை.
என்ன செய்வது மகனுக்கென்று எத்தனையோ விடயங்கள் செய்து கொடுக்க வேண்டுமென்று ஆசைதான். இந்த விலை வாசியில் எதைத்தான் செய்வது?
ஒவ்வொரு மாதமும் கடைக்கு வரும் கணக்கைத் தீர்ப்பதுகூட பெரும்பாடு. இத்தனைக்கும் வாய்க்கு ருசியாக ஏதாவது விசேசம் செய்து சாப்பிட்டநாளே நினைவிலில்லை. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழத்தான் செய்கின்றது.
மாஸ்டர் நாங்களும் ரோல்லதான் ஓடுற... பாருங்கெ...இன்டக்கு மரக்கறிசாமனுகள கொணந்துகொளவாலும் வழீல்ல.." பாரூக்நாநா ஒருமாதிரி சொல்வார்.
'சரி.. சரி... அடுத்த மொற பாப்பமே"
ஏதோ ஒன்றால் தாக்குண்டவன் போல் மனதுக்குள் குமைந்துகொண்டு வெளியிறங்குவான். அவனுக்குத் தெரியூம் அவனால் அந்தக் கடைக்கு நிரந்தர லாபம் கிட்டத்தான் செய்தது. மாதக்கடைசியில் பெரும்பாலும் பணம் கடையைப் போய் அடைந்துவிடும்.
கடனில்லாமல் வாழுவமே என்று எத்தனையோ முறை. அவன் முயற்சிசெய்து பார்த்து விட்டான். 'ஹுஹ்ம்" இன்றுவரை அது கைகூடவில்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு புதுச்செலவூ முளைத்துக்கொண்டே இருக்கும். வந்த காசு கரைந்து கொண்டே போகும். மாத இறுதியில்...
'ச்சர்ராஸ்..."
முன்னால் போய் பின்வந்து நின்றான். அரை மயக்கத்தோடு கனவூ நிலையில் நின்றுகொண்டே போட்டதூக்கம் கலைந்த நிலையில்...
இப்படித்தான் அவன்... பஸ்ஸில் ஏறினானென்றால் இருந்து கொண்டும் நின்று கொண்டும் தூங்குவான். வீட்டிலும் கூட இந்த ~வணக்கம் அதிகம்தான். நண்பர்கள் வந்தால் 'பேராசிரியர் தூக்கம் நிச்சியோ...? " என்றுதான் கேட்பர்.
இது மட்டும் ஏ.எல். வேளையில் அவன் வசப்பட்டிருந்தால் இன்று அவன் நிலை வேறாகித்தானிருக்கும். அவனுக்கு கீழால் வகுப்பில் திறமையில் குறைந்திருந்தவர்களும் கூட இன்று பெரிய நிலையில்... ஆசிக் இன்று எம்.பீ.பீ.எஸ் முடித்து... வகுப்பிலென்றால் இவன்தான் அவனுக்கு சில விடயங்களை விளங்கப்படுத்திவிடுவான்.
பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சற்றுக் குனிந்து பெயர்ப் பலகையொன்றை உற்று நோக்கினான். மொரட்டுவையைத் தாண்டி பஸ்வண்டி போய்க்கொண்டிருந்தது. அதே வேகத்தில் அவனது மனமும்...
இந்த மாத பட்ஜெட்டை தூக்கியெடுத்து மனதுக்குள் நிறுத்தினான். கடைக்கொரு கணக்கு இறைச்சிப் பொம்புளைக்கு ஒரு கணக்கு. பால்காரன். பத்திரிகைக்காரன்... என பட்டியல் நீண்டு சென்றது. எல்லாவற்றுக்கும் போக மிச்சம்...
இந்த முறையாவது சுரையாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். அவளுக்கென்று ஒரு கிட்.... ஹுஹ்ம்... இந்த மாதமும் சரிப்பட்டு வராத நிலைதான். போன மாதத்துக்கு முந்தி நண்பனிடம் பெற்ற கடனை இன்னும் ஒப்படைக்கவில்லையே...
