Wednesday, April 1, 2009

nirashai

நிராசை

'எந்தத் துன்பம் வந்தாலும் தாங்குற நெஞ்சம் எங்களிட்டீக்கி... நாங்க என்னத்துக்கு பயப்புடோணும்... உண்ம எங்கட கையில இருக்குமென்டா வெத்தி நிச்சயம்மதான்... ஹம்மாது மாஸ்டர் வீராவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
சுற்றிச் சு+ழ நண்பர்கள் வட்டம் நிறைந்து... 'எங்க@த் தெரீம் இந்தக் கோப்பறட்டி மனேஜர் மக்கள ஏமாத்துறவர்... எத்தினயோ தடவ பாத்திட்டம்... இதுக்கொரு முடிவூ காணாட்டி எங்கடூரு மக்கள் பாரப்பட்ட அநியாயத்துல வூழுந்துடுவாங்க...
'செரியாச் சொன்னீங்க மாஸ்டர்... எங்கடூராக்கள ஏய்ச்சிப் பொழச்சேலுமென்டு தெரிஞ்சிதான் இவ்ளோ கொழப்பத்தேம் போடுறான்... நாபிஸ் மாஸ்டர் ஆமோதித்தார்.
'இதுக்கிப்ப நாங்க அவசரமா எடுக்கோண்டிய நடவடிக்க எனத்தியன் மாஸ்டர்... வாரிஸ் மாஸ்டர் ஆவலுடன் கேட்டார் நரம்புகளிலே புடைத்தோடும் இரத்தத்தில் வேகமான வளர்ச்சி கண்டுவிட்டதான பிரமை.
ஹம்மாது மாஸ்டர் இந்த ஒதுக்குப் புறமாக உள்ள ஊருக்கு வந்ததே புண்ணியம் என வாரிஸ் மாஸ்டர் மட்டுமல்ல எல்லோரும்தான் நினைத்துக் கொண்டனர். வாரிஸ் ஸேரும் அதே ஊரைச் சேர்ந்தவரல்ல. அயல் கிராமத்திலிருந்து கலியாணப் பாத்தியதையால் அங்கு நிலை கொண்டவர்.
மாலிக் மாஸ்டரும் அவ்வாறுதான். படித்துக் கொடுக்க வந்த இடத்தில் யௌவன யோகம் கைகூடிவிட்டது. நாபிஸ் மாஸ்டர் மட்டும்தான் அங்கு பிறந்து வளர்ந்தவராக இருந்தார். ஹம்மாது மாஸ்டரின் வருகை அவர்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரே பாடசாலை ஆசிரியர்கள் என்ற வகையில் சேர்ந்து சேர்ந்து கதைத்துப் பழகியவர்கள் ஹம்மாது மாஸ்டரின் கூட்டால் புதுச் சிந்தனைகளை நுகரத் தொடங்கினர். பாடசாலை மட்டுமன்றி ஊர் விடயங்களில் கூட அவர்கள் கவனம் மெதுமெதுவாக வியாபித்தது. இயல்பிலேயே சமூக உணர்வூ கொண்ட உள்ளங்கள் ஒன்று சேர்ந்து கொண்டதில் வியப்பேதுமில்லை. கோப்பரேட்டி மனேஜர் விடயமும் அப்படித்தான். கலப்படம்... பதுக்கல்... எடைகுறைவூ... எத்தனையோ விடயங்கள்...
