Saturday, April 4, 2009

aruvadai

அறுவடை

;;; மப்பும் மந்தாரமுமான வானம். காகங்கள் ஒன்றிரண்டாக அங்கொன்று இங்கொன்றாக நின்று கரைந்து கொண்டிருந்தன. அவற்றின் கோரஸ் ஒலி ஆத்திரமூட்டுவதாக இருந்தது. வழமையில் வந்து போகும் எந்த ஒரு சின்னக் குருவியினங்களையூம் அன்று கண்டுகொள்ளவே முடியவில்லை. வழமையில் வீட்டு மாமரத்தில் குந்தியிருந்து இனிய கீதமிசைக்கும் மாம்பழத்தியையோ காவி நிற உடலும் செம் மஞ்சள் நிற வாலும் கடுங் கருப்புத் தலையூம் கொண்ட வால் குருவியைத் தானும் அன்று காண முடியவில்லை. மரங்கள் வேறு ~கம் மென்று ஒரு ஆட்டம் அசைவூ இன்றி பிளாத்திக்கு மரங்கள் போல ... முழுச் சுழலுமே ஏதோ பயங்கரத்தை உணர்த்திவிடுவதான பிரமை.

வெறிச்சோடிக் கிடந்த வானத்தில் செழுமை முழுமையாக துhக்கி விடப்பட்டிருந்தது.

ஜெமீல் மாஸ்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதிகாலையில் சுபுஹு தொழுதுவிட்டு பள்ளியிலிருந்து வெளிப்பட்டால் கலந்தர் காக்காவின் கடையில் லெவரியாவூம் வண்டுவப்பையூம் தின்று ஒரு டீ யூம் குடித்துவிட்டு கடற்கரையோரமாக ஒரு துhரம் காலார நடந்து விட்டு வருவது அவரது வழக்கம்.

~~இன்டைக்கு வானம் இவ்ளோ மப்பா இருக்கே மாஸ்டர்... காதர் காக்கா அலுத்துக் கொண்டார்.

~~மெய்தான் காதர் காக்கா... காலமே கிளம்பி வார குளிர்த்தி இன்டைக்கு மனதுக்கு பிடிக்கல்ல... ஜெமீல் மாஸ்டரின் மனநிலையூம் மந்தமாகத்தான் இருந்தது.

நாற்பது வருட கால ஆசிரிய சேவையில் இருந்துவிட்டு ஓய்வூ பெற்றவர் ஜெமீல் மாஸ்டர். கடைசிக் காலநேரம் பள்ளியூம் தொழுகையூம் எழுத்தும் வாசிப்புமாக கரைகின்றது.

~ஸேர் என்று அவருக்கு வழி விட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் அவருக்கான தனியான மரியாதையை மனதிலிருத்திக் கொண்டவர்கள் தான்.

அன்று கடற்கரை மீது நாட்டம் கொள்ளாத ஜெமீல் மாஸ்டர் நேரே வீட்டை அடைந்து சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொண்டார்.
சற்றே கண்ணயரும் வேளையில் தான் அந்தக் கூக்குரல் அவரை உசுப்பி விட்டது.

~~கடல் வருது கடல் வருது... ஓடுங்கொ... ஓடுங்கொ...
அவருக்கு அது புதுவித ஓலமாகப் பட்டது. அறுபத்திரண்டு அகவைகளை எட்டிவிட்ட அவரால் இதுவரை கேட்டிராத ஒன்று... நின்று நிதானித்து தீர்மானம் எடுக்கக் கூடிய நேரம் அல்ல அது... உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஓடுவதைக் கண்டார்.

மனைவிஇ மக்கள் எல்லோரையூம் கூட்டிக் கொண்டு மேட்டுப் பக்கமாக ஓடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை.
முழு ஊரிலுமே எஞ்சியோர் அங்கு திரண்டிருந்தனர். பேயறைந்தவர்கள் போல் ஒவ்வொருவரும் பயத்தாலும் துக்கத்தாலும் மிரண்டு வெளுத்தப் போயிருந்தனர்...

அவர்கள் கண்முன்னே கடலின் ஆகோரக் காட்சி விரிந்தது. பின்தங்கிவிட்ட ஒவ்வொரு உயிரையூம் பந்தாடியது. உதவிக்கரம் நீட்ட முடியாத இக்கட்டில் ஒவ்வொருவரும் பரிதவித்தனர். தாயின் கையிலிருந்து உருவி எடுக்கப்பட்ட பிள்ளைகளின் கீச்சிடல் மனதைப் பிழிந்தது. ஒவ்வொருவரையூம் பறிகொடுத்த உள்ளங்கள் அழுது புரண்டன.

வீடு சொத்து செல்வம் எல்லாமே கடலுடன் கரைந்தது.
ஜெமீல் மாஸ்டரின் முத்த மகள் ஒரு ஆசிரியை. ஊரிலேயே மாப்பிள்ளையெடுத்து மாஸ்டரின் வளவிலேயே வீட்டை அமைத்துக் கொடுத்திருந்தார். இரண்டாவது மகளுக்கு இப்போதுதான் ஒரு வீட்டை அமைத்து முடித்து வரன் பாரத்துக் கொண்டிருந்தார். மற்றப் பெண்பிள்ளைகள் இருவரும் இரட்டையர். உயர்தரத்தில் கற்று வைத்தியராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாளெண்ணிக் கொண்டிருப்பவர்கள். இளையவன் மகன்.

ஜெமீல் மாஸ்டரது மட்டுமல்ல அனைவரதும் எதிர்பார்ப்புக்களை கரையச் செய்து சுனாமி என்ற பெயரில் அந்தக் கடற்கோள் அனாதரவாக்கி விட்டது.

வெறும் மணல்மேட்டில் கும்பல் கும்பலாக மக்கள் நிறைந்திருந்தனர். அநாதரவாக... நாதியற்று...

அன்றைய பொழுது விடிந்திருக்கவே கூடாது என்று எல்லோரும் போல் கூறிக் கொள்ளத்தான் செய்தனர். என்றாலும் முடங்கியிருந்துவிட முடியூமா...?

~அல்லாட நாட்டம் என்ற தோரணையில் ஜெமீல் மாஸ்டர் சுனாமிக்குள் அகப்பட்டுப் போன சனங்களை மீட்டெடுக்க ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். இந்தக் கஷ்டத்திலிருந்து மக்களை மீட்டெடுத்து உளரீதியாக கட்டியெழுப்பும் பணியில் மும்முரமாகிவிட்டார். எல்லாப் பக்கமிருந்தும் உதவிக்காக குழுகுழுவாக இளைஞர்கள் வந்திறங்குகின்றனர்.

~ஸேர்...

மாஸ்டர் நிமிர்ந்து பார்த்தார். அவருக்கு நிதானம் தட்டவில்லை. வளர்ந்த உடம்பு... கன்னத்தை அடைத்த தாடி... யாராக இருக்கும் என்ற தோரணையில் சிந்தனைய+டே நோக்கினார்...
சிரித்துக் கொண்டே ~~நீங்க... நீங்க... யார் மகன்...

~~நான் ஸேர்... பதுளையிலிருந்து வாரன்...

~~ஓ.. அப்படியா... மாஸ்டருக்கு தான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரிய நியமனம் பெற்று முதன் முதலாக காலடிவைத்த பாடசாலைதான் நினைவூ வந்தது. பத்து வருடங்கள் அங்கேயே சேவைசெய்தார்... இடையே சில தேவைகளின் நிமித்தம் பதுளைக்குச் சென்று வந்திருந்தாலும் இந்த உருவத்தை அவர் பார்த்திருக்கவில்லை.

~~ஸேர் ... நான் றமீஸ்... மாஸ்டரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இருக்காதா பின்னே... அன்று பத்து வயதில் சந்தித்தவன் இன்;று நாற்பது வயதில் தடாலடி வளர்ந்திருந்தான்.
கிறுக்கன்... சண்டியன் எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன். பாடசாலையில் என்றுமே அடிதடி... உதை குத்துதான்...

ஆசிரியர்களிடமும் அதிபரிடமும் அடி வாங்காத நாட்களேயில்லை. எல்லாச் சிக்கலிலும் அவனது பெயர் முடிச்சுப் போடப்பட்டு விகாரப்படுத்தப்பட்டு தண்டனையையூம் பெற்றுக் கொடுத்துவிடும்.
ஜெமீல் மாஸ்டர் அவனின் கூரிய கண்களை அவதானித்திருந்தார். அவனுள் புதைந்துபோன ஏக்கத்தை அவர் காணத் துடித்தார். அவனை நெருங்க நெருங்க அவன் விலகியே சென்றான். தன்னை அடிக்க துhற்ற இன்னுமொருவர் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்பதே அவனது எண்ணமாக இருந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மாஸ்டர் அவனில் கரிசனை காட்டுவதை படிப்படியாக வெளிப்படுத்தும் போது... அவனது கைகளில் பொறுப்புக்கள் விடப்படும் போது... ஜெமீல் மாஸ்டர் அவனது நெருங்கிய வழிகாட்டியாகி விட்டடிருந்தார்.