அவளைப்பற்றி அவனுக்கு ஆடம்பரமாகத்தான் இருந்தது அவனுக்கென்றே வாய்த்தவள் என்ற நினைவூ. இல்லையென்றால் இத்தனைக்கு மத்தியிலும் எவ்வளவூ ஒத்துழைப்போடு இருக்கின்றாள். எதனையூம்... எதனையூமே சுட்டிக்காட்டி ஒரு போதும் வாய் திறந்ததே இல்லை. ஏதாவது வேண்டுமென்றாவது... ஏன் பெருநாளைக்குக்கூட அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதாவது...
அவன் கண்டிருக்கிறான். எத்தனை வீடுகளில் எத்தனைக் குடும்பங்கள் இந்தச் சின்னச் சின்னச் விடயங்களால் அமைதியை இழந்திருக்கின்றன. பிரிந்துபோன குடும்பங்கள் தான் எத்தனை?
ஒருத்தர் போக ஒருத்தரென்று நோயூற்றுப் போகும் சந்தர்ப்பங்களில் அவன் ~ரிம் மில்தான் ஓடுவான். எடுக்கும் பணம் முழுமையாக தேவைகளுக்கே போய்விட்ட நிலையில் இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கையாள்வது மிகக் கடினம்தான். என்னதான் செய்வது. இனி நண்பர்களை நாடி ஓட வேண்டியதுதான். அவர்களும் அரச தொழில் புரிபவர்கள் என்றாய்விட்ட நிலையில் அங்கும் கிடைக்காவிட்டால் இனி அல்லாட்டம் தான். வழமையாக தன்னை மதிக்காத அல்லது அரசத் தொழிலென்றால் இளக்காரமாகக் கருதும் எவரையூம் அவன் இப்படியான விடயங்களுக்கு அண்டுவதில்லை. சுயமரியாதையை இழக்க ஒரு போதும் அவன் உடன்படவில்லை. வால் பிடித்தல் ~கேஸ்களை அவன் துச்சமான செயலாகவே நினைத்தான். நான் நானாக வாழவேண்டும் என்ற எண்ணம் அவனுள் எப்போதும் உண்டு.
நிரந்தரச் சம்பளக்காரர் என்று வரும்போது நின்று பிடிப்பது மிகக் கடினம்தான். பணவீக்கத்தின் தாளத்துக்கு ஈடுகொடுக்கும் நிலை இவர்களிடம் எப்போதும் இல்லையே... சம்பளத்தில் நூறு ரூபா அதிகரித்தால் வாழ்க்கைச் செலவூ ஆயிரம் ரூபாவால் அதிகரித்திருக்கும். இது யாருக்குத்தான் விளங்கப் போகின்றது.
அன்றொரு நாள்... அவனுக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. அவன் பீ.ஈ.டீ. ~கோஸ் ஸஷுக்கு தெரிவாகியிருந்தான். திறந்த பல்கலைக்கழகத்தில் தான் செய்ய வேண்டும். முதற் கட்டப் பணமாக ஏழாயிரத்தைந்நூறு ரூபா வந்திருந்தது. இத்தொகையைப் பார்த்ததுமே அவன் மனம் இடிந்துதான் போனான்.
ஆசிரிய வாழ்க்கையில் கல்வியியல் பட்டதாரியாவது எதிர்காலத்தில் மிக அதிகமான வாய்ப்புக்களைக் கொண்டுவந்து தருமென்று தெரிந்திருந்தான். இருந்தும் என்ன செய்ய கிடப்பில் போட்டுவிட்டான். முடிவூநாள் நெருங்கும் போதுதான் திரும்ப ஒரு ஆசை வந்தது. நண்பர்களும் தூண்டிக்கொண்டிருந்தார்கள். இனி யாரிடம் தான் தேடுவது. கேட்கக் கூடிய எல்லோரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டான். கிடைக்கவேயில்லை...
முடிவூநாள் நாளை. விட்டுவிடத் தீர்மானித்தான்.
'நீங்க நாளக்குப் போறௌ..." சுரையாதான்.
'எங்கன்..."
'ஓபன் யூனிவர்சிட்டிக்கு.."
'இல்ல சுரையா... அவளவூ பெரிய தொகைய நான் எப்பிடிக் கட்டவன்"
'அதல்ல... அதச் செஞ்சா முன்னுக்கு மிச்சம் நல்லமெலியன்... நான் ஒரு வழி செல்லியன்.."