அவர்கள் முன்னின்று இறங்கிய எந்த விடயமும் தோல்வி கண்டதில்லை. பாடசாலையில் புடம்போட்டு எடுத்த... அல்ல வடித்தெடுத்த ஒரு குழு எப்போதும் அவர்களது நல்ல விடயங்களுக்குத் துணையாக நிற்கவே செய்தனர். கல்வியின் பக்கமும் நேர்மையின் பக்கமும் மாணவர்களைத் திருப்பும் போது எண்ணிலடங்கா தடைகள் வரத்தான் செய்தன. அதுவூம் கல்வி கற்றஇ ஊரை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சிலரின் துhண்டுதலால்தான் இத்தனை தடைகளும் முன்னெடுக்கப்பட்டன என்பது பகிரங்க இரகசியமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு எக்கேடு கெட்டும் போ எனக் கூறத்தயாரான பெரிய புள்ளிகளின் ஏஜென்டுகள் பாடசாலைக்குள்ளேயே கூடாரம் அடித்திருந்தனர். படித்து வரும் மொட்டுக்கள் ஒவ்வொரு காலமும் கருகி இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போன கதைகளைக் கேட்கும் போது பெரும் கவலை குடி கொள்ளும்.
பென்னம் பெரிய ஊர்... மாணவர்கள் கூடின பாடசாலை... இப்பாடசாலைக்கு கால்நுhற்றாண்டுஇ அரை நுhற்றாண்டுக்குப் பின்னால் ஆரம்பித்தத பாடசாலைகள் குறிப்பிடத்தக்க பல்கலை;ககழக மாணவர்களைஇ கல்வியியலாளர்களை உருவாக்கியிருக்கும் போது இப்பாடசாலை மட்டும் ஏன் ஆமை வேகத்தில் அல்ல நத்தை வேகத்தில் நகர வேண்டும். ஹம்மாது மாஸ்டர் இந்த உதாரணங்களை எடுத்து நிரற் படுத்தி சொல்லும் போது எல்லொரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டு நிற்க வைக்கும் பேச்சாற்றலைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடிக்கும் பல தடைகள் வரத்தான் செய்தது.
'ஒங்களுக்கெனத்துக்கன் தேவில்லாத வேல... மத்தவங்கள மய்ரி வாயேம் சு+த்தேம் பொத்திக்கொண்டு இரிச்ச வேண்டிய தானே... ஹம்மாது மாஸ்டரின் மனைவி குத்திக் காட்டுவார்
அவரை நன்றாகவே தெரிந்துஇ உணர்ந்து அவரின் மாணவியாக இருந்து மனைவியானவர். குழப்பத்துக்காகிலும் அப்பிடிச் சொல்வதை அவர் விரும்பவில்லை.
'ஓ.. ஒங்கடாக்களப் போல கொள்கில்லாத மனிசரா வாழியத்தவிடத் தெறம் மௌத்தாப் போறது... சு+டாகப் பதில் வந்து விழும்.
அவரும் நண்பர்களும் எவ்வளவோதான் முயன்று பார்த்தனர். எப்படியாவது கடைச் சிப்பந்திகளை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாக பாடசாலை இருப்பதிலிருந்து மாற்றி நல்ல ஆரோக்கியமான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்க எடுத்த முயற்சிகள் பெருமளவூக்குத் தோல்விகளையே சந்தித்தன. ஓரளவூக்குத் தப்பி ஒன்றிரண்டு பேர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.
அன்று கோப்பரட்டி மனேஜர் தெரிவூ வெகு உக்கிரமாக நடந்து முடிந்தது. தாங்கள் நினைத்த இடத்துக்கு வர முடியாமல் போனாலும் திருப்தி காணக்கூடிய நிர்வாகம் ஒன்று சரி வந்ததே என பெருமிதம் அடைந்து கொள்ள முடிந்தது.
எதுதான் சரி வந்தபோதும் மாணவர்ளின் கல்வி விருத்தயில் மட்டுமே தொடராக பின்னோக்கிச் செல்வதற்கான காரணம் தான் எவருக்கும் பிடிபடவில்லை. படித்து வருபவன் திடீரென மறைந்து விடுவான். எப்பவாவாது ரோட்டில் கண்டால்
'ஊட்டுல க~;டம் ஸேர்.. வாப்பா கடக்கிப் பொகச் சென்ன... கபீர் ஹாஜியார்ட கடைல நிச்சியன்... இப்படித் தான் அவரைச் சந்திக்கும் மாணவர்கள் அவருக்குத் தந்து கொண்டிருந்த பதில்..