~~ஸேர் அன்டைக்கு இருந்த நிலையில தொடர்ந்திருந்திருந்தா நான் இன்டைக்கு பெரிய சண்டியனாகி இருந்திருப்பன்.. பெரிய ஸேர் ... ஸ்கூலால என்னய வெலக்கப் பார்த்த நேரம் வெலக்கியிருந்தா இன்டக்கு கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பன்...

மாஸ்டர் பிரின்ஸிபலிடம் கெஞ்சிக் கூத்தாடியது அன்றும் அவரது நினைவில் இருக்கத்தான் செய்தது.

~~நீங்க புதிசு மாஸ்டர்... இவங்களப் போலாக்கள திருத்தேலா... ஒரே வழி வெலக்கியூடுறதுதான்...

~~எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்க ஸேர்... என்னாலேண்டிய முயற்சிய நான் செய்றன்... அவன்ட உள்ளத்த அல்லா மாத்துவான்... அவன மட்டுமல்ல அவன்ட பெயருல அவன மாட்டி உடுறத்துக்காக இன்னம் செல புள்ளகள் செய்ற வேலகளேம் நான் கண்டு பிடிச்சிருக்கன் ஸேர்...

~~இதென்ன... புதுக்கத...

~~அதுதான் உண்ம ஸேர்... வேறு வழியின்றித்தான் அன்று அதிபர் அவனை விலக்காமல் ஜெமீல் ஸேரின் தலையில் கட்டினார்.

~~புதுத் தும்புக்கட்டு கொஞ்ச நாளக்கு நல்லாத் துhக்கும்தான்... கள்ளு முள்ளுகள்ல குத்திப்படச் செல்லக்கித்தான் நோவூ வெளங்கும்... சில ஆசிரியர்கள் அறிவூரையாகவூம் இன்னும் சிலர் குத்து வார்த்தை யாகவூம் இப்படிச் சொல்லத்தான் செய்தனர்.

ஆரம்பத்தில் மாஸ்டரைக் கூட றமீஸ் துச்சமாக மதித்துச் செயற்பட்ட போது இவனை அதிபர் உட்பட பலர் ஏளனப் பார்வை பார்த்தனர் தான். ஆனாலும்....

ஜெமீல் மாஸ்டரின் நம்பிக்கை வீண் பேகாவில்லை.

~~ஸேர் றமீஸட மேல்ல குத்தத்தப் பொட்டுட்டு எல்லா ஜராவ வேலகளயூம் செய்த எங்களயூம் பிரின்ஸிபல்ட்ட காட்டிக் குடுக்காம திருத்திட்டீங்க ஸேர்... றமீஸோடு கூட வந்திருந்தவர்கள் காலிதும் ஸாலிஹும் தான் என்றதை இப்போதுதான் மாஸ்டர் உணர்ந்தார்.
அவர் அங்கிருந்த போது பாடசாலை வேலைகளிலும் மாணவர் மன்றங்களிலும் நாடகங்களிலும் என ஒவ்வொன்றிலும் மிளிரக் கூடிய மாணவர்களாக இந்த ஒவ்வொருத்தரும் தலைநிமிர்ந்து நின்றபோது அவரை நோக்கியிருந்த ஏளனப் பார்வைகள் வெய்யோனைக் கண்ட பனித்துளிகள் போல ஓடி மறைந்தன.
பாடசாலையில் ஒட்டுண்ணியாக இருந்து தமது தேவை நிறைவூறும் மட்டும் ஆசிரியரை வருத்தி வருத்தி பயனை எடுத்துக் கொண்டு பிறகு கறிவேப்பிலை போல் துhக்கி வீசிவிடும் மாணவர்களுக்கு மட்டுமேயில்லாது சகலருக்கும் அவர் அங்கு பணியாற்றினார் என்பதற்கு விட்டு வந்த தடங்கள் தாம் இந்த மாணவர்கள்.

~~மக்களே... நீண்ட காலத்துக்குப் பொறகு சந்திக்கிறம்... வீட்ட அழைத்து ....

~~நாங்க ஒங்கள சந்திக்கத்தான் வந்தம் ஸேர்... நான் இப்ப ஒரு எக்கவூன்டனாக வேல பார்க்கிறன்... ஸேர நினைக்காத நாளில்ல... ஆனா வந்து சந்திக்கத்தான் வழீல்லாம பல வருடங்கள் கழிஞ்சிடுச்சி... இப்பிடியொரு நெலயிலதான் .... றமீஸின் கண்கள் பீறிட்டன.

~~ஸேர் அல்லாட அருளால நாங்க எல்லாரும் நல்ல நிலைமைகள்ல நிக்கிறம்... நீங்க செஞ்ச சேவைக்கு எங்களுக்கு கைமாத்தா ஒன்டும் செய்யேலா... என்டாலும் எங்களால ஏன்டிய ஒதவிகளச் செஞ்சிட்டுப் பொகவென்டுதான் வந்தீச்சிய... ஸேர் நீங்க பாதுகாப்பான எடமொன்ட காட்டினா காணிய எடுத்து வீடொன்ட அமச்சி...
~~ஏன்ட ஊர் இருக்கிற நெலயில நான் மட்டும் எப்பிடித் தப்பிப் பொகேலும் மகன்... நானும் அவங்களோடே இருந்திடனும்...
~~எங்களுக்கு ஸேரப் பத்தித் தெரியூம் ஸேர்... அதாலதான் ஊராக்களுக்கெண்டு வேறயா நாங்க சேத்தி வந்தீச்சியொம்... ஆனா எங்கட ஸேருக்கு நாங்களே நின்டு எங்கட கைகளால ஒரு ஊட்டக் கட்டித் தரவேணுமென்ட ஆசயோட வந்திருச்சியொம் ஸேர்... தயவூ செஞ்சி இத மட்டும் மறுக்க வேணாம்... றமீஸ் கெஞ்சிக் கூத்தாடினான்.
அந்தத் திறந்த வெளியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு ஜெமீல் மாஸ்டரின் பெருமையை றமீஸ் உணர்த்திக் கொண்டிருந்தான்.
எந்தத் துன்பங்களுக்கும் சளைக்காது முகம்கொடுத்துப் பழகிப்போன ஜெமீல் மாஸ்டரின் கண்களும் கரைபுரண்டோட குலுங்கிக் குலுங்கி கண்ணீர் வடித்தார்.

Thursday, April 2, 2009

haikku

தொந்தரவூ வேண்டாம்
அமைதியான கடுந் துயில்
ச…கல்லறை வாழ்வூ

ஓலமிட்டு அழும் மனிதன்
இன்னுமொரு வாய்ப்பு கொடு
மண்ணறை வேதனை


குடிபுகும் புது மனை
தொண்டனின் சமூகப்பணி சிலாகித்தல்
அட… மரங்கொத்தி

முடிந்து போன ஊர்வலங்கள்
சோற்றுக்கு நீரூற்ற கூழ் ஆனது
தொண்டனின் குசினி
உதிர்ந்த விடிவெள்ளி
புவியின் காரிருளை ஏய்க்கிறது
ஓ… சிரிக்கும் மழலை



விண்ணுக்கு ஏறிவந்த பல்லக்கு
ஒரு நொடியில் திருடிவிட்டார்கள்
அட… வானவில

Wednesday, April 1, 2009

muhangal

முகங்கள்

மஃரிபு முடிந்த கையூடன் ஸூன்னத்து இரண்டு ரக்காத்துக்களையூம் தொழுது கொண்டான். இன்று மஹல்லா நாள்... எது தவறினாலும் அவன் மஹல்லா நாளை தவற விடுவதில்லை... ரெண்டாம் மஹல்லாக்கு ஒழுங்காகப் போய் வருவான். மாதம் ஒரு தடவை மூன்றாம் வாரத்தில் மூன்று நாளும் போய் வந்து விடுவான். ஒரு அசில் தாயீயாக செயற்படுவதில் அவனுக்கு அவ்வள ஆர்வம். வக்துக்கு தொழுது கொள்வது... வீட்டுத் தஃலீம்... ஜூம்யேராத் எதுவூம் தவறவிடப்படுவதுமில்லை... ஸூறத்தும் அவனில் களை கொண்டிருந்தது. அவனது பயணத்திற்கு எதுவூம் தடையாக அமைந்ததில்லை. எதனையூம் தடையாக அமையவிட்டதுமில்லை. அவ்வளவூ பிடிப்பும் அவனிடம் இருந்தது.