'எனத்தியன்..." எப்படித்தான் அவளால் உதவமுடியூம். அவள் கூட யாரிடமும் எதையூம் கேட்க விரும்பாதவளாயிற்றே... கணவனைக் காட்டிக் கொடுக்க அவள் விரும்புவாளா?
நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவன் உள்ளங்கையை விரித்து அவள் மூடியிருந்த தன் கைகளால் பொத்தினாள்.
'சு... சுரை... நீ... நீங்க.." அவனது கை ஆட்டம் கண்டது.
'இதக் கொணய்த்து வித்துட்டு சல்லியக் கட்டுங்கொ...பொறகு எடுத்துக்கொளேலன்..." அவளிடமிருந்த தங்கச் செயின் அவன் கைகளில் மினுங்கிக்கொண்டிருந்தது.
'இல்ல... இல்ல சுரை இத வெச்சிக்கொங்கொ.."
'நாங்க எங்கட நலவப் பாக்கோணுமென்டா இத நீங்க எடுக்கத்தான் வேணும். அத இப்ப நீங்க எடுக்கோட்டி நான் அத இனிமே கழத்தில போடுறௌமில்ல.." உறுதியாகத்தான் சொன்னாள்.
அவனது கண்கள் குளமாக..
அவளுக்காக அவன் என்னத்தைத்தான் எடுத்துக் கொடுத்திருந்தான்@ இத்தனைக் காலத்திலும் பெரிதாக சொல்லிக் கூறிக்கொள்ளுமளவிற்கு...
ஆசிரியத் தொழிலின் திருப்தி மாணவ அடைவை கண்டு கொள்வதில்தான். அதில் கிடைக்கும் சம்பளம் எப்படிப்போனாலும் அந்த உளத்திருப்தியை வேறெதில்தான் கண்டு கொள்ள முடியூம்.
இந்த தொழிலில் பொருளாதார ரீதியாக எதனைத்தான் எதிர்பார்க்க முடியூம்? சேவை என்ற ஒன்றைத்தவிர...
வேறு தொழில்களைப் போல இதில் போனஸ்களோ ஓவர்டைமோ இல்லை. வெறும் நேர போனஸ் மட்டும்தான். அதுவூம் புதிய கல்விச்சீர்திருத்தத்தில் அந்த நேரத்தோடு மேலதிகமாக காசுமல்லவா பிடுங்கி எடுக்கப்படுகிறது. ஆனால் அதில் கூட அவன் காணும் நிறை மாணவர்களை நெருங்கக் கிடைப்பதுதான். சரியான வழிப்படுத்தலைச் செய்வதற்கு பூரணமான சந்தர்ப்பம் கிடைப்பதுதான்.
இதில் ஏதாவது விசேசமென்றால் வருடத்துக்கொரு முறை வரும். எக்ஸாம் ஸஷுபர்வைஸிங்கும் பேபர் கெரெக்ஷனும் மட்டும்தான். இவைதான் வருடத்துக்கொரு முறையாவது ஏதாவது விசேடங்கள் செய்யக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு. ஒருவாறாக கருணாபால பிரின்ஸிபலோடு சேர்ந்து பரீட்சை மேற்பார்வையாளராகப் போகத் தொடங்கிவிட்டான். வினாத்தாள் திருத்துதலை சரி செய்து கொள்ளத்தான் இன்றைய பயணம். எப்படியோ ஒருமுறை லிஸ்டில் பெயரை பதித்துக் கொண்டால்... தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கைஇ அதுவே வழமையூம்கூட.
'மலே வீதிய பஹினவத"
நடத்துனரின் சப்தத்தைக் கேட்டு நிதானித்துக் கொண்டான்.
தள்ளிஇ முட்டிஇ மோதிஇ காலை இழுத்துஇ அப்பாடா... என்று இறங்கிக்கொண்டான். இரண்டு மூன்று அடிதான் நடந்திருப்பான்.
ஏதோவொன்று நடந்துவிட்டது போன்ற பிரமைஇ உள்மனம் குழம்பிக்கொண்டது. விழித்துக்கொண்டது.
'யா அல்லாஹ்"
பின்பக்கத்தைத் தொட்டான் முன்பக்கத்தைத் தொட்டான். சாக்குகளுக்குள் கையை விட்டுப் பார்த்தான்.