'என செய்யவன் ஸேர்... நாங்களும் எவளவூ முயற்சி செஞ்சன்... இந்த ஊரானுகள்ல பெருமளவான ஆக்களுக்கு எனசரி ஒரு சாபம் பட்டீச்சும்... இல்லாட்டி ஆயிரத்தஞ்ஞாறுக்கும் மேற்படட மாணவர் தொகயீந்தும் ஒரு முன்னேத்தமுமில்ல.... பாயிஸ் மாஸ்டர் மற்றவர்களை சாந்தப் படுத்துவார்.
'ஆனா புள்ளகள்ட்ட யாதாமொரு குத்தமில்ல.. நல்ல தெறம ஈக்கி... மத்தப் புள்ளகள வெட அவசரமா வெளங்கிக் கொளுறாங்க.. சொல்லுற மய்ரி செயற்படுவாங்க... பத்துப் பதினொன்டு என்டு வரச்செல்லத்தான் எல்லமே கொழம்பிப் போற...வாரிஸ் மாஸ்டரின் ஆதங்கம் வெளிப்படும்.
'ஓ.. என சரி ஒரு கொஸ்ஸ இரிச்சத்தான் செய்த... ஒரு எல்லக்கங்கால சில புள்ளகளால பெய்த்துக் கொளேலாம இரிக்கிஇ பிரச்சின வந்து... அந்தப் புள்ளகள் புழுந்து பெய்த்திடியாங்க.. இருபது வருட உழைப்பில் விரல் விட்டு எண்ணத்தக்க ரெண்டு மூணு பேர் மட்;டுமே நியாயாமான பொதுச் சிந்தனையாளர்களாக உருவெடுத்திருந்தனர்.
'எனைஞ்சாலும் எங்கட பேரு வழங்க இந்த ரெணு மூணுபேரும்தான்... மாலிக் மாஸ்டர் அவர்களைக் காட்டுவார். 'என ரெனு மூனு பேரன்... ஒங்களுகள்ட்ட படிச்சாக்கள் எத்தினீச்சியன்... எங்கடெங்கட ஆக்களீக்கி... பொறத்தி யாக்களீக்கி... அவங்கவங்க ஒரொரு நல்ல கொள்கைல ஈச்சியாங்க... ஹம்மாது மாஸ்டரின் மனைவி ஏதொ ஒன்றை நினைத்தவராக கூறுவார்.
'ஆ... ஒங்கட தாய் புள்ளகள செல்ல வாரொ... அவங்களுக்கொரு கொள்க ஈச்சியா... எனக்கு இவ்ளோ காலமும் தெரியாப் பெய்த்தேன்... அவங்கள்ட்ட சம்பரிச்சி அடுக்கி வெச்சிய கொள்கயென்டா ஈச்சும் தான்... நறுக்குத் தெரித்தாற் போல் பேசுவார். இந்தப் பயணத்தில் ஒரு சிலபல கோபதாபங்களை ஜீரணித்துக்கொள வேண்டித்தான் வந்தது. காரணமில்லாமலே கோபத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்தனர். இப்படியிருந்த போதுதான் வாரிஸ் மாஸ்டருக்கு இந்தச் செய்தி கிட்டியது. மாலிக் மாஸ்டரைத் தேடிச் சென்றபோது அவரும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். நாபிஸ் மாஸ்டர் வேறு உட்கார்ந்திருந்தார்.
'மெய்யாமோ செய்தி... வாரிஸ் மாஸ்டர் கேட்டார். 'இப்பதான் கேள்விப்பட்ட... இப்பிடியொரு நாளும் நெனச்செல்லேனா... மாலிக் மாஸ்டரின் புருவங்கள் சுருங்கின.
'இப்பிடித்தான் தோணியூம்; ஒரு நாளக்கி கரத்தேல போறாமெனா.... நாபிஸ் மாஸ்டர் பொருட்படுத்தாது சொன்னார்;. 'எனத்துக்கும் அவர்;ட்ட கேட்டுப் பாக்கோம்... வாரிஸ் மாஸ்டருக்கு இன்னும் உறுதியில்லை.