ஆரம்ப காலத்திலிருந்தே தொழுகையிலும் பள்ளியிலும் ஈடுபாடு அதிகம் அவனுக்கு. மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது ஆன்மிகப் பசியை போக்கிக் கொண்டான். ஒருநிமிடத்தை வீணாக்கவூம் அவன் தயாராயில்லை... அல்லாஹ் பற்றிய சிந்தனையூம் றஸூல் மீதான அன்பும் அவனை பிணைத்திருந்தது.

' ஏத்தியன் மகன் வாய ஒரே முணுமுணுத்துக் கொண்டு...

உம்மா அந்த ஆரம்ப காலங்களில் கேட்டிருக்கிறார்.
'மறுமைல எங்களுக்கிருக்கிற ஒரே பொக்கி~ம் நன்ம தான் உம்மா... திக்ருகள் தான் எங்கட தரஜாக்கள உயர்ரத்தப் போற...

உம்மாவின் வினாவூக்கு அச்சொட்டாகப் பதில் சொல்லிவிடுவான். '

நெசம்தான் மகன்... ஒங்கட இபாபத்துக்கள பாக்கச் செல்லக்கி ஏன்ட மனம் செரியா சந்தோ~ப்படுகிய...

உம்மாhவின் பூரிப்பு. பெரிய தாடியூம் அவனது ஒழுக்கமான நடத்தையூம் அவனுக்கு ஸீனத்தாக மாறியிருந்தது.

'இந்தா இவன் போற போக்கப் பாத்தா அது இவன்ட தலக்கடிச்சீடும் போலீக்கி... அன்னந்த ஜவாஹிர் மாஸ்டர்ட மகனுக்கு ஒரம் கரமாகவே பட்டு தல கொழம்பிப் பெய்த்து... இப்பவே மட்டுப்படுத்திக்கோ...

அவனது மாமா உம்மாவிடம் அடிக்கடி சொல்லத் தொடங்கியிருந்தார்.

'இங்க தலக்கடிச்சியத்துக்கொ... தலயசடாகவோ ஒன்டுமில்ல... எல்லாத்துலயூம் ஒரு நிதானம்... நடுநாயம் இருந்தா அப்பிடியாகீல்ல... செலசெலபேரு ஆகிறம் துனியாவப் பத்திய தௌpவில்லாம நடக்கப் போறதாலதான் இந்த ஜாய்கள் நடக்கிய...

அவன் தனது நிதானத்தை வெளிக் காட்டிக் கொண்டான். அவனது விளக்கத்திலும் செயலிலும் ஒரு நிதானம் இருக்கவே செய்தது. ஏ.எல்லை தாண்டிவந்த அவனுக்கு இலகுவில் ஒரு தொழில் எசவாகிவிடவில்லை.

வீட்டு முன்னால் இருந்த ஒரு டெயிலர் சொப்பில் சும்மா நேரங்களில் குந்தியிருந்த தைத்துப் பழகியிருந்தான். எல்லாவற்றிலும் இருக்கும் நுணுக்கம் அவனுக்கு இங்கும் கைகொடுத்தது. ஆரம்பத்தில் டெயிலரிங் செய்யத் தொடங்கினான். அதேவேளை ஆசிரியராவதற்கு அவனுக்கிருந்த எதிர்பார்ப்பைக் கைவிடவூமில்லை. அல்லாஹ் உரிய உரிய நேரத்தில் எல்லாவற்றையூம் தருவான் என்ற நம்பிக்கை எப்போதும் அவனுள் ஒளிரும்.

'அல்லாஹூம்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்பஉ தல் ஜத்த மின்கல் ஜத் - அல்லாஹ்வே நீ தர நாடியதை தடுப்பார் எவருமிலர். நீ தடுக்க நாடியதை தரவல்லார் எவருமில்லை. வெற்றியாவூம் உன்பாக்கமிருந்தே வரும்.

என்று அடிக்கடி ஓதிக்கொள்வான். அவ்வசனங்கள் அவனது உள்ளத்தை புடம்போட்டு எடுத்தது. புதிய விடயங்களைக் கற்பதில் ஆர்வம் அவனுக்கு. தேடித் தேடிக் கற்பான். அவனுக்கு அவனது அந்த பழைய நாட்கள் நினைவில் எழும். நினைக்கும் போதே புல்லரிக்கும். அட்டாளைச்சேனையில் பிறந்து வளர்ந்த அவனுக்கு இயல்பாகவே வாப்பாவின் குணங்கள் ஒட்டிக் கொண்டதில் வியப்பேது.

துடிப்புஇ வேகம்இ துணிவூ எப்போதும் விடாப்பிடியாய் அவளில் ஒட்டிக் கொண்டன. நல்லாதகப் பட்டது எதையூம் சொல்லாமல் விட அவனது மனம் இடம் தராது. அவனது வாப்பாவூம் அப்படித்தான். மட்டுமல்ல தமபிமாரும் அதே வரிசையில் தான் சேர்ந்திருந்தனர். உண்மைக்காகவே துணிந்து நிற்கும் வேகம் தவறல்லவே என்பது அவனது வாதம்.

'ஏ.எல் படிப்புக்காக நிந்தவூ+ரில் அவன் தங்கியிருந்த போது அவனத கூட்டாளிகள் சிலர் அப்போதைய சிறு அமைப்பொன்றுடன் ஒட்டியிருந்தனர். இவனாலும் விடுபட முடியவில்லை. ஏதோ ஒருஐ வேகத்தில் சேர்ந்தான். ஆனால் அந்த விளையாட்டே வினையான போது 'ஏ.எல் பரீட்சை அம்பேல் ஆனது. வளர்ந்து விட்ட மற்றொரு ஆளணிக் கூட்டம் இந்தச் சின்ன அமைப்பை தேடித் தேடி அழிக்கத் தொடங்கியது. பரீட்சை மண்டபத்திலிருந்து அன்று ஓடின ஓட்டம் கொழும்பில் ஒரு பெட்டிக் கடையில் தான் முடிந்தது..

எந்த இலக்குமினறி நான்கடி காம்பராவிற்குள் சுருண்டிருந்தான். தனிமையூம் வெறுமையூம் அவனை வாட்டி எடுத்தமது. கொஞ்சம் கொஞ்சமாக கொழும்பு அவனுக்குப் பிடித்துக் கொண்டது. படிப்படியாக புதிய நண்பர்கள்... தையலில் காட்டிய திறமையால் அவனில் ஈர்க்கப்பட்டவர்கள்.... புது வாழ்வூ இனித்தது. ஒரு பேனா நட்பு அவனில் சொல்லொனா மாற்றத்தைத் தோற்றுவித்துவிட்டது. புதிதாக பலதை சிந்திக்கத் தொடங்கினான். பேனா நட்பின் உறவில் கிடைத்த ஊரில் அவனது ஒன்றுவிட்ட சொந்த மாமாவை சந்திக்கக் கிடைத்தது மற்றொரு மாற்றத்தை அவனளவில் வேரூன்றியது. இன்றைய இறுக்கமான ஆன்மீகப் போக்குக்கு அவர்தான் விதையூ+ன்றினார். பேனா நட்புக் குடும்பத்திலேயே பெண்ணும் எடுத்தான்.

அவனது புகுந்த வீட்டு மாமா ஒரு வாசிப்புப் பிரியர். அவனும் விடாது வாசித்தான். கொஞ்சமல்ல அனைத்தையூமாக வாசித்தான்.

'கண்ட நின்டதெயெல்லம் வாசிச்சப்படாது... வழிகெட்டுப் போரொன்டும்...

அவனது வாசிப்பைக் கண்ட ஒரு சிலர் இப்படிக் கதைக்கவூம்தான் செய்தனர்.

'குர்ஆன் ஆலிமுலமாக்களட வெ~யம்... அத பாமர மக்களான நாங்க அத வாசிச்சப் போனா வழிகெட்டுப் போரொண்டும்...பழைய ரிடயர்ட் மாஸ்டர் இப்படிச் சொன்னபோது அவனது மூக்குநுனி சிவக்கத்ததான் செய்தது.

'வழிகாட்;ட வந்த வேதம்... முதல் வசனத்திலேயே வாசிக்கச் சொன்ன வேதம்... எப்பிடி வழிகெடுக்கும்...