திரும்பத்... திரும்ப... 'ஏன்டல்லாவே..."
கைகளும் கால்களும் நடுங்க முழுவதுமாக வியர்த்துக் கொட்ட...
கண்களிருண்டு வானமே தலையில் இடிந்து விழுவH போல...
~முழுச் சம்பளமும்....
(2000) அமானுஷ்யம்
'மகேன்... இங்க வாங்கொ சொல்தொரக்கு..."
எனக்குத்தான் அழைப்பு.
மேல்மாடியை நோக்கிய படிகளில் பாய்ந்து பாய்ந்து ஏறினேன்.
எப்போதும் அப்பாவூடனேயே ஒட்டி நிற்கும் பண்பு எனக்கு. அவரது வேலைகள் அனைத்திலும் நானும் கையாளாக மாறிவிடுவேன்.
அவருக்கும் தனது பேரப்பிள்ளைகளில் என்மீதுதான் அலாதிப் பிரியம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அவரது ஓய்வூ நாள். எழுபதைத் தாண்டிய இவ்வயதிலும் மிகவூம் சுறுசுறுப்பானவர். வீட்டின் மேல்மாடிபோல் பலகைகளால் உண்டாக்கப்பட்ட பகுதியைத் துப்பரவாக்குவதுதான் இன்றைய வேலை. வீட்டின் கீழ்ப்பகுதியைப் போன்றே மேல்பகுதியூம் விசாலமானது. அசல் இரண்டாம் மாடிதான். ஆனால் அது சிற்சிலத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உம்மும்மா அதனை ~மேரியூ+டு என்றுதான் அழைப்பார். ~மேல்வீடு தான் மேரியூ+டு என திரிபுபட்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் உம்மா ~கொட்டு என்று சொல்லித்தந்ததில் எமக்கும் அதுவே நின்றுவிட்டது.
'நான் சாமனுகள ஓரத்துக்காக்கியன். நீங்க தூத்துக்கொணு வாங்கொ..."
அவர் பொருட்களைத் துடைத்துத் துடைத்து ஓரமாக்கி வைக்க நான் கூட்டத் தொடங்கினேன்.
'மகேன் ஒனேத் தெரீமோ... ஒருக்க பெரிய தமுழக் கொழப்பமொன்டு வந்தெலியன்... ஒங்கட உம்மோம் அந்த நேரத்தில சிறிசி;... இனி அந்த டைமில ஊருல படிச்சிக் குடுத்த தமுழ் மாஸ்டர்மாரு இந்த சொல்தொரைலதான் ஒளிச்சீந்த..."
இவ்வாறுதான் தான் கூறப் போகும் கதைக்கு முன்னுரை சொன்னார்.
அவரது அனுபவ முத்திரைகள் ஏராளம்... ஏராளம்... ஏதாவது ஒரு நேரத்தில் தனது வாழ்வில் நடந்ததைஇ தான் கண்டதை கேட்டதை அப்படியே என்னிடம் ஒப்புவிப்பார். இதற்காகவே நான் தவங்கிடந்ததுமுண்டு.
எனக்கும் கதை கேட்பதென்றால் தனிக்குஷி. அதிலும் அப்பாதான் சொல்வாரென்றால்இ அவரது பாணியே தனியானது. சுகமாகக் காது தாழ்த்திக் கேட்பேன்.
இப்போது எனது பணி தூண்டிவிடுவதுதான்.
'ஏச்சியன் அப்பா அது..? செல்லுங்கெ கதய..." என்னை உள்வாங்கிக் கொண்டார் என்பது அவரது அங்க அசைவூகளிலிருந்து தெரிந்தது. வேலையில் மும்முரமாக ஈடுபட்டபடியே கதையைத் தொடங்கினார்.
'இப்பொரு முப்பத்தஞ்சி நாப்பது வருஷத்துக்கு முந்தி பெரிய தமுழக் கொழப்ப மொன்டு வந்த... இங்கால சைட்டுகள்ல ஈந்த தமுழாக்கள சிங்களாக்க தேடித்தேடி அடிச்சிப் போட்ட... கடகள பத்தவச்ச.... எத்தனையோ பேரு அதால செத்துப் போன... தமுழாக்க எங்கசரி நிச்சியெண்டு கேள்விப்பட்டால் போதும் படபடயாத்தான் அடிச்சப் போற.... அதேபோல யாழ்ப்பாணத்துலயூம் சிங்களாக்கள தேடித் தேடியடிச்ச...".