'அவருக்கிப்ப வயஸூ... நாலு பொகத்தாலயூம் தாக்கம் வரச்செல்லக்கி எல்லாப் பிடிமானமும் உடுபடுகியெனா... அப்பிடியொரு சந்தர்ப்பத்த உட்டுடப் படாது என்டு குலுஸூ டீச்சர் செல்லீக்கிம்.... மாலிக் மாஸ்டருக்கு நெஞ்சு கொதித்தது. 'ஓ... இப்ப அவருக்கு பழசெல்லம் மறந்து... காணல்லயோ இப்ப முந்திய மய்ரி கொள்க பேசியோம் இல்லேனா.. வாரிஸ் மாஸ்டருக்கு ஜெதுபு ஏறியது.
'நாங்க மேடேனான... அவரு செல்லியெலியன் நாங்க அவங்களோட கொய்ச்சிக் கொன்ட... நாங்க வந்த காலத்துல எங்களோட உசிரு மய்ரி ஈந்தாக்களெனா... பொறகு பொறகு ஹம்மாது மாஸ்டர்ட கச்சீல சேரப் போனதால எங்களுக்கு எவ்ளோ இழப்பு வந்த... ஆனா அவரு மட்டும் சந்தர்ப்பங்கள தவற உடல்ல...
'ஓ... ஓ... காணல்லயோ இந்த ஊட்டுக் கடன் குடுக்கிய நேரம் அவரு அவர்ட பொன்ஜாதிய பகாவோட அனுப்பி எப்பிடிச் சரி பாஸ் பண்ணிக்கொண்ட... கடசிக்கி அதுலயூம் எங்களுக்குத் தான் இழப்பு... சரி சரி இப்ப எனத்தியன் செய்த... வாரிஸ் மாஸ்டர் கேட்டார். 'என செய்யவன்... சும்ம பெய்த்துப் பாக்கோம்... மூவரும் சேர்ந்து பாடசாலைப் பக்கம் தலை நீட்டினர். பெனர் ஒன்று தொங்கியது...
'அகில இலங்கை ஜே.பி. பட்டம் பெற்ற ஹம்மாது மாஸ்டரை வாழ்த்துகிறௌம்... 'ம்... ஏற்பாடு பெரிசுதான்... வாரிஸ் மாஸ்டர் புருவங்களை நௌpத்துக் கொண்டார். 'அந்த ஹாஜியார்ட ஊட்டுச் சாப்பாட்ட தின்டா இனி ஆள் மவ்த்துத்தான். அவரு செல்லியபடிதான் நடக்கோண்டி வரும்.... என்று குறித்துக் காட்டிய ஹாஜியார்தான் ஹம்மாது மாஸ்டருக்கு மாலை அணிவித்தார். அவரது மாலை மட்டும் கொள்கையின் துhக்குக் கயிறாக விளங்காதது ஏனோ என மாலிக் மாஸ்டர் சிந்தித்துக் கொண்டார்.
ஊரையே துhக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்ட கோப்பரட்டி மனேஜரும் பாடசாலையிலிருந்து கடைச்சிப்பந்திகளை மட்டுமே உருவாக்கும் கைக்கூலி என அவராலே சொல்லப்பட்டவரும் வழங்கிய பாராட்டுப் பத்திரங்களை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். இவ்வளவூ காலமும் பனிப்போர் நடத்திய அந்;த ஆசிரியரின் வாழ்த்து மழையில் ஹம்மாது மாஸ்டர் நனைந்து கொண்டிருந்தார்.
அவரது கொள்கைச் சாயம் படிப்படியாக கரைந்நு கொண்டிருந்தது
வாரிஸ் மாஸ்டருக்கு தாங்கள் ஏறிவந்த வாகனத்தின் சக்கரமொன்று கழன்று கொண்டது மாதிரியான பிரமை ஏற்பட்டது.

No comments:

Post a Comment