அவனது நாவூ துடித்தது. என்றாலும் மெலிதாக அடக்கிக் கொண்டான். இல்லையேல் அவனது கொந்த ஊரில் அவனது வாப்பாவூக்கு அட்ட பெயர் அவனுக்கும் தான் வந்துவிடுமே. அப்போதெல்லாம் அங்கு தஜ்வீது குர்ஆன்கள் இல்லை. எவன் ஒன்றை எடுத்து வந்திருந்தான். அன்று அவனது மனைவி வீட்டுக்கு வந்திருந்த ஊரின் பிரபல ஷபிரசங்கப் பை யிடம் அதனை எடுத்துக் காட்டினான்.

'அப்பொவ்... இது யஹூதி நஸரானியள்ட குர்ஆன்... இத வாசிச்சால் வழிகெட்டுப் பெய்த்துடும்...

அவர் தீயை மிதித்தவர் போல துடிதுடித்தார். இவனுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. தான் அறியாத ஒன்றை தெரியாது என்று கூறிவிடாமல் கம்மளைக் குழப்பிப்போடும் இப்படியானவல்களைத்தான் சமூகம் தலையில் துhக்கிக்க கொண்டாடுகின்றது என்ற உய்மையை விளங்கும்போது சிரிக்காமலிருக்க முடியவில்லை.

ஊருக்கு மத்ரஸா வந்து தஜ்வீது முறை பிரபலமான போது அந்தப் பிரபல பிரசங்கி அவனகை; கண்ட மாத்திரத்தில் ஓடி ஒளிந்துகொள்வதை அவன் நேரடியாகவே கண்டுகொண்டான். யதார்ரத்த நிலை கருத்து நிலைப்பட.டட பத்திரிகைகைள் சினிமாக்கள்ள் கக்களுடைளிடையே தோல்வியடைந்து பால் சார்ந்த மசாலாக்களை படமாக்கும் சினிமாக்களும் கொச்சை பச்சையாக மேழும்பி நிற்பது போல்... கதைகளை ஒருட்டி புரட்டி பாசாய்கு செய்யூம் வசீர் ஸாஹப் போனடறவரடகளட சமூகத்தின் உச்சாணிக் கொப்பகளில் வீற்றிறருப்பர்...

இப்படியிருந்த போதுதான் அவனுக்கு ஸஹீஹூல் புகாரியின் தமிழ் மொழியாக்கம் கிடைத்தது. ஆர்வத்துடன் வாசித்தான். பள்ளியில் வைத்திருந்த அதனை வாசித்துக் கொண்டிருந்த போது வசீர் ஸாஹிப் அதனைப் பார்த்து விட்டார். அப்போது அவன் வக்தில் இருந்தான். ஒழுங்குறையான செயற்பாடுகள் முடிந்து போனபின் கிடைக்கும் ஓய்வூ நேரங்களில் அதனை வாசித்துக் கொள்வதனால் மேலதிக அறிவைப் பெற்றுக் கொள்வதுதான் அவனது தேவையாயிருந்தது.

'அப்போவ்... இதுகளப் பாத்து வழிகெட்டுப் பொகவா பாக்கிய...

வசீர் தலையில் அடித்துக் கொண்டார்.

'நபியவங்கட ஹதீஸப் பாத்தா பெ;பிடியன் வழிகெட்டுப் போற... பொறுக்க முடியாத பட்சத்தில் அவன் கேட்டு வைத்தான்.

'அது அப்பிடித்தான்... அதெல்லம் நாங்க செல்லிய கிதாபுகள மட்டும் பாத்தாப் போதும்... வசீர் ஸாஹிப் அடித்துச் சொன்னார்.

அன்றைக்குப் பிறகு அவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பது மாதிரி உள்ளுணர்வூ உந்தியது. அடிக்கடி ஸலாம் சொல்லிக் கொள்ளும் முகங்களும் கண்டும் காணாதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதை கண்ணாரக் கண்டான். இவர்களுக்கெல்லாம் என்ன நடந்துவிட்டதோ என வோசிக்கும் போது வசீர் ஸாஹிப் போன்றௌரின் இளக்டகாரமான சிரிப்பு அவனை என்னவோ செய்தது. ரெண்டு மூன்று வரு~மாக பெரிய வக்துக்கள் போகக் கிடைக்காத போது இந்தப் பார்வைகள் பலமாக வித்தியாசப்பட்டு நின்றதை அவன் காணத்தான் செய்தான். அன்று பள்ளியில் இ~hவூக்குப் பின் அவனது பொஸ் வக்துக்குப் பெயர் பதிந்து கொண்டார். அவனும் பெரிதான ஒரு வக்துக்கு பேர் பதிந்து கொண்டதோடு ஆசையோடு எதிர்பார்த்திருந்தான். புடைவைக் கடையூடன் இணைந்ததாக இருந்த டெயிலர் n~hப்தான் அவனத தொழிலகம். பொறுப்பெடுத்திருந்த ஷஓடர் எல்லாவற்றையூம் முடித்துவிட்டான்.

'ஹாஜி மூணாம் வாரத்துல வக்துல பொகோணும்... அவன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

'வக்துலயா.... அவரது வினாவில் எள்ளல் துhக்கலாகி நின்றது.

'என வக்தன்... இங்கிருச்சிய வேல வெடடிகள பாத்துச் செய்ங்கொ... சிதிதர கிட்டவாகிய... இத்தனைக்கும் ஊரின் தலைமைப் பொறுப்பில் இருந்து வக்தில் ஆட்களை ஆர்வத்தோடு சேரச் செய்து கொண்டிருப்பவர். ஒரு மஹல்லா நாளில் அவனத பெயரை பதிந்து கொண்டவரும் அவரே தான்.

'இல்ல ஹாஜி... இப்ப தான் பெய்த்துக் கொளக் கூடிய சூழ்நில கிட்டீச்சிய... அதாலதான் ஏன்ட பேரையூம் பதிஞ்சு வெச்ச... 'பேச வேணாம்... பெய்த்து வேலயப் பாருங்கொ... பொஸ் துள்ளிக் குதித்தார்.

மீண்டும் கேட்டபோது இனம் புரியாத கோபத்துடன் பாய்ந்தார். அவருக்கு ஏதொ ஷஜோஸ்ஸான நிலை...

அடக்கி அடக்கிக் கொண்டிருந்த ஷஜெதுபு பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு. நஸீர் ஸாஹிப் முன்னே பாய்ந்து பிடித்துக்கொண்டார்.

'ஓ... எத்ததனை முகங்கள் இவர்களுக்கு... அவனது உள்ளம் அலறியது.

இன்னும் அந்த ஆசை நிறைவேற்றப்படாமலேயே....