'மெய்யோவா..... அப்பா...... ஏத்துக்கனா...?
விவரம் புரியத் தொடங்கி தேடித்தேடிக் கற்கத் தொடங்கியிருந்த காலம் அது. கிண்டிக் கிளறி பழைய புத்தகக் கட்டுகளிலிருந்து தேடியெடுத்து வாசிக்கும் ஆர்வம். அப்போதே செங்கை ஆழியானின் பல்கலைக்கழக நாவல் ~கங்கைக் கரையோரத்தை படித்த ஞாபகம். இப்படி எத்தனையோ புத்தகங்கள்இ சஞ்சிகைகள் வாசித்து வாசித்து கதைகளில் ஓர் அலாதிப்பிரியம். அப்பாவை மேலும் கிண்டி விட்டேன். 'ம்... ஓ.... ஓ.... மெய்தான். அந்தக் கொழப்பம் மிச்சம் கரமாயீந்த. அதுக்குக் காரணம் கொட ஈச்சிய... அதுவூம் பெரியோரு கததான். நான் வெளப்பமாச் செல்லியனே..."
இரண்டாவது அமர்வூக்கு நான் தயாராகிவிட்டேன். வாய் மூடி காது தாழ்த்தி...
'அந்தக் காலத்துல எங்கட ஸ்கூல்ல யாழ்ப்பாணத்துத் தமுழ் மாஸ்டர்மாருதான் ஈந்த... இப்பீச்சிய மாஸ்டர்மார அவங்கட அருகுலயாலும் வெச்சேலா... அவங்களுக்கிட்ட அஞ்சாம் ஆறாம் வொகுப்பு படிச்சாலே போதும். கொழப்படைமுல இங்க மிஞ்சியிருந்தது சிவலிங்கம் மாஸ்டரும் கார்த்திக்கேசு மாஸ்டரும்தான்... மத்தவங்களெல்லம் மாறிப் பெய்த்தீந்த.
அந்த ரெண்டு பேரும் மய்க்கியன் நாநட ஊட்டுலதான்இ போட்டாயீந்த.." அலட்டல் ஏதுமின்றி கதை தொடர்ந்தது.
ஒருநாள் நான் ஊட்டுக்கிட்ட வேலயொன்டு செஞ்சிக்கொண்டீந்த... அந்த நேரத்துல இந்தக் கொழப்பங்களக் கேட்டுட்டு பயந்து மய்க்கியன் நாநா ஓடியோடி வந்த...
'ஏச்சியன் மய்க்கியனிது ஹத்திபோட்டுக்கொண்டு ஓடி வார..." 'இ... இல்ல சமிநாநா.... அ... அவனுகள்...." வெளங்கீட்ட. எனசரி பெரிய இடியொன்டுதானென்டு
'சரி.... சரி... அன்டரதெமழ பேசாம விஷயத்தச் செல்லு என்டு சென்னதுக்குப் பொறகுதான் விஷயத்தச் சென்ன"
'எங்கடூருல தமுழ மாஸ்டர்மாரு நிச்சியத்தக் கேள்விப்பட்டு சிங்களவனுக வரப்போறாம். இப்பதான் பொடிசிஞ்ஞோ வந்து செல்லீட்டுப் போற.... எனக்கெனக்காப் பயம் சமிநாநா..."
'இதக் கேட்ட எனக்கு நிக்க நிப்படமில்லாப்பெய்த்த. அவரேம் கூட்டிக்கொண்டு மலயால ஏறி ஸ்கூலுக்கிட்டக்கு ஓடிப்போன... முந்தியெல்லம் மலயால இப்பபோல வரப்பொக ஏலா... பெரிய்ய காடு... பெரிய பெரிய பிம்புரன் மலப்பாம்பு எல்லம் ஈந்த... எப்பிடிச்சரி மாஸ்டர் மாரு ரெண்டு பேரையூம் மலயாலேம எங்கடூட்டுக்கு கூட்டிக்கொணு வந்த. ரெண்டு பேருமே நல்லாப் பயந்து.... இங்க வந்து இந்த சொல்தொரைல தான் ஏத்திவெச்சது.