nirashai

நிராசை

'எந்தத் துன்பம் வந்தாலும் தாங்குற நெஞ்சம் எங்களிட்டீக்கி... நாங்க என்னத்துக்கு பயப்புடோணும்... உண்ம எங்கட கையில இருக்குமென்டா வெத்தி நிச்சயம்மதான்... ஹம்மாது மாஸ்டர் வீராவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
சுற்றிச் சு+ழ நண்பர்கள் வட்டம் நிறைந்து... 'எங்க@த் தெரீம் இந்தக் கோப்பறட்டி மனேஜர் மக்கள ஏமாத்துறவர்... எத்தினயோ தடவ பாத்திட்டம்... இதுக்கொரு முடிவூ காணாட்டி எங்கடூரு மக்கள் பாரப்பட்ட அநியாயத்துல வூழுந்துடுவாங்க...
'செரியாச் சொன்னீங்க மாஸ்டர்... எங்கடூராக்கள ஏய்ச்சிப் பொழச்சேலுமென்டு தெரிஞ்சிதான் இவ்ளோ கொழப்பத்தேம் போடுறான்... நாபிஸ் மாஸ்டர் ஆமோதித்தார்.
'இதுக்கிப்ப நாங்க அவசரமா எடுக்கோண்டிய நடவடிக்க எனத்தியன் மாஸ்டர்... வாரிஸ் மாஸ்டர் ஆவலுடன் கேட்டார் நரம்புகளிலே புடைத்தோடும் இரத்தத்தில் வேகமான வளர்ச்சி கண்டுவிட்டதான பிரமை.
ஹம்மாது மாஸ்டர் இந்த ஒதுக்குப் புறமாக உள்ள ஊருக்கு வந்ததே புண்ணியம் என வாரிஸ் மாஸ்டர் மட்டுமல்ல எல்லோரும்தான் நினைத்துக் கொண்டனர். வாரிஸ் ஸேரும் அதே ஊரைச் சேர்ந்தவரல்ல. அயல் கிராமத்திலிருந்து கலியாணப் பாத்தியதையால் அங்கு நிலை கொண்டவர்.
மாலிக் மாஸ்டரும் அவ்வாறுதான். படித்துக் கொடுக்க வந்த இடத்தில் யௌவன யோகம் கைகூடிவிட்டது. நாபிஸ் மாஸ்டர் மட்டும்தான் அங்கு பிறந்து வளர்ந்தவராக இருந்தார். ஹம்மாது மாஸ்டரின் வருகை அவர்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரே பாடசாலை ஆசிரியர்கள் என்ற வகையில் சேர்ந்து சேர்ந்து கதைத்துப் பழகியவர்கள் ஹம்மாது மாஸ்டரின் கூட்டால் புதுச் சிந்தனைகளை நுகரத் தொடங்கினர். பாடசாலை மட்டுமன்றி ஊர் விடயங்களில் கூட அவர்கள் கவனம் மெதுமெதுவாக வியாபித்தது. இயல்பிலேயே சமூக உணர்வூ கொண்ட உள்ளங்கள் ஒன்று சேர்ந்து கொண்டதில் வியப்பேதுமில்லை. கோப்பரேட்டி மனேஜர் விடயமும் அப்படித்தான். கலப்படம்... பதுக்கல்... எடைகுறைவூ... எத்தனையோ விடயங்கள்...
அவர்கள் முன்னின்று இறங்கிய எந்த விடயமும் தோல்வி கண்டதில்லை. பாடசாலையில் புடம்போட்டு எடுத்த... அல்ல வடித்தெடுத்த ஒரு குழு எப்போதும் அவர்களது நல்ல விடயங்களுக்குத் துணையாக நிற்கவே செய்தனர். கல்வியின் பக்கமும் நேர்மையின் பக்கமும் மாணவர்களைத் திருப்பும் போது எண்ணிலடங்கா தடைகள் வரத்தான் செய்தன. அதுவூம் கல்வி கற்றஇ ஊரை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிலரின் துhண்டுதலால்தான் இத்தனை தடைகளும் முன்னெடுக்கப்பட்டன என்பது பகிரங்க இரகசியமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு எக்கேடு கெட்டும் போ எனக் கூறத்தயாரான பெரிய புள்ளிகளின் ஏஜென்டுகள் பாடசாலைக்குள்ளேயே கூடாரம் அடித்திருந்தனர். படித்து வரும் மொட்டுக்கள் ஒவ்வொரு காலமும் கருகி இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போன கதைகளைக் கேட்கும் போது பெரும் கவலை குடி கொள்ளும்.
பென்னம் பெரிய ஊர்... மாணவர்கள் கூடின பாடசாலை... இப்பாடசாலைக்கு கால்நுhற்றாண்டுஇ அரை நுhற்றாண்டுக்குப் பின்னால் ஆரம்பித்தத பாடசாலைகள் குறிப்பிடத்தக்க பல்கலை;ககழக மாணவர்களைஇ கல்வியியலாளர்களை உருவாக்கியிருக்கும் போது இப்பாடசாலை மட்டும் ஏன் ஆமை வேகத்தில் அல்ல நத்தை வேகத்தில் நகர வேண்டும். ஹம்மாது மாஸ்டர் இந்த உதாரணங்களை எடுத்து நிரற் படுத்தி சொல்லும் போது எல்லொரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டு நிற்க வைக்கும் பேச்சாற்றலைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடிக்கும் பல தடைகள் வரத்தான் செய்தது.
'ஒங்களுக்கெனத்துக்கன் தேவில்லாத வேல... மத்தவங்கள மய்ரி வாயேம் சு+த்தேம் பொத்திக்கொண்டு இரிச்ச வேண்டிய தானே... ஹம்மாது மாஸ்டரின் மனைவி குத்திக் காட்டுவார்
அவரை நன்றாகவே தெரிந்துஇ உணர்ந்து அவரின் மாணவியாக இருந்து மனைவியானவர். குழப்பத்துக்காகிலும் அப்பிடிச் சொல்வதை அவர் விரும்பவில்லை.
'ஓ.. ஒங்கடாக்களப் போல கொள்கில்லாத மனிசரா வாழியத்தவிடத் தெறம் மௌத்தாப் போறது... சு+டாகப் பதில் வந்து விழும்.
அவரும் நண்பர்களும் எவ்வளவோதான் முயன்று பார்த்தனர். எப்படியாவது கடைச் சிப்பந்திகளை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாக பாடசாலை இருப்பதிலிருந்து மாற்றி நல்ல ஆரோக்கியமான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்க எடுத்த முயற்சிகள் பெருமளவூக்குத் தோல்விகளையே சந்தித்தன. ஓரளவூக்குத் தப்பி ஒன்றிரண்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.
அன்று கோப்பரட்டி மனேஜர் தெரிவூ வெகு உக்கிரமாக நடந்து முடிந்தது. தாங்கள் நினைத்த இடத்துக்கு வர முடியாமல் போனாலும் திருப்தி காணக்கூடிய நிர்வாகம் ஒன்று சரி வந்ததே என பெருமிதம் அடைந்து கொள்ள முடிந்தது.
எதுதான் சரி வந்தபோதும் மாணவர்ளின் கல்வி விருத்தயில் மட்டுமே தொடராக பின்னோக்கிச் செல்வதற்கான காரணம் தான் எவருக்கும் பிடிபடவில்லை. படித்து வருபவன் திடீரென மறைந்து விடுவான். எப்பவாவாது ரோட்டில் கண்டால்
'ஊட்டுல க~;டம் ஸேர்.. வாப்பா கடக்கிப் பொகச் சென்ன... கபீர் ஹாஜியார்ட கடைல நிச்சியன்... இப்படித் தான் அவரைச் சந்திக்கும் மாணவர்கள் அவருக்குத் தந்து கொண்டிருந்த பதில்..
'என செய்யவன் ஸேர்... நாங்களும் எவளவூ முயற்சி செஞ்சன்... இந்த ஊரானுகள்ல பெருமளவான ஆக்களுக்கு எனசரி ஒரு சாபம் பட்டீச்சும்... இல்லாட்டி ஆயிரத்தஞ்ஞாறுக்கும் மேற்படட மாணவர் தொகயீந்தும் ஒரு முன்னேத்தமுமில்ல.... பாயிஸ் மாஸ்டர் மற்றவர்களை சாந்தப் படுத்துவார்.
'ஆனா புள்ளகள்ட்ட யாதாமொரு குத்தமில்ல.. நல்ல தெறம ஈக்கி... மத்தப் புள்ளகள வெட அவசரமா வெளங்கிக் கொளுறாங்க.. சொல்லுற மய்ரி செயற்படுவாங்க... பத்துப் பதினொன்டு என்டு வரச்செல்லத்தான் எல்லமே கொழம்பிப் போற...வாரிஸ் மாஸ்டரின் ஆதங்கம் வெளிப்படும்.
'ஓ.. என சரி ஒரு கொஸ்ஸ இரிச்சத்தான் செய்த... ஒரு எல்லக்கங்கால சில புள்ளகளால பெய்த்துக் கொளேலாம இரிக்கிஇ பிரச்சின வந்து... அந்தப் புள்ளகள் புழுந்து பெய்த்திடியாங்க.. இருபது வருட உழைப்பில் விரல் விட்டு எண்ணத்தக்க ரெண்டு மூணு பேர் மட்;டுமே நியாயாமான பொதுச் சிந்தனையாளர்களாக உருவெடுத்திருந்தனர்.
'எனைஞ்சாலும் எங்கட பேரு வழங்க இந்த ரெணு மூணுபேரும்தான்... மாலிக் மாஸ்டர் அவர்களைக் காட்டுவார். 'என ரெனு மூனு பேரன்... ஒங்களுகள்ட்ட படிச்சாக்கள் எத்தினீச்சியன்... எங்கடெங்கட ஆக்களீக்கி... பொறத்தி யாக்களீக்கி... அவங்கவங்க ஒரொரு நல்ல கொள்கைல ஈச்சியாங்க... ஹம்மாது மாஸ்டரின் மனைவி ஏதொ ஒன்றை நினைத்தவராக கூறுவார்.
'ஆ... ஒங்கட தாய் புள்ளகள செல்ல வாரொ... அவங்களுக்கொரு கொள்க ஈச்சியா... எனக்கு இவ்ளோ காலமும் தெரியாப் பெய்த்தேன்... அவங்கள்ட்ட சம்பரிச்சி அடுக்கி வெச்சிய கொள்கயென்டா ஈச்சும் தான்... நறுக்குத் தெரித்தாற் போல் பேசுவார். இந்தப் பயணத்தில் ஒரு சிலபல கோபதாபங்களை ஜீரணித்துக்கொள வேண்டித்தான் வந்தது. காரணமில்லாமலே கோபத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்தனர். இப்படியிருந்த போதுதான் வாரிஸ் மாஸ்டருக்கு இந்தச் செய்தி கிட்டியது. மாலிக் மாஸ்டரைத் தேடிச் சென்றபோது அவரும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். நாபிஸ் மாஸ்டர் வேறு உட்கார்ந்திருந்தார்.
'மெய்யாமோ செய்தி... வாரிஸ் மாஸ்டர் கேட்டார். 'இப்பதான் கேள்விப்பட்ட... இப்பிடியொரு நாளும் நெனச்செல்லேனா... மாலிக் மாஸ்டரின் புருவங்கள் சுருங்கின.
'இப்பிடித்தான் தோணியூம்; ஒரு நாளக்கி கரத்தேல போறாமெனா.... நாபிஸ் மாஸ்டர் பொருட்படுத்தாது சொன்னார்;. 'எனத்துக்கும் அவர்;ட்ட கேட்டுப் பாக்கோம்... வாரிஸ் மாஸ்டருக்கு இன்னும் உறுதியில்லை.
'அவருக்கிப்ப வயஸூ... நாலு பொகத்தாலயூம் தாக்கம் வரச்செல்லக்கி எல்லாப் பிடிமானமும் உடுபடுகியெனா... அப்பிடியொரு சந்தர்ப்பத்த உட்டுடப் படாது என்டு குலுஸூ டீச்சர் செல்லீக்கிம்.... மாலிக் மாஸ்டருக்கு நெஞ்சு கொதித்தது. 'ஓ... இப்ப அவருக்கு பழசெல்லம் மறந்து... காணல்லயோ இப்ப முந்திய மய்ரி கொள்க பேசியோம் இல்லேனா.. வாரிஸ் மாஸ்டருக்கு ஜெதுபு ஏறியது.
'நாங்க மேடேனான... அவரு செல்லியெலியன் நாங்க அவங்களோட கொய்ச்சிக் கொன்ட... நாங்க வந்த காலத்துல எங்களோட உசிரு மய்ரி ஈந்தாக்களெனா... பொறகு பொறகு ஹம்மாது மாஸ்டர்ட கச்சீல சேரப் போனதால எங்களுக்கு எவ்ளோ இழப்பு வந்த... ஆனா அவரு மட்டும் சந்தர்ப்பங்கள தவற உடல்ல...
'ஓ... ஓ... காணல்லயோ இந்த ஊட்டுக் கடன் குடுக்கிய நேரம் அவரு அவர்ட பொன்ஜாதிய பகாவோட அனுப்பி எப்பிடிச் சரி பாஸ் பண்ணிக்கொண்ட... கடசிக்கி அதுலயூம் எங்களுக்குத் தான் இழப்பு... சரி சரி இப்ப எனத்தியன் செய்த... வாரிஸ் மாஸ்டர் கேட்டார். 'என செய்யவன்... சும்ம பெய்த்துப் பாக்கோம்... மூவரும் சேர்ந்து பாடசாலைப் பக்கம் தலை நீட்டினர். பெனர் ஒன்று தொங்கியது...
'அகில இலங்கை ஜே.பி. பட்டம் பெற்ற ஹம்மாது மாஸ்டரை வாழ்த்துகிறௌம்... 'ம்... ஏற்பாடு பெரிசுதான்... வாரிஸ் மாஸ்டர் புருவங்களை நௌpத்துக் கொண்டார். 'அந்த ஹாஜியார்ட ஊட்டுச் சாப்பாட்ட தின்டா இனி ஆள் மவ்த்துத்தான். அவரு செல்லியபடிதான் நடக்கோண்டி வரும்.... என்று குறித்துக் காட்டிய ஹாஜியார்தான் ஹம்மாது மாஸ்டருக்கு மாலை அணிவித்தார். அவரது மாலை மட்டும் கொள்கையின் துhக்குக் கயிறாக விளங்காதது ஏனோ என மாலிக் மாஸ்டர் சிந்தித்துக் கொண்டார்.
ஊரையே துhக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்ட கோப்பரட்டி மனேஜரும் பாடசாலையிலிருந்து கடைச்சிப்பந்திகளை மட்டுமே உருவாக்கும் கைக்கூலி என அவராலே சொல்லப்பட்டவரும் வழங்கிய பாராட்டுப் பத்திரங்களை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். இவ்வளவூ காலமும் பனிப்போர் நடத்திய அந்;த ஆசிரியரின் வாழ்த்து மழையில் ஹம்மாது மாஸ்டர் நனைந்து கொண்டிருந்தார்.
அவரது கொள்கைச் சாயம் படிப்படியாக கரைந்நு கொண்டிருந்தது
வாரிஸ் மாஸ்டருக்கு தாங்கள் ஏறிவந்த வாகனத்தின் சக்கரமொன்று கழன்று கொண்டது மாதிரியான பிரமை ஏற்பட்டது.