நாங்க வந்து கொஞ்ச நேரத்துல கலூட்டு மண்டி பொக்கத்தாலயூம் வீதாகமப் பொகத்தாலயூம் செல சிங்களவனுக வந்து மாஸ்டர்மார தேடித்திரிஞ்சீச்சிய...
எல்லா எடத்துலயூம் பாத்தும் அம்புட்டில்ல. அவனுகளுக்குத் தெரீம் ஒரெடத்திலேம் இல்லோட்டி இங்கதான் நிச்சுமென்டு. அதுக்கெனேன் ஒத்தனாலும் எங்கடூட்டுத் தோட்டத்துலயாலும் காலடி எடுத்து வெச்சல்ல. எங்கட வாப்பட பேரக்கேட்டலே போதும் சூத்துல கால்படப்படத்தான் ஓடுற..."
நான் ~களுக் என்று சிரித்துவிட்டேன்.
என்னைப் பார்த்து அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
'இனியினி அப்பா.. செல்லுங்கே."
'கொழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக கொறைதத்துக்கு ஆறேழு நாள் புடிச்ச... அதுவரக்கும் மாஸ்டர்மாரு ரெண்டு பேரும் இதுலதான் தங்கியீந்த... முத்தத்துக்காலும் எறங்கல்ல..
பொறகுதான் கேள்விப்பட்ட இப்பிடியானாக்கள அவங்கவங்கட ஊருக்குக் கொணுபெய்த்துட பொலிஸால ஏற்பாடு செஞ்சீச்சியெண்டு.
பொறகு நான் பண்டாரகமயால ஆமக்காரொன்ட புடிச்சி ஸ்கோல மஹத்தயாவையூம் ஏத்திக்கொணு வந்த... அவங்க ரெண்டு பேரையூம் ஏத்தி மறச்சி நானும் ஸ்கோல மஹத்தயாவூம் எங்கட நாநாவூம் ஏறிக்கொண்ட...
காரு கொரக்கஸ்ஹந்திக்குப் போனதுதான் மிச்சம் படபடென்டு கெழகெழயா ஆள்க்க வந்து காரச் சூழ்ந்துகொண்டெலியன்... ஒவ்வொருத்தருட கைலயூம் கம்பும்இ பொல்லும்இ கத்தியூம்..." 'ஏன்டல்லா... இனி ஏச்சியன் நடந்த... எப்பிடியன் தப்பின"
ஆவலும் பயமும் பொங்க வினவினேன்.
நாங்க மூணுபேரும் காருக்குள்ளீந்து எறங்கினத்தக் கண்டதேமல் ஒத்தனாலும் அந்தப் பொக்கத்துலயாலும் நிச்சல்ல..
எங்கட நானாஇ ராலஹாமி... நான் வெல்முலாதாணி பண்டாரகம ஸ்கூல் பிரின்ஸிபல்தான் ஸ்கோல மஹத்தயா....
பொறகு... பண்டாரகம பொலீஸால ஒத்தரையூம் ஏத்திக்கொண்டு கொழும்புக்குப் போன... அவங்கள மறச்சி மிச்சம் பாதுகாப்பாக கொண்டுபோன...
கொழும்பு கிட்டாக கிட்டாகத்தான் எங்கட பயமும் கூடின. ஊருப் பொக்கத்துல எங்கட ஆட்டத்தப் போட்டத்துக்கு கொழும்புல எங்களத் தெரிஞ்சாக்கள் இல்லேலியன்.
செலசெல எடங்கள்ள கம்பு பொல்லுகளோட நின்டதான். நாங்க மிச்சம் கவனமாப் போனத்தால தப்பிக்கொண்ட இல்லோட்டி எங்களுக்கும் சேத்தித்தான் அடிபட்டீச்சும். அல்லாட காவல்ல பெரிய பொலிஸ் ஸ்டேசனுக்குப் பெய்த்து ரெண்டு பேரையூம் அங்க பாரம் குடுத்து பொலிஸ் காவலுங்குட எக்ஸ்பிரஸ் கோச்சில ஏத்தியூட்டுத்தான் வந்த
'ஏம்பன் அப்பா கோச்சில அனுப்பின..."