short story

பாலகன்

'இந்த மொற அஜ்ஜிக்குப் பொக நிய்யத்து வெச்சீச்சிய... ஏடகூடமாக அவன் முன்னே ஒலித்த சத்தத்தைக் கேட்டு கழுத்தை உயர்த்தி புருவங்களை நெறித்துப் பார்த்தான்.
'இந்த மொற அஜ்ஜிக்குப் பொக நிய்யத்து வெச்சீச்சிய... அல்லாத்தாலா நாயன்ட்ட துஆக் கேளுங்கொ... என்னால எனத்தச் செரி தவறுகள் பொல்லாப்புகள் நடந்தீந்தா மன்னிச்சிக் கொளுங்கொ... நடுச் சந்தியில் அவரை எதிர்கொண்டு நின்றார் குத்துhஸ் மொதலாளி.
மெதுவாகச் சிரிக்க முனைந்த உதடுகளும் மூடி நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தன. கண்கள் குறும்பாக நர்த்தனமாடின. தொடராக உதடுகள் விரிந்து பல்லுக் கூட்டம் தெரியூமாப் போல் சிர்ப்பு உயர்ந்தது. நாலுபேர் கவனத்துக்கு சிரிப்பு காட்டியம் கூறியது. நடுச்சந்தியில் ஆங்காங்கு குழுமமாகவூம் தனியாகவூம் இருந்த அனைவர் பார்வையூம் அவர்களை நோக்கித் திரும்பின. காசிமுக்கு காது நன்றாகவே கேட்கும் என்பது அங்குற்ற எல்லோர்க்கும் தெரியூம். தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருபவர். அப்படியிருக்க சத்தம் போட்டு பேசி மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவை ஏன் வந்தது. ? தெரிந்தவர்களுக்குத் தான் அந்தக் கதை தெரியூம்.
காசிமின் கடையில் கூலிக்கு வந்தமர்ந்தவர்தான் குத்துhஸ் நானா. காசிம் தனது வியாபாரத்தை தொடர்வதில் சில சிக்கல்களை எதிர் நோக்கினார். கூலிக்கு கடையைக் கொடுத்துவிட்டு தொழிலை மாற்றிக்கொள்ள முனைந்த போது குத்துhஸ் கடையை கேட்க அவருக்கு விட்டுக் கொடுத்தார். நம்பிக்கைக்காக எந்த எழுத்தும் எழுதாமலே கடை குத்துhஸ் வசமாகியது. சுமார் பத்து வருடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது வருடமாகியூம் விட்டது. காசிமுக்கும் கடையின் அருமை உரைக்கத் தொடங்கியிருந்தது. முன்னைய வீழ்ச்சிகளிலிருந்து எழும்பி சுமாராக ஓடிக்கொண்டிருந்தவர் பிள்ளைகளின் நலனை நோக்கும் நேரம் வந்து விட்டதால் கடையை மீளப் பெற்றுக் கொள்ள நினைத்தார்.
'ஆ.. குத்துhஸ் எப்பிடியன் வாசொ... கடையில் மூக்குமுட்ட வியாபாரம் செய்து கொண்டிருந்த குத்துhஸை அனுகினான் காசிம். 'என வாசன் காசிம் நானா.. தெரியவோ அப்பிடியிப்படி ரோலாக்கி பெரட்டிக்கொண்டு ஓடிய... குத்துhஸ் அப்பிடிச் சொன்னாலும் சொந்தக் கடையொன்றும் காணிபூமியூம் வாங்குமளவூக்க காசிமின் கடைதான் பரக்கத்தோடு கைதுhக்கி நின்றது என்றால் அது மிகையல்ல.
'ம்... புள்ள குட்டிகளும் பெருத்துட்ட ... இனிக் கடயச் செய்யோனுமென்டு ஐடியா எடுத்த குத்துhஸ்...
'ஆ... குத்துhஸின் வாய் இரண்டாகப் பிளந்து நின்றது.
'பாக்கோம்.. பாக்கோம்...
குத்துhஸ் எதைத்தான் ஷபாக்கொம் என்று சொல்கின்றானோ... காசிமுக்கு புரியாத புதிராக இருந்தது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வாடகைக் காசைக் கூட்டிக் கேட்ட போதெல்லாம் இதே பதில்தான் வந்தது. அந்த கடையை அண்டி நாளொன்றுக்கு ஆயிரத்தைத் தாண்டி வாடகைக் காசு அறவிடப்படும் நிலையில் மாதமொன்றுக்கு காசிம் வாங்கிக் கொண்டிருந்தது வெறும் பத்தாயிரம் மட்டுமே. அதனையூம் மிகவூம் கஸ்டப்பட்டு மீளமீளக் காலடிக்கு அலைந்துதான் பெற வேண்டியிருந்தது.
'குத்துhஸ் நான் கடயச் செய்யோணும். இதுக்கு முந்தி நாலஞ்சி தரத்துக்கு மேல்ல ஒங்கட காதுல அத போட்டு வெச்சீச்சிய... கடையை மிக அவசரமாக திருப்பிப் பெற்று பிள்ளைகளுக்கு யாவாரம் தொழில் பழக்க காசீம் தீர்மானித்திருந்தார்.
'எனா செல்லிய காசிம்... சும்ம வெளயூhடுறௌ... யாவார சாமானுகள்... தட்டுமுட்டுச் சாமான்கள் எவ்ளோவீக்கன்... அய் மட்டுமல்ல இந்தெடத்துக்குத்தான் எங்கட சாமனும் கஸ்டமர் மாரும் பழகீச்சிய... குத்துhஸின் பேச்சு மட்டுமல்ல பாவனiயூம் காரமாகத்தான் இருந்தது.
' சரி... சரி.. ஒங்களுக்கு எவ்ளோ காலம் வேணுமன்... காசிம் இறுதியாகக் கேட்டு வைத்தார்.
'அப்பிடிச் செல்லேலுமொ காசிம் நானா... இப்பெய்க்கு நாங்க ஒழும்புறத்தப் பத்தி பேசாதங்கொ... இப்ப ஒங்களுக்கு எவளவூ வேணுமென்டு செல்லுங்கொ... கடைட பேச்ச முடிச்சிக்கொளோம்... காசீம் அந்தும் குந்துமாகிப் போனார்.
'ஓ... இம்மட்டு சொணக்கமும் கடய வெளாடிக் கொளத்தானோ... காசிமுக்கு பொத்துக் கொண்டு வந்தது. அம்மட்டுக் காலமும் தனக்குக் கீழ் சேவகம் புரிந்தவனென்ற பச்சாதாபத்தில் விட்டு வைத்தது எவ்வளவூ பெரிய தப்பு என்பதை மனசார உணரத் தொடங்கி விட்டார்.
'இந்தாங்கொ இதுல பத்திரிச்சிய... கடய ஏன்ட பேருக்குத் திருப்புங்கொ.. ஒருநாள் குத்துhஸ் இப்படிச் சொன்னான்.
'குத்துhஸ் எனத்தியன் பேசிய.. எனக்கு விச்சத் தேவீந்தா அப்பவே முப்பது நாப்பதுக்கு வித்தீப்பன்... இப்பைக்கு அறுபது எழுபது பொறும்... எப்பிடீம் நான் விச்சீல்ல... இவளவூ காலமும் ஸபூர் பண்ணினது போதும் இன்டக்கு நாளக்கே எழும்புங்கொ... காசீம் ஆத்திரம் மேலிட சொன்னான்.
'இந்தா காசீம்.. இப்ப பன்னென்டு வருசமாகீட்ட... புத்திய எனக்குத்தான் ஈச்சிய... மிச்சம் மிச்சம் பேசினா ஒன்டுமில்லாப் பெய்த்துடும்... குத்துhஸின் கணைகள் பாயத்தொடங்கின.
'எட குத்துhஸ் அல்லா றஸூல் பொறுக்கிய பேச்சொடா பேசிய... காசீமால் அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நம்பி ஏமாந்து விட்டதை உணரும் போது ஆத்திரம் மேலிட்டது. திரும்பத் திரும்ப இதே பதில்தான் கிடைத்து வந்தது. குத்துhஸின் பின்னால் நிற்கும் காவாலிகள் கூட்டம் வேறு. தங்கம் வெள்ளி யாவாரத்திலும் ஈரோட்டு யாவாரத்திலும் கால் பதித்த குத்துhஸ் இப்போது பகிரங்கமாகவே கறுப்பிச்சி கறுப்பிச்சி எடுத்து வரும் எல்லா சாமான்களையூம் குத்துhஸே எடுத்துக் கொளவூம் செய்தான். யாவாரம் தொழிலுகளுக்கு ஐந்து பத்தென்று வீசி சண்டிக் குழுவொன்றை பிடித்தும் வைத்திருத்தான். பொலிஸ் கேஸ் என்னதான் வந்தாலும் ஆளைத் தப்ப வைக்கும் பொறுப்பையூம் எடுத்துக்கொண்டிருந்தான். இவர்களின் உருக்குதல்களும் இடையிடையே காசிமை நோக்கி வரத் தொடங்கியிருந்தது. காசிம் எவ்வளவோமுயற்சித்துப் பார்த்துவிட்டார்;;;;;;;;;;;;;;;. 'போதுமான - ஆகுமான மனிசர் என்ட எல்லோரையூம் போட்டு பேசிப் பார்த்தார். நடந்தது ஒன்றுமில்லை. மாறாக துhது சென்றவர்கள் அவரின் துhதுவராகவே வரத் தொடங்கினர். மட்டுமல்ல ஷதாரத்த எடுத்துக்கொண்டு குடுக்கியதுதான் புத்தி என்று சொல்லாமல் சொன்னனர். குத்துhஸின் சாப்பாட்டை தின்றவர் யாவரும் அவருக்கு தலைவணங்கி நிற்கவேண்டிய தேவையூடைய வர்களாயிற்றே... புள்ளகள இட்டுண்டாக்கிக் கொள தொழில் பழக்கப் பார்த்தவரின் கதை இப்படியாயிற்று. தற்போது புள்ளகளும் தாரெவரதோ கடைகளில் கூலிகளாக...
இன்றைக்கு பத்துப்பதினொரு வரு~ங்களாகியூம் விட்டது.
ரு கல்லில் நான்கைந்து மாங்காய் பறிக்கும் பேர்வழி குத்துhஸ் கலவர சந்தர்ப்பத்தில் ஒன்றொன்றாக வந்த தங்கக் குவியல்கள் குத்துhஸை இந்த உயரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது. இவருக்கென துதிமாலை பாடும் ஒரு குழுவூம் இருக்கவே செய்தது. அவரில்லாமல் ஊரில் எந்த விடயமும் நடந்துவிடக் கூடாது என்ற அக்கரை அவர்களுக்கு. அவருக்கொன்றென்றால் ஒரு நுhறு பேர் கத்தி பொல்லுகளுடன் வரத் தயார். மொத்தத்தில் ஒருவித மேதாவித்தனத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்.
'அஜ்ஜிக்குப் பொகப் போறாம் அஜ்ஜிக்கு... காசீம் உள்ளத்தளவில் கண்ணீர் வடித்தார். 'எனா காசீம் நானா... குத்துhஸூ ஹாஜியாராகப் பொறாமொ.. அவனுக்கு ஹாஜி மீட்டராகத்தான் ஏலும்... மத்த மனிசரட அநந்திரத்த புழுங்கிக் கொண்டுட்டு இப்ப பாவம் கழிச்சப் பொகவாயீச்சும்... மம்மிருபான் சொன்னது நாலு பேருக்கும் கேட்கத்தான் செய்தது. ஷஷஎத்துணப் பேரட ஒஜீபணத்த தட்டிப் பறிச்சவணன். அவன்ட தம்பி தங்கச்சிமாரே தின்னுறத்துக்கொரு ஒஜீபணம் இல்லாம தடமாறிய.. சூத்துப் பெருத்த முதுகுப் பசியாக்களுக்கு புரியாணி தின்னக் குடுக்கச் செல்லேக்கி ஒரு பொகுத்துத் தங்கச்சிக்கு எந்த அழைப்பும் இல்ல... மம்மிருபான் ஆத்தீரம் தீரு மட்டும் கத்தினான்.
உண்மைதான் காசீம் மட்டுமா... இன்னும் எத்தனையோ பேர் அடுத்தடுத்து லிஸ்டில் இருக்கவே செய்தனர். ஷஷஎனாடா அந்த அத்துக் குத்துhஸூ அஜ்ஜிக்குப் பொகப் போறாமொ... அம்புடட்டே அந்த நஸரானிட்ட நாலு கேள்வி கேட்கந் தனைம் ஏன்ட நாக்குத் துடிச்சிய... காசிமின் உம்மா அந்தத் தள்ளாடும் வயதிலும் உரிமைக்காக விண்ணப்பம் செய்து கொண்டே இருந்தார்... வீட்டிலும் காசீமால் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை. காசிமுக்கு அந்தக் கடை வாப்பாவிடமிருந்து கிடைத்த ஒரே முதுசொம். இன்றிருந்தால் அது ஒரு கோடி பொறும்... ஷஷசெய்ததெல்லம் செஞ்சுட்டு பொல்லாப்பு நடந்தீந்தாலா... மனிசரால் எப்படியூம் நடக்கமுடியூம் என்பதற்கு அத்துக் குத்துhஸூ நல்ல உதாரணம் என நினைத்துக்கொண்டான். இ~hத் தொழுகைக்குச் சென்ற காசிமுக்கு உள்ளம் தொழுகையில் லயிக்கவில்லை. தொழுகையின் பின்னான விN~ட பயானிலும் கூட லயிக்கவில்லை. ஷஷபுனிதமான மாசத்தில புனிதமான கடம ஹஜ்ஜி... இல்லாட ஆலயத்தஇ நபியவங்கட காலடிபட்ட புனித மண்ண காணப் போக எல்லாருக்கும் நஸீபாகீல்ல... அல்லாத்தாலா நாயன் பரக்கத்துச் செஞ்ச செல நல்ல மனிசருக்குத்தான் அந்தப் பார்க்கியம் கெடச்சிய... எங்களொங்களுகளுக்கும் இந்தப் பாக்கியத்த அல்லா நஸீபாக்கோணும்... அஜ்ஜிப் பாக்கியம் கெடச்சவங்க அல்லாவெடத்தில பெரிய பாக்கியம் செஞ்சவங்க... அவங்க நாளைப் பின்னக்கு அன்று பொறந்த பாலகனப் போல வரப் போறாங்க... அவங்கட எந்தப் பாவத்தயூம் அல்லா மிச்சம் வெச்ச மாட்டான்... எல்லம் கழுவியூட்டுடுவான்... அதனால அவங்க எங்கள்ட்ட பாவ மன்னிப்பக் கேட்ட நாங்க மன்னிச்சுடோணும்... காசிமுக்கு பொறுக்கவில்லை. மஜ்லிசிலிருந்து எழும்பியே விட்டார்... அதற்கு மேலும் எப்படித்தான் இருக்க முடியூம். ஷஷஇந்த மொய்லவி எல்லாரையூம் பாலகனாக்கப் போற... அத்துக் குத்துhஸ்ஸட வாலெனா... அஜ்ஜூக் காலத்துல மட்டும்தான் ஊர் ஊரா சுத்தி வார... எப்பிடிச்சரி ஒரு பத்துப் பேர புடிச்சி குரூப்புக்கு குடுத்துட்டு அவரும் அஜ்ஜிக்குப் போற... இனியிவரு எப்பிடியன் தௌபாச் செய்த மய்ரிய மக்களுக்கு எடுத்துச் செல்லிய... ஷஷஓ மச்சான்... மனிசருக்கு செஞ்ச குத்தத்த குறிப்பிட்ட மனிசரு மன்னிச்சங்காணைம் அல்லா மன்னிச்சியல்ல... பள்ளி முன்றலில் கூடியிருந்த இளசுகளின் விமர்சனப் பார்வை அது. காசிமுக்கு வெள்ளணையிலீந்து குழப்பமாக இருந்த சூழ்நிலை தீர்ந்து விட்டிருந்தது. ஷஷஎனா காசீம்... இன்டக்கு தாரெவரு அஜ்ஜிக்கு பொகோணுமென்ட விவஸ்தயே இல்லாப் பெய்த்துட்ட... எல்லம் பொறசித்தத்துக்குத்தான்... அன்னங்க தெல்காவத்த கணிய ஒனேத் தெரீம்... ஊட்டுப் பொறத்தால பொடக்கல்லேல ஈந்த காணி... பன்னென்டு பேர்ச்சஸ் காணீல இப்பைக்கு ஆறேழு பேர்ச்சஸ்தான் மிச்சம்... ஒவ்வொரு நாளும் வேலி நடக்கியென்டு கேள்வி... இதுகளச் செல்லப் போனா இனி பீஸப+ருதான் மம்ம இப்றாகீம் இயலாமையில் தோயூம்போதுஇ காசீம் காக்காவூம் செய்வதறியாது நின்றார். இயலாமையால் அடக்கி.. வாயைக் கையை அடக்குவதே குத்துhஸின் வழிமுறையாக இருந்து வந்தது. இதற்காகவென்றே வர்ச்சஸ் கேஸ்களில் பொலிஸில் மாட்டிப் படுபவரை விடுதலை செய்து கொண்டே இருந்தார். அந்தளவூக்கு பொலிஸிலும் அவருக்கு செல்வாக்கு வளர்ந்திருந்தது. இனிக் கேட்கவா வேண்டும்... இதேவேளை குத்துhஸின் வீடுஇ ஸலாம் சொல்ல வருபவர்களால் நிறைந்திருந்தது. இப்போதே பாலகனாகிவிட்ட நினைப்பில் மிதந்தார் காசீம். வீட்டில் தடல் புடலான ஏற்பாடு. அணிஅணியாக வருபவர்களுக்கு பலவித ஏற்பாடுகள்... ஹாஜிமாரின் துஆ பரக்கத்தைப் பெறுவதில் எல்லா மக்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது. இப்போதே பாலகனாகிவிட்ட நினைப்பில் நெஞ்சை இடித்து இடித்து கட்டிப்பிடித்து செய்து முஸாபஹாவூம் முஆனகாவூம் செய்து கொண்டீருந்தார்; குத்துhஸூ. ஒருவர் போக ஒருவர் என ஸலாம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸயீது மாஸ்டரும் ராசிக் கிராம சேவகரும் ஸலாம் கொடுத்து முடிந்து ஒருவாறாக வெளியேறினர்.
ஷஷவராமல் ஏலாவென்டத்துக்காக வந்தத்துக் கெனேன் மாஸ்டர் இவரோட ஸலாம் செல்லியது அவர்ட ஜராவகள எங்கட மேல்ல ப+சிக்கொணு வாரத்துக்குச் சமம் பெய்யோ நான் செல்லியது...
ஷஷஇல்லாட்டி இல்லாட்டி... இங்கயே சுத்தமில்லாமப் போனா பெய்ட்டு வரச்செல்லக்கி இஞ்சம் நாலஞ்சி படி சைத்தான் கொணம் கூடித்தான் வரப்போற... அன்ன பாருங்கொ அந்த மொம்ம ரசீது ஹாஜியார் எவ்ளோ பஸீந்தா குடும்பத்துக்கும் கெழவழிகளுக்கும் தேவையானதெல்லம் முடிச்சிட்டு பெய்ட்டு வந்தன்... இப்ப எவ்ளோ பஸிந்தா அமல் இபாதத்துகளோட இருச்சியாரு...
''ஓ... மெய்தான் அவருக்கு இரிச்சிய சொத்து பத்துக்கு ஒவ்வொரு மொறயூம் பொகேலும்... ஆனா ஒவ்வொரு மொறயூம் ஏழ எளியதுகள்ட ஊட்டு வி~யம்இ கடன் கொழப்பமுகள்இ யாவார ஒதவிகள்இகொமரு காரியங்க என்டு எத்துன செய்தாரு... அவங்க தான் ஒருநாளக்காலும் ஹாஜிமாரு... இரண்டு பேரும் பள்ளிக்குக் கரையேறி ஒருமுறை ஸூன்னத்துத் தொழுதுகொண்டனர். தீமைக்குத் துணை போவதும் தீமையே செய்து திருந்த மனமில்லாதவனோடு ஸலாம் சொல்லிக் கொள்வதும் ஒன்றென நினைத்துக் கொண்டனர் போலும்.