விடயங்களைத் துல்லியமாகக் கேட்டுக்கொள்ளும் ஆவல்.
'பஸ்ஸஷுகள்ல போனா நிப்பாட்டி அடிச்சேலும். அதாலதான் கோச்சில நெடுகே நிப்பட்டாம எக்ஸ்பிரஸ் கோச்சில அனுப்பிற... அதூம் மிச்சம் கவனமா கோச்சி றௌட்டுகள பாத்துட்டுத்தான்."
'அப்ப அவங்க ஊருக்குப் பெய்த்துச் சேந்தாமொ அப்பா..."
'ஓ.... ஓ.... ஊருக்குப் பெய்த்து காயிதமும் எழுதீந்த..."
'ம்ஹ்...." அப்பாவிடமிருந்து பெருமூச்சொன்று கிளம்பியது.
'ஆ... மகன் வாங்கொ எறங்கோம்..."
கதையோடு கதையாக வேலை முடிந்துவிட்டதை அப்போதுதான் கண்டு கொண்டேன். கதையில் மூழ்கிப் போயிருந்ததால் வேறொன்றுமே விளங்கியிருக்கவில்லை.
வேலை முடிந்த கையோடு கீழிறங்கினோம். கதவூ தட்டப்படும் சப்தம் கேட்கவே நான் இஸ்தோப்பை எட்டிப் பார்த்தேன்.
ஆறேழுபேர் சோர்ந்த முகத்துடன் பெட்டி படுக்கைகளுடன் எட்டிப் பார்ப்பது தெரிந்தது.
அப்பாவின் முகத்தை ஏறிட்டேன்.
'அஸ்ஸலாமலைக்கூம்.... நாங்க யாழ்ப்பாணத்தச் சேர்ந்தவங்க... அப்துல்லா தொர நீங்கதானே... கார்த்திக்கேசு மாஸ்ட்டர் இந்த கடிதத்த உங்கள்ட்ட தரச் சொன்னவர்.." வந்தவர் மூச்சுவிடாமல் கதைத்து முடித்தார். 'அப்பா கடிதத்தைப் பிரித்தார்.
'வணக்கம்"
மதிப்புக்குரிய அப்துல்லா அவர்களுக்கு...
உங்களது பொறுப்பில் இந்தக் குடும்பத்தை விட நாடியே இக்கடிதம் வரைகிறேன். நகமும் சதையூம் போல வாழ்ந்த எம்மை வெருட்டி... சகோதர முஸ்லிம்களை வெறுமனே இரண்டே இரண்டு மணி நேரத்தில் எம்முடனேயே இருந்த பயங்கரவாதிகள் துரத்தி அடித்து விட்டனர். பல்லாயிரம் குடும்பங்கள் உடுத்த உடுதுணியூடன் கண்ணீரும் கம்பலையூமாக விரட்டியடிக்கப்பட்டபோது நாமே எமக்கு தூக்கை தயார்பண்ணிக் கொண்டதாக உணர்ந்தோம். எமது இயலாத்தன்மையால் மௌனித்து நிற்கிறௌம். இத்தனைக்கும் மத்தியில் உங்களது தயாள குணம் இன்றும் தலை வணங்கச் செய்கிறது... நன்றி
அப்பாவின் வாய் உரமாக முணுமுணுத்தது.
'தொர... எங்களால் இந்தப் பழைய துணி மணிகளோட மட்டும்தான் வரமுடிந்தது..."
அவர்கள் கண்கள் குளமாகி...
'கவலப்பட வேணாம் அல்லா இருக்கான்.."
'அப்பா ஆறுதல்படுத்தினார்."
'மகன்... பொடக்கல்லேல இரிச்சிய மடுவத்த வெளிசாக்கிக் குடுக்கோம்... இவங்க நிச்சியத்துக்கு...". 'பாவம் பெ.... அப்பா..."
'ம்ஹ்...." அவரிலிருந்த பெருமூச்சு வெளிப்பட்டது. கூடவே சில துளிக்கண்ணீரும் தெறித்து விழுந்தன.
(1998)
Sunday, April 24, 2011
Subscribe to:
Comments (Atom)